logo
ADVERTISEMENT
home / Diet
தினசரி வெந்தயம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் மற்றும் நன்மைகள்! (Benefits Of Fenugreek In Tamil)

தினசரி வெந்தயம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் மற்றும் நன்மைகள்! (Benefits Of Fenugreek In Tamil)

வெந்தயம்(fenugreek) ஒர் ஆண்டில் வளரும் ஆணுவல் பிளானட். இதை அநேகமாக மேத்தி என அழைக்கப்படுகின்றது. வெந்தயம் உடலுக்கு மிகவும் குளிர்ச்சியை தரக்கூடிய பொருள். இது பூ, காய், விதை, கீரை என எல்லாமே மருத்துவ குணங்கள் கொண்டது. இதில் அநேக சத்துக்கள் அடங்கியுள்ளன. வெந்தயம் இந்தியாவின் தென் இந்திய மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் விளைகின்றது. வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன. மேலும் சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியசத்து, பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும், தயாமின், ரிபோபிளேவின், நிகோடினிக் அமிலம், வைட்டமின் “ஏ” போன்றவைகளும் அடங்கியுள்ளன.

வெந்தயத்தின் பண்புகள்

வெந்தயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

வெந்தயத்தின் பக்க விளைவுகள்

ADVERTISEMENT

FAQs

வெந்தயத்தின் பண்புகள் (Properties Of Fenugreek) 

  • வெந்தயத்திலுள்ள எண்ணை பசை தலைமுடிக்கு வளர்ச்சியை, கருமை நிறத்தை தருகிறது. எனவே கூந்தல் தைலங்கள் தயாரிப்பில் பயன்படுகிறது.
  • வெந்தயத்திலிருந்து ஈதரை பயன்படுத்தி வாலை வடித்தல் முறையில் ஒருவகை எண்ணை எடுக்கப்படுகிறது. இந்த எண்ணை சோப்பு தயாரிப்பிலும் சமையலிலும் பயனாகிறது. மேலும் வெந்தயத்திலிருந்து ஒரு மணமுடைய எண்ணை எடுக்கப்படுகிறது. இது சென்ட், மணப்பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.
  • ஒருவகை மஞ்சள் சாயம் தயாரிக்கப்பட்டு துணிகளுக்கு வண்ணமேற்ற மாத்திரைகளுக்கு வண்ணம் கொடுக்க பயன்படுகிறது. வெந்தயத்தை ஊற வைத்து எடுக்கப்படும் பசை நூற்பு ஆலைகளிலும், அச்சு தொழில்களிலும் பயன்படுகிறது.
  • வெந்தயம் குளிர்ச்சியை உண்டாக்கும். சிறுநீரை பெருக்கும். துவர்ப்புத் தன்மை உடையது. வறட்சியகற்றும் தன்மை கொண்டது. விதையிலுள்ள ஆல்கலாய்டுகள் பசியைக் கூட்டும். நரம்புகளைப் பலப்படுத்தும். கீரை குளிர்ச்சியை உண்டாக்கும் தன்மை கொண்டது.
  • சித்த, ஆயுர்வேத வைத்திய முறைகளில் வெந்தயம், சீதபேதி, மூலநோய் இவைகளை குணப்படுத்த, முடி உதிர்தல், தோல் நோய், வாய்வுத்தொல்லையை போக்கவும் பயன்படுத்தப்படுகிறது. எண்ணையாக, கரைப்பானாக, லேகியமாக, பொடியாக பயன்படுத்தப்படுகிறது. யுனானி மருத்துவ முறையில் சளி நீக்கவும், மூல நோய் தீர்க்கவும் பயன்படுத்தப்படுகிறது.
  • வெந்தயத்தை வறுத்து, நீர் விட்டு காய்த்து தேன் சேர்த்து சாப்பிட வயிற்று கடுப்பு தீரும். திடீரென ஏற்படும் வயிற்று வலிக்கு வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடியாக்கி மோரில் கலந்து குடிக்க தீரும்.
  • 20 கிராம் வெந்தயத்தை வறுத்து, இடித்து 50 கிராம் வெல்லம் சேர்த்து பிசைந்து ஒரு நாள் நான்குமுறை சாப்பிட சீதபேதி நிற்கும். சிறிதளவு வெந்தயத்தை மோரில் ஊறவைத்து அரைத்து, மோரில் கலக்கி குடிக்க குணமாகும்.

fenugreek-uses-side-effects-benefits005

  • வெந்தயத்தை இளநீரில் ஊற வைத்து அரைத்து குடிக்க சீதபேதி கடுப்பு தீரும். வெந்தயத்தை வாழைப் பழத்திற்குள் வைத்து மூடி இரவு பனியில் வைத்து காலையில் மூன்று நாட்கள் சாப்பிட சீதபேதி குணமாகும்.
  • மோரில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் உண்ண வாய்வு, பொருமல் நீங்கும்.
  • வெந்தயம், கடுகு, பெருங்காயம், மஞ்சள், இந்துப்பு இவைகளை சம அளவு எடுத்து நெய் வறுத்து பொடியாக்கி உணவுடன் உண்ண வயிற்று வலி தீரும்.
  • ஐந்து கிராம் வெந்தயம், பூண்டு, பெருங்காயம், முருங்கை ஈர்க்கு இலைகளை எடுத்து நீர் சேர்த்து அரைத்து, நீரை வடிகட்டி, மூன்று வேளை ஒரு அவுன்ஸ் வீதம் குடிக்க வயிற்று கடுப்பு தீரும்.
  • இரவில் வெந்தயத்தை தயிரில் ஊற வைத்து, காலையில் அரைத்து சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிட வயிற்றுப் போக்கு தீரும்.
  • வெந்தயத்தை நீராகாரத்தில் ஊற வைத்து இரவில் படுக்கும் முன் சாப்பிடவும். 20 கிராம் வெந்தயம் 50 கிராம் வெங்காயம் இரண்டையும் அரை லிட்டர் விளக்கெண்ணையில் காய்த்து, வடிகட்டி, பாலில் அரை கரண்டி எண்ணெய் விட்டு காலையில் இருபது நாட்கள் குடிக்க கணைச்சூடு தீரும்.
  • 100 கிராம் வெந்தயத்தை வறுத்து, பொடியாக்கி, 200 கிராம் சர்க்கரை சேர்த்து உண்ண பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வயிற்று வலி, இடுப்பு வலி நீங்கும். வெந்தயத்தை கஷாயமாக்கி குடித்தாலும் வலி தீரும்.
  • 200 கிராம் வெந்தயத்தை பாலில் ஊற வைத்து, மீண்டும் இளநீரில் ஊற வைத்து, உலர்த்தி பொடியாக்கி, கற்கண்டை சேர்த்து, காலை உணவுக்குப் பின் ஒரு கரண்டி சாப்பிட்டு சுடுநீர் அல்லது பால் சாப்பிட்டு வர (40 நாள்) உடல் பலம் ஏற்படும். ஆரோக்கியம் பெருகும். தோசைக்கு சேர்க்கும் உளுந்துடன் சிறிதளவு வெந்தயம் சேர்க்க பலம் ஏற்படுவதோடு தோசை நிறமாக இருக்கும்.
  • தேங்காய் எண்ணையில் வெந்தயம், கற்பூரத்தை போட்டு ஊற வைத்து தேய்த்து குளிக்க பேன், பொடுகு ஒழியும். பாலில் ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து தேய்த்து குளிக்க பேன், பொடுகு தீரும்.
  • வெந்தயம், பாசிப்பயறு இவற்றை இரவு ஊற வைத்து காலையில் அரைத்து உடலில் தேய்த்து குளிக்க கற்றாழை நாற்றம் நீங்கும். இதை தலையில் தேய்த்து குளிக்க முடி உதிராது. கண் குளிர்ச்சி ஏற்படும். தலைச்சூடு நீங்கும். பேன், பொடுகு, அரிப்பு நீங்கும்.
  • வெந்தயத்தை மாவாக்கி, இனிப்பு சேர்த்து களி போல கிளறி உண்டு வந்தால் நோய்கள் நீங்கும். உடல் சூட்டையும் கட்டுப்படுத்தும். மேலும் ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து பருக்கள் உள்ள இடத்தில் பூச, பரு மறையும்.

