நெஞ்சை கவர்ந்த நெஞ்சம் மறப்பதில்லை அமித் பார்கவ் .. அக்ஷய த்ரிதியை அன்று அப்பாவாகியிருக்கிறார் !

நெஞ்சை கவர்ந்த நெஞ்சம் மறப்பதில்லை அமித் பார்கவ் .. அக்ஷய த்ரிதியை அன்று அப்பாவாகியிருக்கிறார் !

அமித் பார்கவ் ( amith bhargav) சின்னத்திரை நாயகர்கள் நடுவே கொஞ்சம் நம்மை ஆசுவாசப்படுத்தும் நாகரிக நாயகன். இவரது நடிப்பால் தமிழக குடும்பங்களின் வீட்டுக்குள் புகுந்து பெண்களின் நெஞ்சத்தை திருடியவர்.


கல்யாணம் முதல் காதல் வரை எனும் சீரியல் மூலம் அறிமுகம் ஆனவர் அமித் பார்கவ். முதல் சீரியலில் 5 வயது மகளுக்கு அப்பாவாக பொறுப்பாக நடித்திருப்பார்.


திருமணம் செய்வதற்கு பணம் இல்லை..வாடகை தாய் மூலம் தந்தை.. ஸ்மார்ட் மூவ் செய்யும் சல்மான் கான்!இதில் இவருக்கும் நாயகி பிரியா பவானி சங்கருக்கும் இடையே ஏற்படும் காதல் மிக அழகாக காட்சிப்படுத்த பட்டிருப்பதால் சீரியல் வெற்றியடைந்தது.


இதனை தொடர்ந்து நெஞ்சம் மறப்பதில்லை எனும் இன்னொரு வித்யாசமான காதல் கதை சீரியலிலும் இவர் நாயகன் ஆனார். மறக்க முடியாத தனது முன்னாள் காதலியை தம்பி மணமுடிக்க தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தில் இன்னொரு பெண்ணான சரண்யாவை மணக்கிறார் அமித்.


பிக் பாஸ் சீசன் 3 - முதல் போட்டியாளர் இவர்தானாம் !தனது மருத்துவ படிப்பு முடிந்ததும் பிரிந்து விடுவதாக கண்டிஷன் போட்டு கல்யாணம் செய்யும் சரண்யாவை இவர் நேசித்தாரா முன்னாள் காதலிக்கும் இந்நாள் மனைவிக்கும் நடுவே சிக்கி தவித்து சின்னாபின்னம் ஆனாரா என்பதை ஹாட் ஸ்டார் மூலம் நீங்கள் கண்டு களிக்கலாம்.


இரண்டு சீரியலிலும் சொல்லாமல் தவிக்கும் காதலை சுமக்கும் கதாபாத்திரம் என்பதால் அமித் பார்கவிற்கு இந்த கதாபாத்திரம் அற்புதமாக பொருந்தி போனது என்றுதான் சொல்ல வேண்டும். காதலை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கும் தவிப்பும் அருகருகே இருந்தாலும் அன்பை சொல்ல தயங்கும் அமித் பார்கவின் முகமும் என்றைக்கும் நினைவில் நிற்கும்.


ஐ மிஸ் செல்வராகவன்.. எனக்கென எழுதப்பட்டிருக்கும் வாழ்வை வாழ்கிறேன்.. சோனியா அகர்வால்பெண்களின் கனவு காதலன் என்கிற அந்த மாய கதாபாத்திரம் நிஜத்தில் உலவினால் அது அமித் பார்கவ் போலத்தான் இருக்கும் என்பது பெண்களின் தீர்ப்பு.


சிறந்த நடிகர் மட்டும் அல்லாமல் அற்புதமான பாடகரும் இவர் என்பதை விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் தனது அழகிய குரலால் பாடி நிரூபித்தார்.


பல்கலை மன்னனான அமித் பார்கவிற்கு திருமணம் ஆகி விட்டது என்கிற செய்தியே சில பெண்களுக்கு அதிர்ச்சியாக இருக்க தற்போது வேறொரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் அமித் பார்கவ்..


தாய்மையை கொண்டாடும் திரையுலகமும் மற்றும் சில தகவல்களும்கடந்த மே மாதம் 7ம் தேதி அக்ஷயத்ரிதியை அன்று தனது வீட்டிற்கு மஹாலக்ஷ்மி வந்திருப்பதாக அமித் பார்கவ் தனது மகளின் வரவை அழகாக குறிப்பிட்டிருக்கிறார்.


இனி சீரியல்களில் நடிக்க போவதில்லை புதிய வேலைகளில் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்த அமித் பார்கவ் தற்போது சினிமாவில் இறங்குகிறாரா அல்லது வெப் சீரிஸா என்பது பற்றி இனிமேல்தான் தெரியவரும்.


டல்ஹவுஸ் டயரிஸ் எனும் வெப்சீரிஸை இவர் இயக்கியிருப்பதாக அவரது ட்விட்டர் பக்கம் தெரிவிக்கிறதுஅக்ஷய த்ரிதியை அன்று அப்பாவாகி இருக்கும் அமித் பார்கவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறது
POPxo.


புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.