நயன்தாரா குடிக்கும் ரெட் ஒயின் விலை என்ன தெரியுமா? அம்மாடியோவ் இவ்வளவா?

நயன்தாரா குடிக்கும் ரெட் ஒயின் விலை என்ன தெரியுமா? அம்மாடியோவ் இவ்வளவா?

நண்பர்களும் ஒயினும் பழமையானதாக இருக்க வேண்டும் என்பது பழமொழி.


ஆனால் ஹாலிவுட் நடிகை கேமரான் டயஸ் முதல் கோலிவுட் நடிகை நயன்தாரா வரை, முகப் பொலிவுக்காக ரெட் ஒயின்(wine) அருந்துகிறார்கள் என்பது சினிமா கிசுகிசு!


இருக்கட்டும்... ரெட் ஒயின்(wine) அருந்தினால் உண்மையிலேயே முகம் பொலிவு பெறுமா? பருக்கள் வராமல் ஓடிப் போகுமா?


வாஷிங்டன் மாகாணப் பல்கலைக்கழகம் கலிஃபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் லேட்டஸ்ட் ஆய்வு அப்படித்தான் சொல்கிறது. திராட்சை, பெர்ரி, ரெட் ஒயின்(wine) ஆகியவற்றில் Resveratrol என்கிற ஆன்ட்டி ஆக்சிடன்ட் காணப்படுகிறது. இதற்கு பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை கொல்லும் திறன் உண்டு. ஹெல்த்தி ஆன்ட்டி ஆக்சிடன்ட் என்று புகழப்படும் ரெஸ்வெரட்ரோல், செல் மற்றும் திசுக்கள் பாதிப்பு அடைவதையும் தடுக்குமாம்.


nayanthara drinking wine003


முகத்தை பளபளப்பாக்கும் அதிசய நன்மைகள் தரும் அவகேடோ!


அலோபதி மருத்துவத்தில் பருக்களைப் போக்க அளிக்கப்படும் Benzoyl peroxide மருந்தின் திறனை அதிகரிக்கவும், நீடித்துச் செயல்படச் செய்யவும் கூட இது உதவுகிறதாம். பென்சாயில் பெராக்சைடு மருந்தின் வீரியம் பொதுவாக 24 மணி நேரங்களுக்கே காணப்படும். சிவப்பு ஒயினில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடன்ட் அதற்குத் துணை புரிவதால், தொடர்ச்சியாக பாக்டீரியா எதிர்ப்புத் தன்மையைப் பெற முடிகிறது. இதனால் பாக்டீரியாக்கள் பெருகாமல் தடுக்கப்படுகிறது. Journal Dermatology and Therapy என்கிற மருத்துவ ஆய்வு இதழும் இது பற்றிய விளக்கத்தை வெளியிட்டிருக்கிறது.


உடலில் அதிகமான வியர்வை வெளியேறுவது ஏன்? என்னென்ன மாற்றங்கள் நிகழும்?


இதோடு விட்டால் பரவாயில்லை... இந்த ரெஸ்வெரட்ரோல் ரொம்ப நல்லவன் போல நம்முடைய ஊளைச் சதையையும் கலோரியை எரிக்கச் செய்யும் பிரவுன் ஃபேட் ஆக மாற்றி விடுமாம். கொழுப்பு செல்கள் வளர விடாமலும் தடுக்குமாம். தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் கேன்சர் ஏற்படாமல் தடுக்குமாம். கேன்சர் உருவாக்க வாய்ப்புள்ள பாதிப்புக்கு ஆளான செல்களை இதுவே கொன்று விடுமாம். இவை மட்டுமல்ல ரெட் ஒயின்(wine) அருந்திவிட்டுப் படுத்தால் மூட்டைப்பூச்சி கூட உங்களைக் கடிக்காது என்கிறார்கள்.


மூப்பு காரணமாக ஏற்படும் மறதி பிரச்னைகளையும் ரெட் ஒயினில்(wine) உள்ள சமாசாரங்கள் தவிர்க்க உதவுமாம். டெக்சாஸ் மருத்துவ விஞ்ஞானிகள் எலி பரிசோதனை செய்த போது, இது நிரூபணம் ஆகியிருக்கிறது. ரெஸ்வெரட்ரோல் காரணமாக அவற்றின் கற்றல், நினைவாற்றல், மனநிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாம். இன்சுலின் சுரப்பைக் குறைக்கும் வகையிலான ஒருவித வீக்கத்தை ஏற்படுத்தும் மூலக் கூறுகளையும் ரெஸ்வெரட்ரோல் கட்டுப்படுத்துகிறது. இதனால் டைப் 2 நீரிழிவு மற்றும் ஸ்ட்ரோக் ஏற்படாமல் தடுக்கும் என்கிறார்கள் இந்த விஞ்ஞானிகள். அட... இவ்வளவு பிரமாதமாக இருக்கிறதே..


முக்கிய குறிப்பு - நயன்தாரா பருகுவதாகச் சொல்லப்படுகிற குறிப்பிட்ட இறக்குமதி ஒயின்(wine) பாட்டிலின் விலை ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபாய்.


nayanthara drinking wine004


எல்லாரும் எதிர்பார்த்த பிக் பாஸ் மூன்றாவது சீசன் ஜுன் 23ம் தேதி! போட்டியாளர்கள் யார் தெரியுமா?


பாரம்பரியமாகவும் முறை தவறாமலும் தயாரிக்கப்படும் மேலைநாட்டு ஒயின்களில் வேண்டுமானால், மேலே குறிப்பிட்ட ஆன்ட்டி ஆக்சிடன்ட்டுகள் இருக்கக்கூடும். பயன் தரவும் கூடும். நம் ஊரில் ரெட் ஒயின் என்ற பெயரில் விற்கப்படுகிற அயிட்டங்கள் உண்மையில் ஒயினே அல்ல. ஒயின் என்பதற்கான இலக்கணம், இலக்கியம் எல்லாவற்றையும் எகத்தாளம் செய்து சும்மா காய்ச்சி வடிகட்டப்பட்ட இனிப்புத் திரவங்களே அவை. ஆகவே, போலிகளை நம்பி ஏமாறாதீர்கள். நயன்தாரா பருகுவதாகச் சொல்லப்படுகிற குறிப்பிட்ட இறக்குமதி ஒயினின் விலை பாட்டில் ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபாய். இப்போது புரிந்திருக்குமே!


பட ஆதாரம் - gifskey, pexels, pixabay, Youtube


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo