இன்று திங்கள் கிழமை துவிதியை திதி கார்த்திகை நட்சத்திரம். சித்திரை மாதம் 23ம் நாள். இன்று உங்கள் ராசிபலனை பார்க்கலாம்.
மேஷம்
மற்றவருடைய தாமதத்தால் வேலை மெதுவாக நடக்கும். உங்களுக்கு எரிச்சல் வரலாம். ஆனாலும் எதுவும் செய்ய முடியாது. உங்கள் கட்டுக்குள் வேலையை கொண்டு வருவது நல்லது. நேரத்துக்கு சாப்பிடாவிட்டால் அல்சர் வரலாம். வீடு பெரியவர்களுடன் விவாதம் வேண்டாம்.அவர்களை பற்றி விமர்சித்தால் உங்களுக்கே அவை திரும்ப வரலாம்.
ரிஷபம்
ஒரு சில வேலைகளை நீங்கள் திரும்ப செய்ய வேண்டி வரலாம். அது உங்களுக்கு கொஞ்சம் யூஏமாற்றத்தை தரும்.உங்கள் முயற்சி பற்றிய அதிருப்தி உங்கள் அலுவலகத்தில் ஒருவருக்கு ஏற்படலாம். எது தேவையோ அதனை தருவது சிறப்பு. எல்லாவற்றையும் உங்களுக்கானது என்று யோசித்தால் மன அழுத்தம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் அவர்கள் எல்லையை தாண்டி வந்து உங்களை சந்தோஷப்படுத்துவார்கள்.
மிதுனம்
வேலை ஒரே மாதிரி இருக்கும் எந்தவித மாற்றமும் இருக்காது.ஆனாலும் ஒரு சிலரின் பாராட்டு உங்களை மகிழ்விக்கும். உங்கள் படைப்பு திறன் அதன் உச்சத்தில் இருக்கும். அது பற்றிய கவலை வேண்டாம். குடும்ப உறுப்பினரின் உடல்நலத்தில் கவனம் தேவை
கடகம்
வேலை தேங்கி இருக்கும். ஆனாலும் நடந்து கொண்டிருக்கும் திட்டப்பணியில் உங்கள் பங்கு என்ன என்பதில் நீங்கள் தெளிவாக செயல்படுவீர்கள். மீட்டிங்குகள் தாமதம் ஆகலாம் ஆனாலும் இறுதியில் எல்லாம் உங்களுக்கு சாதகமாக நடக்கும்.நிலுவை பணங்கள் வசூல் ஆகும்.குடும்ப உறுப்பினரின் உடல் நலம் உங்கள் மனதை பாதிக்கலாம்.
சிம்மம்
உங்கள் மன வேகத்தை நீங்கள் கட்டுப்படுத்தி ஆக வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் உடன் இருப்பவர்களால் அந்த வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாது. இன்னும் கொஞ்சம் அதிகாரத்தன்மையோடு இருங்கள். நீங்களே எல்லாவற்றிற்கும் பொறுப்பெடுப்பது உங்களுக்கு சாதகம் தராது.குடும்பம் மற்றும் சமூக உறவுகள் இரண்டுமே மெதுவாக நகரும். உங்கள் கண்களையும் தொண்டையையும் பார்த்து கொள்ளுங்கள்.
கன்னி
வேலை நிலைத்தன்மையோடு இருக்கும். அதனை விஸ்தரிக்கும் வகையில் சில சிந்தனைகள் உங்களை வந்தடையும்.ஒரே தொழிலில் இருக்கும் இன்னொருவரிடம் நீங்கள் இதைப்பற்றி அறிவுரை கேட்கலாம். பொருளாதார விஷயங்கள் உங்கள் கவனத்தை ஈர்க்கும்.வயிற்றை கவனியுங்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்களை நேசிப்பார்கள்.
