முகத்தின் அழகை கெடுக்கும் முடியை வீட்டிலேயே சரி செய்யலாம்!

முகத்தின் அழகை கெடுக்கும் முடியை வீட்டிலேயே சரி செய்யலாம்!

முகத்தில்(Face Hair) முடி வளர்வது பெண்களின் அழகை கெடுக்கின்றது என தவறான எண்ணம் பெண்களிடையே அதிகம் இருக்கின்றது. அப்படி இல்லை முகத்தில்(Face Hair) முடி இருப்பது ஒரு வித பாதுகாப்பு கவசம் போன்றது பெண்களின் சருமத்திற்கு. வெயிலால் ஏற்படும் புற ஊதா கதிர்களின் தாக்கத்தை முகத்தின் முடி சற்று குறைத்து பாதுகாக்கின்றது. ஆனால் போதுமான முடி இருந்தால் சரி சில பெண்களுக்கு முகத்தில்(Face Hair) அதிகப்படியான முடி இருக்கும். இது அவர்களின் அழகையே கெடுத்து விடுகின்றது. மிகவும் அடர்ந்து இருந்தால் முகத்தின் அழகை கெடுப்பதுடன் கருமையாக காட்டும்.


Also Read: முகத்தில் உள்ள முடியை நீக்க உதவும் சில பொருட்கள் (Methods Of Removing Facial Hair)


அதிகமான முடி உள்ளவர்கள் முகத்தை எப்படி பராமரிப்பது என்பது மிகவும் குழப்பமே. எல்லா நாளும் பார்லர் செல்ல முடியாது. வீட்டிலேயே இதனை எப்படி சரி செய்யலாம் என்பதை இங்கு பார்க்கலாம்.


  • முகத்தில்(Face Hair) உள்ள தேவையற்ற முடிகளை நீக்கி அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

  • பெண்கள் முகத்தில்(Face Hair) முளைத்திருக்கும் முடிகளை நீக்க குப்பைமேனி இலை, வேப்பங் கொழுந்து, விரலி மஞ்சள் மூன்றையும் அரைத்து இரவில் படுக்கைக்கு செல்லும் முன் முகத்தில்(Face Hair) தடவி வந்தால் தேவையற்ற ரோமங்கள் உதிர்ந்துவிடும்.

  • கடலை மாவில், சிறிது மஞ்சள் மற்றும் கடுகு எண்ணெய் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வந்தால், முகத்தில்(Face Hair) வளரும் தேவையற்ற முடிகள் நீங்குவதோடு, சருமத்தை பொலிவாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.


Also Read About இரட்டை கன்னம் என்றால் என்ன


facecare003


கண்களை சுற்றி கருவளையமா? கவலை வேண்டாம்... வீட்டிலேயே இதை செய்யலாம்!


  • முகத்தில்(Face Hair) உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில்(Face Hair) தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.

  • கடினமாக இருக்கும் தேனைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்தால், முகத்தில்(Face Hair) வளரும் முடிகளை தடுக்கலாம். வேண்டுமெனில், தேனுடன் சிறிது எலுமிச்சை சாற்றினையும் சேர்த்து செய்யலாம்.

  • சர்க்கரையை நீரில் கலந்து, அதனைக் கொண்டு முகத்தை ஸ்கரப் செய்தால், அது முகத்தில்(Face Hair) வளரும் முடிகளை அகற்றும்.

  • ஒரு டீஸ்பூன் சோள மாவில், 1 டீஸ்பூன் சர்க்கரை மற்றும் முட்டையின் வெள்ளை கரு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, அதனை முகத்தில்(Face Hair) தடவி, உலர விட்டு கழுவினால், சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகள் நீங்குவதோடு, இறந்த செல்களும் வெளியேறிவிடும்.


Also Read சுருள் முடியை கவனித்துக்கொள்வது எப்படி


facecare004


கோடையில் அழுது வடியும் எண்ணெய் பசை சருமத்தை பராமரிப்பதற்கான எளிய டிப்ஸ்!


  • அக்காலத்தில் மக்கள் தினமும் மஞ்சள் தேய்த்து குளிப்பதனால் தான், அவர்களது சருமத்தில் முடிகளின்றி, சருமம் பட்டுப்போன்று இருந்தது. எனவே தினமும் இதனை தடவி குளித்து வந்தால், முடிகளின் வளர்ச்சி குறைவதோடு, முடிகளும் நீங்கிவிடும்.

  • பிரட்டை பாலில் ஊற வைத்து, அதனை முகத்தில்(Face Hair) சிறிது நேரம் தேய்க்க வேண்டும். இதனால் முகத்தில்(Face Hair) உள்ள முடி நீங்குவதோடு, முகம் பொலிவோடு இருக்கும்.


இதை தொடர்ந்து வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை வீட்டில் செய்து வந்தால் நல்ல பலனை பெறலாம். முகத்தில் இருக்கும் முடி வேரோடு வளர்வது தடுக்கப் படுவதுடன் முகமும் நல்ல பொழிவாக இருக்கும்.


வெயிலால் முகத்தில் ஏற்படும் கருமையை காணாமல் ஆக்கும் வீட்டு வைத்தியங்கள்!


பட ஆதாரம் - gifskey, pexels, pixabay, Youtube


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo