புதிய ப்ரொஜெக்ட்களை கைப்பற்ற போகும் அந்த நான்கு ராசிக்காரர்களில் நீங்களும் இருக்கிறீர்களா ! கவனியுங்கள் உங்கள் ராசிபலனை !

புதிய ப்ரொஜெக்ட்களை கைப்பற்ற போகும் அந்த நான்கு ராசிக்காரர்களில் நீங்களும் இருக்கிறீர்களா ! கவனியுங்கள் உங்கள் ராசிபலனை !

இன்று செவ்வாய் கிழமை த்ரிதியை திதி ரோகிணி நட்சத்திரம் சித்திரை மாதம் 24ம் நாள். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை பார்க்கலாம்.மேஷம்


பணியில் கடைசிநிமிட நெருக்கடிகள் அதிகமாக இருக்கும். கடந்த வாரம் எடுக்கப்பட்ட முடிவுகளில் மாற்றம் தேவைப்படலாம்.மிக கவனமுடன் இருங்கள். சின்ன தவறுகளும் உங்களுக்கு பின்விளைவுகளை தரலாம்.பொருளாதார நிலையை ஒழுங்கமையுங்கள். குடும்பத்தில் விட்டு கொடுத்து போங்கள். நண்பர்களுடன் பழைய மனக்கசப்புகளை நினைவு கூறுவதால் அவர்கள் உங்களை விட்டு செல்ல நேரிடும். கவனம்.


ரிஷபம்


நிறைய பொறுப்புகளை ஏற்குமுன் நிலுவையில் உள்ள வேலைகளை நீங்கள் முடித்திருக்க வேண்டும். ஒரு தொலைநோக்கு பார்வை இருப்பதில் தவறில்லை ஆனாலும் நீங்கள் யதார்த்தத்துக்கு அருகே இருப்பது அவசியம்.உணர்வுகளால் ஆட்கொள்ளப்படாமல் இருங்கள்.குடும்ப உறவினர்களுக்கு இடையே சில உரசல்கள் ஏற்படும்.இந்த நாளின் இறுதிக்குள் அதனை சரி செய்து விடுங்கள்.நட்புகள் பிசியாக இருப்பதால் சமூக உறவு மெதுவாக இருக்கும். ஒரு பழைய நண்பருடன் தொலைபேசுவதன் மூலம் நீங்கள் மீண்டும் இணைவீர்கள்.


மிதுனம்


வேலை மிக சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். இதற்காக நீங்கள் வெளியிலிருக்கும் நபருடைய உதவியை அறிவுரையை நாடலாம். முடிவுகள் மற்றும் தீர்வுகளை அவசரமாக எடுக்க வேண்டாம். நாளைய நாள் தெளிவாக இருக்கும் என்பதால் தள்ளி போடுங்கள்/ அதிக நேர பணியால் உங்கள் மாலை பொழுதுகள் சுருங்கலாம். குடும்பமும் நண்பர்களும் புரிந்து கொள்வார்கள். உணவில் சமநிலை வேண்டும்


கடகம்


பணியில் இருப்பவர்களோடு உரசலை தவிருங்கள். வேலை நிலைத்தன்மையோடு இருக்கும்போது உங்கள் புது ப்ராஜெக்ட்கள் பற்றிய தெளிவுகள் உங்களுக்கு கிடைக்கலாம்.வெற்றி உங்கள் தலைக்கேறாமல் பார்த்து கொள்ளுங்கள். அடுத்த அடி எடுத்து வைக்கும் முன் உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களிடம் தனி கவனம் செலுத்துங்கள்.குடும்பம் கேளிக்கைகளுடன் சந்தோஷமாக நாள் முடியும்.


சிம்மம்


இன்றைக்கு நடக்க இருக்கும் விஷயங்கள் எல்லாவற்றையும் மற்றவர்களிடம் பழி போடாமல் நீங்களே பொறுப்பு ஏற்று கொள்ளுங்கள். ஒரு சந்திப்பு தாமதமாகலாம்.இதனால் ஏமாற்றமடைய வேண்டாம்.மன அழுத்தத்தால் அதிகமாக சாப்பிடுவதை தவிருங்கள். குடும்ப உறவு சுமுகமாக இருக்கும். உறவினர் நல்ல செய்தி கொண்டு வரலாம். சமூக உறவும் ரிலாக்ஸாக இருக்கும்


