'பிரேக்கப்'பில் முடிந்த பிரபல நடிகர்-நடிகைகளின் 'காதல்கள்'

'பிரேக்கப்'பில் முடிந்த பிரபல நடிகர்-நடிகைகளின் 'காதல்கள்'

சினிமா உலகைப் பொறுத்தவரையில் நடிகர்-நடிகைகள் காதலித்து திருமணம் செய்வது காலம்காலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. இருவரும் ஒரே துறையில் இருக்கும்போது இது சகஜம் தான்.ஆனால் அதுதொடர்பான செய்திகளை சம்பந்தப்பட்டவர்கள் அவ்வளவு எளிதில் ஒத்துக்கொண்டு விட மாட்டார்கள்.நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள், எங்களுக்குள் நல்லதொரு புரிதல் இருக்கிறது என்றெல்லாம் சொல்வார்களே தவிர நாங்கள் ஒருவரை,ஒருவர் காதலிக்கிறோம் என மனமார ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.


எனினும் ஒருநாள் எல்லாம் முடிவுக்கு வந்துதானே தீரும் என்பதுபோல இவர்கள் காதலும், ஒருநாள் வெளியில் தெரியவரும்.நல்ல ஜோடி இருவரும் திருமணம் செய்துகொண்டால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் நினைத்துக்கொண்டு இருக்கும்போதே, இந்த ஜோடி பிரிந்து(Breakup) விடும். என்ன காரணம் என்று வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள். எனினும் பொது விழாக்களில் பார்க்கும்போது அல்லது அவர்கள் தொடர்பான கேள்விகளை எதிர்கொள்ளும்போது சற்று திணறித்தான் போவார்கள். அந்த வகையில் காதலிக்கும்போதே பிரிந்து(Breakup) போன ஜோடிகளை இங்கே பார்க்கலாம்.சிம்பு(Simbu)-நயன்தாரா(Nayanthara)வல்லவன் படத்தில் சேர்ந்து நடிக்கும்போது இவர்கள் கெமிஸ்ட்ரியைப் பார்த்து ஊர்,உலகமே கண்வைத்தது. அந்தளவு இருவருக்கும் இடையில் பயங்கரமாக கெமிஸ்ட்ரி வொர்க்அவுட் ஆனது. என்ன காரணம் என்றெல்லாம் சொல்லவில்லை இருவரும் திடீரென பிரிந்து(Breakup) விட்டார்கள். சிம்பு(Simbu) தன்னுடைய அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டதால் தான் நயன் அவரை விட்டுப்பிரிந்ததாக கூறப்படுகிறது. தற்போது நயன்தாரா(Nayanthara) தமிழின் முன்னணி நடிகையாக இருக்கிறார். பிரபுதேவாவுடனான காதல்(Love) முடிவுக்கு வந்தபின் சிறிதுகாலம் நடிக்காமல் இருந்த நயன், மீண்டும் வந்து நடிப்பில் நல்லதொரு இடத்தைப் பிடித்திருக்கிறார். அதேபோல விக்னேஷ் சிவனுடன் காதலில் நயன்(Nayanthara) காட்டும் தீவிரம் விரைவில் இருவருக்கும் மணமாகலாம் என்பதை சொல்லாமல் சொல்லுகிறது. அதேவேளையில் சிம்பு(Simbu) இன்னும் சிங்கிளாகவே சுற்றி வருவது குறிப்பிடத்தக்கது.


சமந்தா-சித்தார்த்மனைவியைப் பிரிந்த சித்தார்த், சமந்தாவை உருகி உருகி காதலித்தார்(Love). கட்டிக்கொண்டால் சமத்து, சமந்தாவைத் தான் கட்டிக்கொள்வேன் என்று அவர் அடம்பிடித்ததாகவும் சொல்வார்கள். காளஹஸ்தி வரை சென்று பரிகார பூஜை எல்லாம் செய்த இந்த ஜோடி சற்றும் எதிர்பாராதவிதமாக பிரேக்கப் (Breakup) செய்து கொண்டது. இதற்கு சித்தார்த் தான் காரணம் என தகவல்கள் வெளியாகின. சித்தார்த் இன்னும் சிங்கிளாக சுற்ற, சமந்தா-நாக சைதன்யாவை மணந்து வாழ்க்கையை என்ஜாய் செய்து வருகிறார்.சிம்பு(Simbu)-ஹன்சிகாஆமாம் நாங்கள் காதலிப்பது(Love) உண்மைதான் என வாலு படத்தில் சேர்ந்து நடித்தபோது இருவரும் சேர்ந்து அறிக்கை கொடுத்தனர். நல்ல ஜோடிப்பொருத்தம் என்று ரசிகர்கள் வாழ்த்த, என்ன காரணம் என்றே தெரியாமல் காதலித்த வேகத்திலேயே,இருவரும் பிரேக்கப் (Breakup) செய்து கொண்டனர். தற்போது இருவரும் மஹா என்னும் படத்தில் சேர்ந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


ஜெய்-அஞ்சலிநல்ல நடிகை என்று அனைவராலும் பாராட்டப்பட்ட நடிகை. 'எங்கேயும் எப்போதும்' படத்தில் சேர்ந்து நடித்தபோது இருவருக்கும் காதல்(Love) பற்றிக்கொண்டதாக கிசுகிசுக்கப்பட்டது. தொடர்ந்து சேர்வதும், பிரிவதுமாக இருந்த இந்த ஜோடி தற்போது ஒரேயடியாக பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.


விஷால்- வரலட்சுமி சரத்குமார்இருவரும் காதலிக்கிறார்கள் என எழுதாத ஊடகங்களே இல்லை எனலாம், அப்பா சரத்துக்கு ஆகாதவர் என்றாலும் விஷாலுடன் மேடைகளில் சேர்ந்தே போஸ் கொடுத்தார் வரலட்சுமி. மறுபுறம் சங்கக்கட்டிடம் கட்டி முடித்த பின்னர் தான் திருமணம் என விஷால் சபதம் எடுத்தார். இதற்கிடையில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. திடீரென அனிஷா திருமணத்திற்கு சம்மதித்து விட்டார் என உற்சாகமாக அவருடன் சேர்ந்து விஷால் போட்டோக்களுக்கு போஸ் கொடுக்கத் தொடங்கியதில் ஆரம்பித்து, தற்போது இருவருக்கும் இடையில் நிச்சயதார்த்தமே முடிந்து விட்டது.


திரிஷா-ராணா டகுபதிமொத்த திரையுலகமே ஒன்று திரண்ட இடங்களிலும் கூட வெளிப்படையாக இந்த ஜோடி குறித்து பேசாதவர்களே இல்லை எனலாம். அந்தளவு ஊர்,உலகுக்கே இவர்கள் இருவரின் காதல்(Love) தெரிந்து இருந்தது. திருமணம் செய்து கொள்வார்கள் என மிகவும் எதிர்பார்த்த இந்த ஜோடி தற்போது வெளிப்படையாக பிரேக்கப்(Breakup) செய்துவிட்டது. இதற்கிடையில் வருண் மணியனுடன் நிச்சயதார்த்தம் வரை சென்ற திரிஷா பின்னர் அவருடனான உறவையும் முறித்துக்கொண்டு தற்போது 'சிங்கிள்' சிங்கமாக சுத்தி வருகிறார்.


தமன்னா-கார்த்தி(Karthi)காதல் விவகாரம் வெளியில் தெரிந்தவுடனேயே அவசர,அவரசமாக கார்த்திக்கு(Karthi) திருமணம் நடந்து முடிந்தது. இதனால் இந்த காதல் விவகாரம் எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை. பையா, சிறுத்தை படங்களில் சேர்ந்து நடித்தபோது கார்த்தி(Karthi)-தமன்னா இருவருக்கும் காதல் மலர்ந்தது. இந்த காதல் கார்த்தியின்(Karthi) குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை என்பதால் தமன்னாவுக்கு தமிழ்ப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு குறைந்து ஒருகட்டத்தில் நின்றே போனது. நீண்ட இடைவெளிக்குப்பின் தல அஜித் தனது வீரம் படம் வழியாக தமன்னாவை மீண்டும் தமிழ் உலகுக்கு அழைத்து வந்தார். காதலில் தோல்வியுற்றாலும் கேரியரில் இன்னும் உச்சத்தில் இருக்கிறார் இந்த 'மில்க் பியூட்டி'


இதுபோல உங்களுக்குத் தெரிந்த காதல் ஜோடிகள் யாராவது இருந்தால் கமெண்ட்டில் சொல்லுங்க பாஸ்!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிகச்சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.