'புது மாப்பிள்ளை' விஷாலுக்கு பலத்த காயம்.. பாதியில் நிறுத்தப்பட்ட ஷூட்டிங்!

'புது மாப்பிள்ளை' விஷாலுக்கு பலத்த காயம்.. பாதியில் நிறுத்தப்பட்ட ஷூட்டிங்!

அயோக்யா படத்துக்குப்பின் நடிகர் விஷால்(Vishal) சுந்தர்.சி இயக்கத்தில் புது படமொன்றில் நடித்து வருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார். படக்குழு தற்போது துருக்கியில் முகாமிட்டு காட்சிகளைப் படம்பிடித்து வருகிறது. இந்தநிலையில் நடிகர் விஷால்(Vishal) படப்பிடிப்பின்போது பலத்த காயம் அடைந்துள்ளார்.


விஷால்(Vishal)சமீபத்தில் நடிகர் விஷாலுக்கும், தெலுங்கு திரையுலகை சேர்ந்த நடிகை அனிஷாவுக்கும் இடையே நிச்சயதார்த்தம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் விஷாலின் நெருங்கிய நண்பர்கள், நடிக-நடிகையர் என பலரும் கலந்துகொண்டு வருங்கால மணமக்களை வாழ்த்தினர். இருவரின் திருமண தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.


அயோக்யாசண்டக்கோழி 2 படத்துக்குப்பின் விஷால்(Vishal) நடிப்பில் அடுத்ததாக அயோக்யா உருவாகியுள்ளது. தெலுங்கு படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து வருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக கத்திசண்டை படத்துக்குப்பின் தமன்னா நடித்து வருகிறார். இவர்கள் இருவர் தொடர்பான காட்சிகளை படக்குழு மும்முரமாக சுட்டுத்தள்ளி வருகிறது.


பைக் ஆக்ஸிடென்ட்இதில் விஷால் சம்பந்தப்பட்ட காட்சிகளை படம்பிடிக்கும்போது பைக் தொடர்பான ஸ்டண்டட் காட்சியில் விஷால் நடித்திருக்கிறார். அப்போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் விஷால் சென்ற வெளிநாட்டு பைக் கட்டுப்பாட்டை இழக்க விஷாலுக்கு கை,காலில் பலத்த அடிபட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்ற விஷாலுக்கு அங்குள்ள மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். அவர் கை,கால்களில் கட்டு போடப்பட்டுள்ளது.


ஓய்வுமருத்துவர்கள் விஷால் சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து விஷால் தற்போது ஓய்வில் இருக்கிறார். விஷாலுக்கு அடிபட்டதால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை தள்ளிவைத்து விட்டு மற்றவர்களின் காட்சிகளை சுந்தர்.சி படம்பிடித்து வருகிறாராம். விஷால் கை,காலில் கட்டுடன் நாற்காலியில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.


முள்ளும் மலரும்


'செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்' பாட்டை கேட்டு இருக்கிறீர்களா? 'முள்ளும் மலரும்' படத்தில் இடம்பெற்ற இந்த பாடலும் படமும் இன்றளவும் தமிழக ரசிகர்களின் பேவரைட்களில் ஒன்றாக உள்ளது. ரஜினி, சரத்பாபு, படாபட் ஜெயலட்சுமி, ஷோபா நடிப்பில் 1978-ம் ஆண்டு இந்தப்படம் வெளியானது. 41 வருடங்கள் கழித்தும் இப்படத்தின் தாக்கம் ரசிகர்கள் மனதில் நிறைந்திருக்கிறது என்றால் படம் வந்த காலகட்டத்தில் எப்படி இருந்திருக்கும் என யோசித்துப் பாருங்கள்.குறிப்பாக ரஜினி நடிப்பில் இப்படத்தில் இடம்பெற்ற 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை', 'நித்தம் நித்தம் நெல்லுச்சோறு நெய்மணக்கும் கத்திரிக்கா' போன்ற பாடல்கள் இன்றளவும், மீண்டும் கேட்கத்தோன்றும் பாடல்கள் வரிசையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மகேந்திரன் இயக்கம், இளையராஜா இசை, ரஜினி-சரத்பாபு-ஜெயலட்சுமி-ஷோபா ஆகியோரின் இயல்பான நடிப்பு ஆகியவை ஒன்றிணைந்து 'முள்ளும்' மலரும் படத்தை ஒரு காவியமாகவே மாற்றிவிட்டது என்றால் அது மிகையல்ல.இந்தநிலையில் காலத்தால் அழியாத பல காவிய படங்களை வழங்கிய இயக்குநர் மகேந்திரன், தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் தெறி, பேட்ட என நடிகராகவும் மகேந்திரன் தமிழ் சினிமாவுக்கு தனது பங்களிப்பை மீண்டும் வழங்க ஆரம்பித்து இருக்கிறார்.இந்த சூழ்நிலையில் தான் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன. மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது தந்தையின் உடல்நிலை சரியில்லை அனைவரும் அவர் நலம்பெற வேண்டும் என வேண்டிக்கொள்ளுமாறு தெரிவித்திருக்கிறார். இது தமிழ் ரசிகர்கள், பிரபலங்கள் என பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.


மீண்டு(ம்) வாங்க மகேந்திரன் சார்!


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிகச்சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.