துலாம்
இன்று நீங்கள் வேலை செய்யும் விதத்தை நீங்கள் மாற்றியாக வேண்டும்.மற்றவர்கள் உங்களிடம் ஒரு புது ஆளை எதிர்பார்ப்பார்கள் அதற்காக உங்களை நீங்கள் லேசாக மாற்றி கொள்வதில் தவறில்லை. உடன் பணிபுரிபவர்கள் உதவி செய்வார்கள்.இன்று யாருடைய கவனத்தையும் ஈர்க்க நினைக்காதீர்கள் அதற்காக பின்னால் வருந்த நேரிடும்.குடும்பம் உங்கள் உதவிக்காக காத்திருக்கும். நாடகத்தனமாக எதையும் செய்யாதீர்கள். கடந்த கால நண்பருடன் மீண்டும் சேர்வீர்கள்.
விருச்சிகம்
ஒரே நேரத்தில் எல்லா இடத்திலும் இருப்பதால் உங்களால் உங்கள் வேலையை செய்ய முடியாமல் போகலாம். உங்களுக்கு வேளையில் காலக்கெடுக்கள் நெருங்கலாம் புதிய சிந்தனைகளை உருவாக்க வேண்டி வரலாம் எல்லாமே ஒரே நேரத்தில் நடக்கும். குடும்ப உறுப்பினர் உடல்நலனில் அக்கறை தேவை. கடைசி நேர சமூக விழாக்கள் உங்களை சந்தோஷப்படுத்தலாம். வெளியே சென்று புதிய நபர்களை சந்திப்பது நல்லது
தனுசு
வேலை நிலைத்தன்மையோடு இருக்கும். நீங்கள் புதிய திட்டங்களிலோ வாடிக்கையாளர் மூலம் வரும் வேலைகளிலோ பிசியாக இருப்பீர்கள். சாப்பிடும் முறையை சமமாக வைத்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால் உடல்நலத்தை பதம் பார்த்து விடும். குடும்ப சூழ்நிலை சாதகமாக இருக்கும் ஆனாலும் ஒரு குடும்ப உறுப்பினர் கொஞ்சம் வித்யாசப்படுவார். ஆகவே அவர்களுடன் சண்டை இல்லாமல் இருப்பது நல்லது
மகரம்
இன்று வேலைப்பளு அதிகமாக இருக்கும். இதில் இருந்து தொடங்குவது என்கிற குழப்பங்கள் ஏற்படலாம்.மற்றவர்களின் சிறிய கவனக்குறைவால் நிறைய தாமதங்கள் ஏற்படலாம். உங்கள் மனநிலையை சமமாக வைத்திருங்கள்.கோபப்படுவதற்கு பதிலாக அதற்கொரு மாற்று சிந்தனை யோசிப்பது நல்லது. குடும்ப சூழலும் நெருக்கடியாக இருக்கும். குடும்ப உறுப்பினருடன் உரசல்கள் நேரலாம்.
கும்பம்
இன்று எல்லாவற்றில் இருந்தும் துண்டித்து கொண்டு எல்லாவற்றையும் திரும்ப பெற்று கொள்ளும் நாள். உங்கள் துணையுடனும் இதேதான் நடக்கும். கவலைப்பட வேண்டாம். சில சமயம் பின் சீட்டில் பயணிப்பதும் ஒரு சுகம்தான். நீங்கள் மன மற்றும் உடல் ரீதியாக உங்கள் முக்கியத்துவங்களை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்க வேண்டும்
மீனம்
வேலை நிலைத்தன்மையோடு இருக்கும். மீட்டிங்குகள் தாமதமாகலாம். ஒரு புதிய வாய்ப்பு உங்களை நோக்கி வரலாம். ஆரம்பத்தில் சந்தோஷப்பட்டாலும் போக போக உங்கள் ஆற்றல் மற்றும் நேரத்தை அது உறிஞ்சி கொள்ள வேண்டி வரலாம். வேலையை பற்றிய சிந்தனை இருப்பதால் குடும்பத்தை தூரத்தில் வைப்பீர்கள். ஒரு சமூக விழாவிற்கு நீங்கள் போக வேண்டி இருக்கலாம். உங்களுக்கு அது பிடிக்காது என்றாலும் கூட.
ஜோதிட பலன்களை கணித்தவர் astro ஆஷா ஷா.
—
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.