logo
ADVERTISEMENT
home / Astrology
மிக கவனமாக இருக்க வேண்டிய அந்த ஐந்து ராசிகளில் உங்கள் ராசியும் இருக்கிறதா ! சரிபாருங்கள் ராசி பலனை !

மிக கவனமாக இருக்க வேண்டிய அந்த ஐந்து ராசிகளில் உங்கள் ராசியும் இருக்கிறதா ! சரிபாருங்கள் ராசி பலனை !

இன்று புதன் கிழமை உத்திர நட்சத்திரம் ஏகாதசி திதி வைகாசி மாதம் ஒன்றாம் தேதி. இன்றைய நாளில் உங்கள் ராசிபலன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

மேஷம்

ஒரு புதிய முயற்சியுடன் இன்றைய வேலையை நீங்கள் தொடங்கலாம். உங்களது முயற்சியை பார்த்து அனேகர் உங்களை பின்பற்றி வருவார்கள். கடந்த கால கசப்பான அனுபவங்களை திரும்பி பார்க்க வேண்டாம். சமூக வாழ்க்கை நன்றாக இருக்கும். நண்பர்களுடன் நேரம் செலவிடுங்கள்.

ரிஷபம்

சக பணியாளர்கள் மற்றும் வாடிக்ககையாளர்கள் காரணமாக உங்கள் பணியில் மிகப்பெரிய தாமதத்தை இன்று நீ்ங்கள் உணரலாம். அதிகமான மன அழுத்தத்தில் இன்று இருப்பீர்கள். ஆனால் இந்த மாதிரியான நேரத்தில் தான் நீங்கள் பணியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

ADVERTISEMENT

மிதுனம்

வேலை மற்றும் தனிப்பட்ட விஷயங்கள் இரண்டிலும் அதிக கவனம் செலுத்த வேண்டிய நாள் இது. புதிய வாடிக்ககையாளர்கள் உங்களை சந்திக்க இன்று வருகின்றனர். வேலையில் இருக்கும் அதிக மன அழுத்தத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டாம். குடும்ப உறுப்பினர்களுடன் விழாவில் கலந்துக்கொண்ட மகிழ்ச்சியாக இருங்கள்.

கடகம்

வேலை நிலையானதாக இருக்கும், ஆனால் நீங்கள் மனதளவில் பாதிக்கப்படுவதால் பணியில் கவனம் செலுத்த முடியாது. நீங்கள் தீர்மானிக்கிரவராக இருக்க வேண்டும், ஆனால் இன்று எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டாம். குடும்ப உறுப்பினர்களுடனான தொடர்பு கொள்ளுங்கள். நண்பர்களிடமிருந்து கடைசி நேர திட்டமிடலை எதிர்பார்க்கலாம்.

சிம்மம்

புதிய யோசனைகள் அமல்படுத்தப்படும் பணியில் ஒரு நிலையான நாள். உங்களைச் சுற்றி இருக்கும் மக்கள் உங்கள் இடங்களைக் கொடுத்து, உங்கள் முடிவுகளை நம்புவார்கள். உங்கள் சொந்த சுயத்தை மேலும் நம்புவார்கள். நேரத்திற்கு சாப்பிடுங்கள். குடும்பத்துடன் அதிக தரமான நேரத்தை செலவிடுங்கள். பழைய நண்பர்களை நீங்கள் தொடர்புகொள்வீர்கள், சமூக விஷயங்களில் பணி விஷயங்களைப் பற்றி விவாதிக்கப்படும்.

கன்னி

வேலையில் ஒரு நிலையான நாள், ஆனால் சந்திப்பில் சிறிது தாமதங்கள் அல்லது ரத்து செய்யப்படும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும், இன்றே முடிவுகளை எதிர்பார்க்க வேண்டாம். நேரத்திற்கு சாப்பிடுங்கள். குடும்ப வாழ்க்கை நிலையானதாக இருக்கும், ஆனால் மக்கள் சுறுசுறுப்பாக இருப்பதால் நீங்கள் புறக்கணிக்கப்படுவீர்கள். சமூக வாழ்க்கையானது வேலையில் தீவிரமான நாள் காரணமாக மெதுவாக இருக்கும்.

ADVERTISEMENT

துலாம்

உற்பத்தியை அதிகரிக்க முயற்சி எடுக்கவேண்டிய நாள். கடந்த நாட்களின் அட்டவணையை திரும்பி பார்க்க வேண்டும். அதிலிருந்து தேவையான குறிப்புகள் எடுப்பதல் மூலம் நல்ல திட்டமிடலை மேற்கொள்ளலாம். குடும்ப உறுப்பினர்களால் சிறு சிறு மனகசப்பு ஏற்படலாம். கவனத்துடன் கையாள்வது நல்லது.

விருச்சிகம்

பேச்சு வார்த்தை காரணமாக பணியில் சில சில பிரச்சணைகள் ஏற்படும். அனைவருடனும் கலந்து ஆலோசிக்க வேண்டிய நேரம் இது. ஆனாலும் திடமனதாய் இருங்கள். தெளிவுடன் பிரச்சணைகளை கையாளுங்கள். குடும்ப உறுப்பினர்களிடம் கோபத்தை காட்ட வேண்டாம்.

தனுசு

வேலையில் சக பணியாளர்களால் அதிக மன வேதணை அடைவீர்கள். உங்களை பற்றி தவறாக பேசும் மக்களை நினைத்து கவலைப்பட வேண்டாம். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். தனிமையில் நேரத்தை செலவிடுங்கள். இரவில் நல்ல தூக்கத்தை நாடுங்கள்.

மகரம்

வேலையில் மற்றவரின் பிரச்சணையில் நீங்கள் மாட்டியுள்ளீர்கள். தேவையில்லாத தருணங்களிள் பேச வேண்டாம். கவனமாகவும் தைரியமாகவும் இருப்பது அவசியம். குடும்ப உறுப்பினர்களின் மனநிலையை புரிந்து செயல்படுவது அவசியம்.

ADVERTISEMENT

கும்பம்

வேலையில் உங்களுக்கு அதிகமான பொருப்புகள் மற்றும் கடமைகள் கட்டமைக்கப்படுகின்றன. முடிவை எதிர்பார்த்து வேலை செய்ய வேண்டாம். கோபமான மக்களை விட்டு விலகியிருங்கள். குடும்ப வாழ்க்கையும் சமூக வாழ்க்கையும் சரிசமமாக இருக்கும். நேரத்திற்கு சாப்பிடுங்கள்.

மீனம்

பிற பணியாளர்களிடமிருந்து வரும் தாமதங்களிலிருந்து ஒரு நல்ல முடிவு கிடைக்கும். எதர்க்கும் தயாராக இருங்கள். பணி சுமை அதிகமாக இருக்கும். முதுகு மற்றும் கண்களை பார்த்துக்கொள்ளுங்கள். குடும்பத்தின் முக்கியமான உறுப்பினர் உங்களுக்கு ஆதரவு தெரிவிக்கலாம்.

ஜோதிட பலன்களை கணித்தவர் astro ஆஷா ஷா.

—                       

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                  

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

14 May 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT