சுவையான காரசாரமான இறால்(prawn) மிளகு வறுவல் ரெசிபி எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம்.
செய்ய தேவையான பொருட்கள்
இறால் – அரை கிலோ
பச்சை மிளகாய் – 5
இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்
வெங்காயம் – 2
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
மிளகுத்தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
இறாலை நன்றாக கழுவி மஞ்சள் தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
கொத்தமல்லி, பச்சை மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலையை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை மணம் மாறும் வரை நன்றாக வதக்கவும்.
அடுத்து அதில் ஊற வைத்த இறால்(prawn) கலவையை வாணலியில் போட்டு நன்றாக பிரட்டவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விடவும். இறால்(prawn) விரைவில் வெந்து விடும்.
இறால்(prawn) வெந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான இறால்(prawn) மிளகு வறுவல் ரெடி.
இட்லி, தோசை, சாதம் உள்ளிட்டவைகளுடன் தொட்டு, பிரட்டி சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.
இறால் – கால் கிலோ
வெங்காயம் நறுக்கியது – 2
பூண்டு – 10 பல்
இஞ்சி – ஒரு துண்டு
சீரகம் – 1 ஸ்பூன்
தக்காளி – 2
தேங்காய் துருவியது – கால் மூடி
காய்ந்த மிளகாய் – 10
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
எண்ணெய் தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை
இறாலை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும் பூண்டையும் இஞ்சியையும் நன்கு அரைத்துக் கொள்ளவும் தேங்காய் துருவலை் காய்ந்த மிளகாய் சீரகத்துடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்
கடாயில் தேவையான அளவு எண்ணை விட்டு வெங்காயம் கொஞ்சம் கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் பொன்னிறத்துக்கு வந்தபின் தக்காளியை போட்டு வதக்கவும்.
அதனுடன் இறாலை போட்டு வதக்கி அரைத்து வைத்துள்ள பூண்டு இஞ்சி விழுதையும் வதக்கி அதனுடன் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்தவுடன்
மசாலா கெட்டியாகி இறால்(prawn) வெந்தவுடன் இறக்கி கறிவேப்பிலை தூவி இறக்கவும்.
Also Read About ப்ரோக்கோலி ஊட்டச்சத்து
நயன்தாரா குடிக்கும் ரெட் ஒயின் விலை என்ன தெரியுமா? அம்மாடியோவ் இவ்வளவா?
இறால் தொக்கு
இறால் – அரை கிலோ
பெரிய வெங்காயம் – இரண்டு
தக்காளி – இரண்டு
இஞ்சி – ஒரு அங்குலத் துண்டு
பூண்டு – ஆறு பற்கள்
மிளகாய்தூள் – மூன்று தேகரண்டி
தனியாத்தூள் – ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் – அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கடுகு – ஒரு தேக்கரண்டி
சீரகம் – அரை தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – இரண்டு
உப்புத்தூள் – இரண்டு தேக்கரண்டி
எண்ணெய் – அரை கோப்பை.
தொக்கு செய்முறை
கடல் உணவுகளிலேயே மிகவும் சுவையானதும் அதீத நல்ல கொழுப்புச் சத்துக்களும் இறாலில் உள்ளன. மேலும், கால்சியம், புரதம், அயோடின் போன்ற சத்துக்களும் இறாலில் உள்ளதால் இதனை உண்ண மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். வைட்டமின் பி12, டி போன்றவையும், மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், தாமிரம் போன்றவையும் இறாலில் காணப்படுகின்றன. வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற உணவு இது.
இந்தியாவில் இறாலை பலவிதங்களில் சமையல் செய்து உண்கின்றனர். இறாலை தொக்கு, குழம்பு, வறுவல் செய்து சாப்பிடலாம். இறால்(prawn) பிரியாணி சுவையாக இருக்கும். இறால்(prawn) தொக்கு எளிமையான முறையில் தயார் செய்யலாம்.
தேவையான பொருட்கள்
முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்துக் கொள்ளவும். அடிகனமான கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின்னர் வெங்காயம், தக்காளி, நசுக்கிய பூண்டு ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
நன்கு வதங்கிய உடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் போட்டு வதக்கவும், லேசாக உப்பு தூவி மேலும் வதக்க எண்ணெய் பிரிந்து வர வேண்டும். இந்த கிரேவியுடன் இறாலை போட்டு வதக்கி இளஞ்சூட்டில் வைக்கவும்.
இறாலை அதிக நேரம் வேக விடக்கூடாது ஏனெனில் சுவை மாறி ரப்பர் போல ஆகிவிடும். இறால்(prawn) வெந்தவுடன் இறக்கி விடவும். இந்த தொக்கினை சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். எலுமிச்சை, தயிர், சாதங்களுக்கு சைட்டிஸ் ஆகவோ சாப்பிட ஏற்றது.
தேங்காய் எண்ணெய் தரும் ஆரோக்கியம் மற்றும் நன்மைகள்!
இரால் தொக்கு தேவையான பொருட்கள்
இறால்(prawn) அரை கிலோ
வெங்காயம் 4 நீளவாக்கில் நறுக்கியது
தக்காளி-3
பச்சைமிளகாய்-2
மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
உப்பு ருசிக்கேற்ப
கருவேப்பிலை ஒரு கொத்து
எண்ணெய் தேவையான அளவு
- வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், கருவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
- வெங்காயம் லேசாக வதங்கியதும் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.
- தக்காளி நன்கு மசியும் வரும் வரை வதக்கி, அதனுடன் சுத்தம் செய்த இறாலை போட்டு 3 நிமிடம் வதக்கினால் சுவையான இறால்(prawn) தொக்கு தயார்.