fenugreek-uses-side-effects-benefits003

வெந்தயத்தின் நன்மைகள் (Benefits Of Fenugreek In Tamil)

தாய்பால் சுரக்க உதவும் (Help The Mother To Secrete)

வெந்தயம் பெண்களின் மாதவிடாய் பிரச்சனை முதல் பால் சுரப்பு பிரச்சனை என அனைத்திற்கும் உதவியாக உள்ளது. வெந்தயத்தை பாலில் போட்டு நன்றாக காய்ச்சி சிறிது சர்க்கரை கலந்து பாயாசம் போல செய்து குடித்து வந்தால் தாய்ப்பால் அதிகரிக்கும். மேலும், சாதம் வடித்த கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க தாய்ப்பால் சுரக்கும். தொடர்ந்து வெந்தயம் சாப்பிட்ட வந்தால் கர்ப்பபை சுருங்கும் என மருத்துவர்கள் நிரூபித்துள்ளனர்.

ADVERTISEMENT

மாதவிடாய் பிரச்சணைக்கு (Helpful During Menstruation)

மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலி மற்றும் அசௌகரியத்திற்கு வெந்தயம் ஒரு மிகச்சிறந்த தீர்வாக அமைகின்றது. வெந்தயத்தை தொடர்ந்து உண்டு வந்தால் தள்ளி போகும் மாதவிடாய் மற்றும் திட்டுகள் போன்று சூட்டினால் ஏற்படும் மாதவிடாய் பிரச்சணைகள் நீங்கும்.

மாதவிடாய் வலிகளை குறைக்கின்றது (Reduces Mentrual Pain)

மாதவிடாய்யின் போது பெண்களுக்கு ஏற்படும் அசௌகரியத்தை முற்றிலுமாக குறைக்கின்றது. எனவே, அதை உட்கொள்வதால் மனநிலை சுழற்சி, மன அழுத்தம், பிடிப்புகள், மற்றும் அசாதாரண பசி வேதனையை போன்ற மாதவிடாய் நின்ற அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. மாதவிடாய் சில பெண்களுக்கு நிற்கும் போது ஏற்படும் உபாதைகளையும் வெந்தயம் சரி செய்கின்றது.

கொழுப்பை குறைக்கின்றது (Reduces Cholesterol)

வெந்தயத்தை தொடர்ந்து உணவில் எடுத்துக்கொண்டு வந்தால் தேவையற்ற ஊள சதை என சொல்லப்படும் கொழுப்புகள் முற்றிலுமாக குறைகின்றது. இதனால் பெரிதாக ஏற்படும் ஹாட்டர் அட்டாக், ஸ்ட்ரோக், பிடிப்புகள் மற்றும் வாயு பிரச்சணைகள் முற்றிலுமாக நீக்கப்படுகின்றது.

பெருங்குடல் புற்று நோய் (Colon Cancer)

சப்போனின்ஸ், ஹெமிசெல்லூலோஸ், மெகிலேஜ், டானின் மற்றும் பெக்டின், குறைந்த கொழுப்பு அளவு கொண்ட ஸ்டார்ச் பாலிசாக்கரைடுகள் மற்றும் பித்த உப்புக்களை பெருங்குடலின் மூலம் மறுசுழற்சி செய்யப் பயன்படுகின்றது. இதனால் பெருங்குடலில் கழிவு தங்காமல் இருக்க உதவுவதால் புற்று நோய் பாதிப்பை முற்றிலுமாக தடுகின்றது.

ADVERTISEMENT

fenugreek-uses-side-effects-benefits007

கார்டியோவாஸ்குலர் அபாயங்களை குறைக்கிறது (Reduces The Cardiovascular Risk)

வெந்தயத்தில் அதிகமாக பைபர் இருப்பதால் இருதயத்தை பெலப்படுத்துகின்றது. இதனால் இருதயத்தில் ஏற்படும் பிர்சசணைகளை முற்றிலுமாக தடுக்க உதவுகின்றது.

பசியின்மையை போக்குகின்றது (Helps Keep The Intestine Clean)

வெந்தயம் தொடர்ந்து சாப்பிடுவதால் செரிமானம் அதிகமாக நடைபெறுகின்றது. இதனால் பசியின்மையை போக்கி உப்பிசத்தினால் ஏற்படும் பாதிப்புகள் தடுக்கப்படுகின்றது. வயிறு பொறுமல் நீக்கி குடலை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுகின்றது.

சர்க்கரை நோய் (Good For Diabetes)

வெந்தயத்தில் அதிக அளவில் எளிதாகக் கரையும் நார்ச்சத்து உள்ளது. இது, ஜீரணத்தின் வேகத்தைக் குறைத்து கார்போஹைட்ரேட் உணவுகளை உண்ணும் அளவையும் குறைக்கும். எனவே, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைக்க உதவுகின்றது.

ADVERTISEMENT

மலச்சிக்கல் பிரச்சணை (Helpful For Constipation Problem)

தொடர்ந்து காலையில் வெந்தயம் சாப்பிட்ட வருவதால் நாட்பட்ட மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சணைகள் தீர்க்கப்படுகின்றது. சாப்பாட்டை செரிமானம் செய்வதுடன் வயிற்றை நன்கு சுத்தமாக வைத்திருக்க உதவுகின்றது.

கிட்னி பிரச்சணைக்கு (Helful For Kidney Problems)

சிறுநீரகத்தில் கற்கள் மற்றும் தொடர்ந்து எரிச்சல் உணர்வை சந்நதித்து வந்தால் வெந்தயத்தை முதல் நாள் வெது வெதுப்பான நீரில் ஊர வைத்து சாப்பிட்டு வந்தால் சிறு நீரக எரிச்சல் மற்றும் கிட்னி பிரச்சணைகள் முற்றிலுமாக நீங்கும்.

தொண்டை புண் நிவாரணம் (Removes Ulcer)

தொண்டையில் ஏற்படும் அல்சர், புண், வலி மற்றும் கொப்பலங்கள் ஆகியவற்றை வெந்தயம் முற்றிலுமாக நீக்குகின்றது. இருமல் மற்றம் தொண்டை கரகரப்பிலிந்து நல்ல நிவாரணம் தருகின்றது.

எரிச்சல் (Helpful In Chest Allergies And Irritation)

வெந்தயத்தை ஊர வைத்த தண்ணீரை குடிப்பதால் நெஞ்சு எரிச்சல் மற்றும் ஒவ்வாமை குணமாகுகின்றது. தொண்டையில் புண்ணால் ஏற்பட்ட இடங்களில் வெந்தய தண்ணீர் படும் போது நல்ல இதமாக இருப்பதுடன் உடல் சூட்டை தணித்து குளிச்சி அளிக்கின்றது.

ADVERTISEMENT

fenugreek-uses-side-effects-benefits006

வெந்தயத்தின் பக்க விளைவுகள் (Side Effects Of Fenugreek )

எந்த ஒரு பொருளையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் கட்டாயம் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அது போன்று தான் வெந்தயமும். தேவைக்கு தகுந்த மாதிரி தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் எந்த ஒரு பிரச்சணையும் இருக்காது. அதுவே தேவையை விட அதிகமாக எடுத்துக் கொண்டால் பிரச்சணைதான்.

கர்ப்பிணி பெண்கள் (Too Much Of Fenugreek Can Be Harmful During Pregnancy)

கர்ப்பிணி பெண்கள் வெந்தயத்தை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் கர்ப்ப பை சுருக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கர்ப்ப காலத்தில் சூட்டு வலி ஏற்படும் போது மட்டும் சிறிது வெந்தயம் எடுத்துக்கொண்டால் போதும். அளவிற்கு அதிகமான வெந்தயத்தை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டாம். இது கர்ப்பிணிகளின் கர்ப்பபைக்கு மிகபெரிய பிரச்சணையை ஏற்படுத்தும்.