கன்னி


வேலை நிலைத்தன்மையோடு இருந்தாலும் உங்கள் சுய பாதுகாப்பின்மை காரணமாக நீங்கள் அதனை சந்தோஷமாக அணுக மாட்டீர்கள். குழு உறுப்பினர்கள் உங்கள் உதவியை நாடலாம்.உங்கள் பயங்களை அலுவலக முடிவுகளில் காட்டி விடாமல் இருப்பது நல்லது. குடும்ப உறவு வலிமையாக இருந்தாலும் உறுப்பினர் ஒருவரின் உணர்ச்சிப்பெருக்கால் உங்கள் அமைதி குலையலாம். சமூக உறவுகள் நெருக்கடி தரலாம்


துலாம்


உங்கள் மனதின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும். வேலையில் உங்களுக்கு எதிராக நடக்கும் சில விஷயங்களால் நீங்கள் ஆக்ரோஷம் அடையலாம். உடன் பணிபுரிபவர்கள் அவர்கள் வேலையை பார்க்க அனுமதியுங்கள். குடும்ப உறவு சுமுகமாக இருக்கும். உங்கள் நேரத்தை குடும்பத்துடன் செலவிடுவீர்கள். சமூக உறவு பரபரப்பாக இருக்கும் நண்பர்கள் உங்களை சந்திப்பார்கள்


விருச்சிகம்


வேலை தாமதமாக இருந்தாலும் உங்கள் புதிய சிந்தனைகள் மூலம் புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். பொருளாதார காகிதங்களை ஒழுங்குபடுத்துங்கள். உங்களுக்கு சைனஸ் தொந்தரவுகள் இருந்தால் தொண்டை மற்றும் கண்களை கவனித்து கொள்ளுங்கள் குடும்பம் மற்றும் சமூகம் இரண்டு உறவுகளும் சுமுகமாக இருக்கும்


தனுசு


புதிய ப்ராஜெக்ட்களுக்கு பொறுப்பேற்க இருப்பதால் உங்கள் பணியிடம் பரபரப்பாக அமையும். உங்களுக்கு காலகெடு இருக்கிறது என்பதற்காக மற்றவர்களிடம் அழுத்தம் போடாதீர்கள். அவர்களால் உங்கள் அளவிற்கு வேகம் காட்ட முடியாது. வாடிக்கையாளர் பங்குதாரர்களுடன் தெளிவான தொடர்பில் இருங்கள்.குடும்ப உறவுகளில் லேசான உரசல் இருந்தாலும் சாயங்காலம் சரியாகி விடும்.


மகரம்


வேலை நிலைத்தன்மையாக இருக்கும் இன்று குடும்பத்தை கவனிக்க வேண்டிய நாள் .வேலை பொறுப்புகள் அல்லது மீட்டிங்குகளை நீங்கள் தாமதமாக தொடங்க நேரிடும். பிடிவாதமாக உறுதியுடன் இருக்கும் அதே வேளையில் உங்கள் பயங்களை பாதுகாப்பின்மையை பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். சமூக உறவு ஆறுதலாக இருக்கும்


கும்பம்


திடீரென வேலைப்பளு அதிகமாக இருக்கும். இதனை நீங்கள் எதிர்பார்த்திருக்க மாட்டிர்கள் என்பதால் திணறுவீர்கள்.கொஞ்சம் கவனம் மற்றும் தெளிவான முடிவெடுக்கும் திறன் உங்களுக்கு தேவை. முக்கியமான முடிவுகள் எடுப்பதால் அழுத்தங்கள் இருக்கலாம். நாளின் இறுதியில் அனைவரும் உங்கள் முடிவை ஏற்பார்கள். குடும்பம் மற்றும் சமூகம் உங்களுக்கு மன ஆறுதலை தரலாம்.


மீனம்


முடிவெடுக்க முடியாமல் போகும் மற்றொரு நாளாக இது இருக்கும்.உங்களுக்கு என்ன தேவை என்பது உங்களுக்கு தெரிந்தாலும் அதனை செயல்படுத்த முடியாமல் போகும். வேலை தாமதமாகி இருக்கும். உடன்பணிபுரிபவர்கள் ஒத்துழைக்க மறுக்கலாம். கண்களை கவனிக்கவும்.கூடுமா சூழ்நிலை சாதகமாக இருக்கும். சமூக உறவுகளில் நண்பர் ஒருவர் உங்களிடம் இரக்கமில்லாமல் நடக்கலாம்.


ஜோதிட பலன்களை கணித்தவர் astro ஆஷா ஷா.


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.