இளமையான தோற்றத்திற்கு : தெரியுமா? இந்த தினசரி பழக்கங்கள் உங்களை வயதானவர் போல் காண்பிக்கலாம் !

இளமையான தோற்றத்திற்கு :  தெரியுமா? இந்த தினசரி பழக்கங்கள்  உங்களை வயதானவர் போல்  காண்பிக்கலாம் !

என்றும் இளமை என்பது சாத்தியம் இல்லை என்றாலும், இருக்கின்ற பொழுதில்  நம்மை இளமை தோற்றத்தோடு வைத்து கொள்ளல் வேண்டும் ( ஆம்! மனதளவிலும் கூட - #StrengthOfAWomen) நம்மை அறியாமல் சில பழக்கம் வழக்கம் நமக்கு வயதான தோற்றத்தை தரும்.அந்த குட்டி செயல்கள் (routine) என்ன??  அவற்றை எவ்வாறு தவிர்க்கலாம் என்ற யோசனைகளை நாங்கள் உங்களுக்கு அளிக்க உளோம்.


 கண்களை தேய்ப்பது :


gifskey %285%29


நம்மை அறியாமலே, கண்களை தேய்த்து கொண்டே இருப்பது, அடிக்கடி (தினசரி) கண் சிமிட்டும் பழக்கம், கண்ணை கசக்குவது, அதிகம் நேரம் கம்ப்யூட்டர்ரை பார்ப்பது போன்ற சில பழக்கம் இருப்பதால் கண்ணை சுற்றி கருவளையம் வரக்கூடும்.இதனால், இருக்கும் வயதில் பத்து வயது கூடியது போல தோற்றம் தரும். இதனை தவிர்க்க தேவையில்லாமல் கண்ணில் கைகளை வைப்பதை தவிர்க்க வேண்டும்.


தீர்வு :


மிகவும் அரிப்பு இருந்தால் சுத்தமான நீரில் கண்களை அலச வேண்டும். கருவளையம் வந்தால், அதனை போக்க உருளை கிழங்கு சாறு  எடுத்து கண்களைசுற்றி இரவு தூங்கும் முன் தடவி வந்தால், கருவளையம் மறைந்து போகும்


தூக்கம்மின்மை :


தூக்கம் என்பதில் தான் நமது ஆரோக்கியம் அடங்கி உள்ளது. சரியான தூக்கம் நம் உடல் நலத்திற்கு  நல்லது. தூக்கும் போது உடல், சருமம் அனைத்தும் தன்னை தானே சுத்தம் செய்து கொள்ளும்.தூக்கம்மின்மை, உடல் சோர்வடைந்து வயதான தோற்றம் தரும்.


தீர்வு :


ஆகையால் தினமும் 7-8 மணி நேரம் தூங்கி பழகுங்கள்.அதற்கென படுக்கும் இடத்தை அமைதியாக வைத்து இரவில் கம்ப்யூட்டர் செல் போன் பார்ப்பதை தவிர்த்து கொள்ளுங்கள்.


அதிகமான உடற்பயிற்சி :


gifskey %286%29


இன்று நம்மில் பலர் உடல் எடை அதிகமாக இருப்பதால் உடற்பயிற்சி, டயட் என உடல் எடையை கட்டுக்குள் வைக்க பாடுபடுகிறோம். ஆனால், இதன் இன்னொரு முகத்தை கவனிக்க மறந்து விட்டோம். சுருங்கிய சருமம், தளர்வு அடைந்த சருமம்.அதிகப்படியான கொழுப்பு கரைந்து,முகம் பொலிவை இழந்து தளர்வு அடைந்துவிடுகிறது. அதனால் வயதான தோற்றம் பெறுகிறது.


ஒரே நேரத்தில் அதிகப்படியான எடையை குறைக்க கூடாது. முக்கியமாக முக அழகை இது பாதிக்கும். தோல் தளராமல் இருக்க வல்லுநர்கள் ஆலோசனை படி எடை குறைப்பது, தகுந்த கால இடைவெளியில் உடற்பயிற்சி செய்வது போன்ற காரணங்களால் தவிர்க்க முடியும்.


தீர்வு :


தக்காளி சாறு முகத்தில் தேய்த்து வரலாம்.முட்டையின் வெள்ளை கருவை முகத்தில் தடவி, 20நிமிடங்கள் கழித்து முகம் கழுவி வந்தால் தோல் இறுக்கம் பெரும். வைட்டமின் c, அதிகம் உள்ள ஆரஞ்சு பழம், கீரை போன்றவை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.


 


கெமிக்கல் கொண்ட பொருட்களை பயன்படுத்துவது :


நம்மில் சிலருக்கு இந்த பழக்கம் (habits) இருக்கும். அடிக்கடி முகம் கழுவி, மேக் அப் போட்டு கொள்வார்கள். முகம் கழுவும் போது, சோப், ஷாம்பூ போன்ற பொருட்களை பயன் படுத்துவார்கள். அதில் உள்ள கெமிக்கல் உங்கள் சர்மத்தில் மீண்டும் மீண்டும் படுவதால், தோலின் மேல் பாகம் டேமேஜ் ஆகிவிடும். இதனால் சுருக்கங்கள் வந்து வயதான தோற்றம் தரும்.


தீர்வு :


இதனை தவிர்க்க அடிக்கடி முகம் கழுவும் போது, சுத்தமான நீரினால் முகத்தை கழுவி கொள்ளுங்கள்.  சோப் அல்லது பேஸ் வாஷ் போன்ற பொருட்களை தவிர்த்து விட்டு ஹெர்பல் பொருட்கள் பயன்படுத்தலாம்.


புகை & மது :


புகை நமக்கு பகை. மது நாடுக்கும் வீட்டுக்கும் கேடு. இவை எல்லாம் பொது இடங்களில் கேட்டாலும் பார்த்தாலும் பலருக்கு மனதில் பதிய வில்லை.மாதத்தில் ஒரு முறை என தொடங்கி, நாள் அளவில் இப்பழக்கம் தொடர்ந்து வந்தால் ஆபத்து.  தொடர் புகை அல்லது மது பழக்கம் இருப்பதால், முகம் கன்னம் போன்ற இடங்களில் சுருக்கங்கள் வரும். கண்களுக்கு கீழ் உள்ள பகுதி வீங்கி, வயதான தோற்றம் தரும்.


தீவினை தரும் தொல்லைகளில் இருந்து விடு பட வேண்டும். இல்லை எனில் வயதான தோற்றம் பெற்று, பல இன்னல்களுக்கு ஆளாக வேண்டும்.


gifskey %289%29


தீர்வு :


இப்பழக்கம் மாற்றி கொள்ள முடியவில்லை என்றால் நல்ல  மன நல ஆலோசகரை அணுகவும்.


சுருக்கங்கள் மற்றும் நிறம் மாற்றம் : 


உங்கள் சருமத்தில் சுருக்கங்கள் மட்டுமே உங்களை வயதானது போல் காண்பிக்கும் என்று நினைத்தால் அது தவறு ! உங்கள் சருமத்தின் நிறம் வெப்ப காரணத்தினால் மாறி, மிக மந்தமாக தோன்றினாலும் உங்களின் இளமை பறிபோகி அதிக வயதுடையவர் போல் தோற்றம் அளிக்கும்!


தீர்வு :


இதை தவிர்க்க, சன்ஸ்கிரீன் லோஷனை தடவிக்கொண்டு செல்லுங்கள். வெப்பநிலை எதுவாக இருந்தாலும் ஒரு நல்ல சன்ஸ்கிரீன் லோஷன் அவசியம்.


என்றும் இளமை நம் கையில் இல்லை..  ஆனால் இளமையான தோற்றம் நாம் நினைத்தால் சாத்தியமே....சின்ன சின்ன விஷயத்தில் (பழக்கங்கள்) கவனமாக இருந்து கொண்டு, இளமையை பாதுகாப்போம்.


பட ஆதாரம்  - பேக்செல்ஸ் ,ஜிப்ஸ்கிPOPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி,  தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.