ஒவ்வாமை (Can Cause Allergies To Some People)

வெந்தயம் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றது. தொடர்ந்து வெந்தயத்தை எடுத்துக் கொள்வதால் சிலருக்கு வாந்தி, மயக்கம், குமட்டல் மற்றும் அரிப்பு போன்ற விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ADVERTISEMENT

குழந்தைகளுக்கு நல்லதல்ல (Not Good For Kids)

சின்ன குழந்தைகளுக்க வெந்தயம் அவ்வளவு நல்லது கிடையாது. அதிக குளிர்ச்சி காரணமாக காய்ச்சல், சலி மற்றும் வாந்தி வர வாய்ப்பு உள்ளது. சில குழந்தைகள் வெந்தயத்தை மெல்லாமல் அப்படியே சாப்பிடுவதால் செரிமான பிரச்சணை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மருந்து மாத்திரை எடுப்பவர்கள் கவனத்திற்கு

மருந்து மாத்திரை எடுப்பவர்கள் வெந்தயத்தை மருத்துவரிடன் பரிசோதணை செய்த பிறகு பயன்படுத்துவது நல்லது. மருத்துவரின் ஆலோசணை இன்றி தொடர் மருந்து எடுப்பவர்கள் பயன்படுத்த வேண்டும். பக்க விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

வயிற்று போக்கு (Can Cause Diarrhea)

தொடர் வெந்தயத்தை எடுப்பதால் சிலருக்கு வயிற்று போக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதிக குளிர்ச்சி மற்றும் குடல் அலர்ஜியால் வயிற்று போக்கு ஏற்படும். இது போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை உடனே அனுகுவது நல்லது.

சில பக்க விளைவுகள் இருந்தாலும் வெந்தயம் ஒரு சிறந்த மருந்து பொருள் மற்றும் ஆரோக்கியமான உணவு தான். மருத்துவரின் ஆலோசணையை பெறுவது நல்லது.

ADVERTISEMENT

fenugreek-uses-side-effects-benefits008

வெந்தயம் தொடர்பான கேள்விகள் (FAQ’s)

1. தினமும் வெந்தயம் எவ்வளவு அளவு எடுத்துக்கொள்ளலாம்?
தினமும் வெந்தயம் எடுத்துக்கொள்ள நினைப்பவர்கள் 30 முதல் 35 அளவில் எடுத்துக்கொள்ளலாம். இதில் அதிக குளிர்ச்சி தன்மை இருப்பதால் சிலருக்கு வயிற்று போக்கு மற்றும் சலதோஷம் ஏற்பட நேரிடும்.

2. உடல் எடையை குறைக்க வெந்தயத்தை எவ்வாறு பயன்படுத்தலாம்?
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் வெந்தயத்தை பொடி செய்து டீயில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். அல்லது வெந்தயத்தை பழங்களுடன் சேர்த்து சாப்பிடலாம்.

3. வெந்தயம் ஒரு பாதுகாப்பான உணவா?
கட்டாயம் வெந்தயம் மிகச்சிறந்த பாதுகாப்பான உணவு தான். அதிக அளவிளான பக்கவிளைவுகள் வெந்தயத்தை இல்லை.

ADVERTISEMENT

4. வெந்தயம் முகத்திற்கு நல்ல பொழிவை தருமா?
வெந்தயத்தை பொடி செய்தோ அல்லது வெந்தயத்தை ஊற வைத்து அரைத்தோ முகத்தில் பேக் போன்று தடவிக்கொள்ளலாம். இதனால் முகம் நல்ல பொலிவுடன் பலபலப்பாக இருக்கும்.

5. வெந்தயம் தாய் பால் சுரப்பை அதிகரிக்குமா?
தாய் பால் கொடுக்கும் தாய் மார்கள் வெந்தயத்தை ஊற வைத்தோ அல்லது வெந்தயம் குழம்பு வைத்தோ சாப்பிடலாம். நிச்சயம் தாய் பால் சுரக்க உதவி செய்யும். வெந்தயம் தாய் மார்களுக்கென மாத்திரைகளாகவும் கிடைக்கின்றது.

6. வெந்தயம் தலை முடிக்கு ஏற்றதா?
அதில் சந்தேகமே வேண்டாம். வெந்தயம் தலை முடிக்கு நல்ல போஷாக்கையும் பொலிவையும் தரும். இதனுடன் செம்பருத்தி ்இலை ஊற வைத்து அரைத்து குளித்தால் நல்ல மினுமினுப்பையும் பொலிவையும் தரும்.

பட ஆதாரம் – gifskey, pexels, pixabay, Youtube

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்திதமிழ்தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.

Read More –

What is Fenugreek in Hindi

ADVERTISEMENT

பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

26 Apr 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT