காலத்தால் அழியாத பல காவியப்படங்களை வழங்கிய இயக்குநர் மகேந்திரன்(79) சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணமடைந்தார். இதனை மகேந்திரனின்(Mahendran) மகனும் இயக்குநருமான ஜான் மகேந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறார். இந்த தகவல் திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
Legendary director #Mahendran Sir Passed Away
May his soul rest in Peace🙇 pic.twitter.com/f3PSwXmhAh
— Arun Pandiyan (@ArunPan86361299) April 2, 2019
ரஜினியின் நடிப்புத்திறமைக்கு இன்றளவும் ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு என முள்ளும் மலரும் படத்தைத் தான் அனைவரும் உதாரணமாக சொல்வார்கள். இதேபோல உதிரிப்பூக்கள், ஜானி, நண்டு என அவர் உருவாக்கிய பல படங்களும் காலத்தால் என்றும் அழியாதவை. இயக்குநர் மட்டுமின்றி நடிகராகவும் தெறி,பேட்ட படங்களில் மகேந்திரன்(Mahendran) நடித்திருந்தார்.
Rest in peace #Mahendran Sir #RipMahendranSir @theVcreations @A_l_o_n_e_b_o_y @Avenger16031994 pic.twitter.com/pBH7yUar9i
— ᎠᏆᎽᎪ™ 💖 (@Diya_Offi) April 2, 2019
சிறுநீரகப் பிரச்சினைகள் காரணமாக கடந்த வாரம் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மகேந்திரன்(Mahendran), சில நாட்களுக்குப்பின் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குத் திரும்பினார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். தற்போது பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் பள்ளிக்கரணையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது. இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குநர் மணிரத்னம், நடிகர் கருணாகரன், நடிகை வரலட்சுமி சரத்குமார் எனதிரையுலகினர் பலரும் நேரில் சென்று அஞ்சலி அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்றுமாலை அவருக்கு இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிகிறது.
இனி வருங்காலம் அவரின் படைப்புகள் உதிரி பூக்கள், ஜானி, முள்ளும் மலரும் அவரின் புகழைப் பாடிக்கொண்டே இருக்கும். இதயப்பூர்வமான மெளன அஞ்சலி.#மகேந்திரன் #Mahendran pic.twitter.com/YXgYeZS0oI
— Ajithlofa (@ajithlofa108) April 2, 2019
மறைந்த திரையுலக ஜாம்பவான் மகேந்திரன்(Mahendran) குறித்த நினைவுகளை ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதில் இருந்து ஒருசில பதிவுகளை இங்கே தொகுத்து கொடுத்திருக்கிறோம்.
முள்ளும் மலரும் மரணம்?
இன்னும் நூறு வருடமாவது
வாழும் மகேந்’திறன்’!!!— R.Parthiban (@rparthiepan) April 2, 2019
It is deeply saddening to hear the demise of one of the pioneer filmmaker #Mahendran sir. You and your films live forever in our hearts sir. Rest in peace.
— A.R.Murugadoss (@ARMurugadoss) April 2, 2019
பி.சி.ஸ்ரீராம்
”அவர் பேசியது குறைவு, அவர் படங்கள் பேசியது அதிகம். உதிரிப்பூக்கள் படம் பார்த்துவிட்டு தூக்கமின்றி தவித்ததை எப்படி மறக்க முடியும்,” என முன்னணி ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
#Mahendran
He spoke less and his films spoke more.
To me his films were of great inspiration
How can I forget the sleepless night I had after watching “uthripookal”
May his soul rest on peace.— pcsreeram (@pcsreeram) April 2, 2019
ரஜினி
இயக்குநர் மகேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தியபின் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
எனக்கு மிக நெருங்கிய நண்பர் இயக்குநர் மகேந்திரன்.எனக்குள் இன்னொரு ரஜினிகாந்த் இருக்கிறார் என்று காட்டியவர் இயக்குநர் மகேந்திரன்.நடிப்பில் இன்னொரு பரிமாணத்தைச் சொல்லிக் கொடுத்தவர். ‘முள்ளும் மலரும்’ படம் பார்த்துவிட்டு, என்னை நடிகராக அறிமுகப்படுத்திய இயக்குநர் பாலசந்தர், ‘உன்னை நடிகனாக அறிமுகப்படுத்தியதில் பெருமைப்படுகிறேன்’ என்று கடிதம் எழுதினார். அதற்கு சொந்தக்காரர் மகேந்திரன்.
சமீபத்தில், ‘பேட்ட’ படப்பிடிப்பில் நீண்ட நேரம் பேசினோம். இப்போது இருக்கும் சமுதாயத்தின் மீதும், சமீபகால சினிமா மீதும், அரசியல் மீதும் அவருக்கு மிகவும் அதிருப்தி, கோபம் இருந்தது.தமிழ் சினிமா இருக்கும்வரை மகேந்திரன் சாருக்கென்று ஒரு இடம் இருக்கும். அவரது ஆன்மா சாந்திடைய வேண்டுகிறேன்.
ரஜினிகாந்த் அளித்த பல பேட்டிகளில், ‘எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர் மகேந்திரன்’ என்று கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிகச்சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.