சேலை கட்டும் வாசனை பெண்களுக்கான பிரத்யேக புடவைகள் ! சம்மர் ஸ்பெஷல் !

சேலை கட்டும் வாசனை பெண்களுக்கான பிரத்யேக புடவைகள் ! சம்மர் ஸ்பெஷல் !

புடவை என்பது பெண்களின் பொக்கிஷம். அவர்கள் அழகை மேலும் அழகாக்கும் மாயக் கண்ணாடி. உடல் வளைவுகளோடு பொருந்தி போகும் அற்புதம். எந்த வகையான பெண்களாக இருந்தாலும் சரி எந்த நாட்டு பெண்களாக இருந்தாலும் சரி புடவை அணிகிற போதுதான் அவர்கள் பெண்மையின் முழுமையை உலகுக்கு எடுத்துரைக்கும் தூதுவர்கள் ஆகிறார்கள்.


புடவைகளில் எத்தனையோ ரகங்கள் இருக்கிறது. பட்டாம்பூச்சியின் பல்வேறு வண்ணங்களை நம்மால் எண்ணி விட முடியும் ஆனால் புடவைகளின் ரகங்களை இவ்வளவுதான் என்று கூறி முடித்து விட முடியாது! காரணம் தினமும் புதிது புதிதாக உருவாகும் ரகங்கள் புடவைக்கு மேலும் சிறப்பு கொடுக்கின்றன. எளிமையான விலை தொடங்கி உயர்ரக விலை வரை பல்வேறு புடவைகள் உள்ளன.


இப்போது கோடை காலம். இந்த சமயத்தில் வெயிலை சமாளித்து சருமத்திற்கு தோழியாக இருக்கும் காட்டன் புடவைகள் ( Cotton sarees) மற்றும் அதன் ரகங்களை பற்றி ஒரு அலசல் ரிப்போர்ட் உங்களுக்காக.


 


கோவை காட்டன்


காட்டன் என்றால் காட்டன் சிட்டியை நாம் விட முடியுமா என்ன. பருத்தி உற்பத்தியில் பெயர் போன கோவை எனும் கோயம்புத்தூரில் உருவாக்கிய புடவைதான் கோவை காட்டன். இதனை அணிபவருக்கு மட்டும்தான் அந்த சுகம் தெரியும். மெல்லிய வண்ணங்களில் பருத்தி நம் உடலோடு தழுவி வெயில் நேரத்தில் காற்றை உள்ளே அனுமதித்து பட்டு போல நம்மை பாதுகாக்கும் கோவை காட்டன் புடவையும் அழகே தனிதான். இது கோவையில் மட்டும் அல்லாமல் உலகெங்கும் உலா வருகிறது. காரணம் ஆன்லைனில் கூட நம்மால் வாங்கி விட முடியும் என்பதுதான்.காஞ்சி காட்டன்


காஞ்சிபுரத்து மக்கள் உருவாக்கிய காட்டன் புடவைகள் செல்லமாக காஞ்சி காட்டன் ஆகியது. இதன் அழுத்தமான நிறங்கள் ஜரிகை சேர்ந்த பெரிய பார்டர்கள் பார்ப்பவரை கவர்ந்து இழுக்கும். இதில் ஆயிரம் புட்டா புடவைகள் பிரசித்தி பெற்றவை. மேலும் பெரிய மயில், இந்திய கோபுரங்கள் என இதன் டிசைன்கள் ஏராளம். அணியும்போதே அழகாகும் பெண் மனம்.மங்களகிரி காட்டன்


மெல்லிய பருத்தி புடவைகளில் பலவித வண்ணங்களை ஏற்றி சிம்பிள் பார்டர்கள் கொடுக்கும் போதும் சரி ஒரே நிற வண்ணத்தில் அதே நிறத்தில் ஜரிகை கொண்டு முடிக்கும் போதும் சரி மங்களகிரி காட்டன்களுக்கு எப்போதுமே மவுசு அதிகம். 300 ரூபாய் தொடங்கி 3000 ரூபாய்க்கும் மேல் இதன் ரகங்களுக்கு ஏற்ப இதன் விலை நிர்ணயிக்கப்படுகிறது. மங்களகிரி காட்டன் எப்போதும் பெண்களின் பெருமை.கலாக்ஷேத்ரா காட்டன்


பளிச் நிறங்கள், எர்த்தி லுக்குகள் என சென்னையின் இப்போதைய ட்ரெண்ட் கலாக்ஷேத்ரா புடவைகள்தான். கோடை காலத்துக்கு தேவையான புடவை இவைதான். பெரிய பிராண்டட் புடவைகளின் லுக் மற்றும் தரம் ஆனால் குறைவான விலை. இதுதான் கலாக்ஷேத்ரா காட்டனில் சிறப்பான விஷயங்கள். சென்னையில் இருப்போர் நேரடியாக சென்று வாங்கலாம். ஒரு சிலர் ஆன்லைனில் பவர்லூம் புடவைகளை கலாக்ஷேத்ரா புடவைகள் என்று விற்கின்றனர்.கம்ப்ச்சாஸ் காட்டன்


ப்ளாக் அண்ட் வைட் காலம் தொடங்கி இன்றைய டிஜிட்டல் காலம் வரை எப்போதும் சாயம் போகாத பிரபலமான டிசைன் செக்கர்ஸ். இந்த டிசைனை அணிபவர்கள் இளமையாக தோன்றுவது இதன் இன்னொரு சிறப்பு. இதில் மினி செக்கர்ஸ் மல்டிபிள் செக்கர்ஸ் என பலவகை உண்டு. இந்த வகை செக் டிசைன்களுக்கு பெயர்போனதுதான் கம்ப்ச்சாஸ் காட்டன்.பெங்கால் காட்டன்


மிக மெல்லிய நெசவில் அற்புதமான வடிவங்கள் அல்லது சிம்பிளான பார்டர்கள் கொண்டது பெங்கால் காட்டன் புடவைகள். பெரும்பாலும் எந்த வண்ணமாக இருந்தாலும் அதில் செய்யப்பட்டுள்ள வேலைப்பாடுகள் அணிபவரை பிரகாசிக்க வைக்கும்.எளிய விலை அதிக அழகு இப்படிப்பட்ட ரகமான பெங்கால் காட்டனை விரும்பாதவர் யார் இருக்க முடியும்.சில்க் காட்டன்


என்றைக்குமே தனது பிரபலத்தை விட்டு கொடுக்காத புடவை சில்க் காட்டன். பருவ பெண்கள் முதல் பாட்டி வரைக்கும் அவரவருக்கு தேவையான விதங்களில் வடிவமைக்கப்பட்டு மெல்லிய ஜரிகை கொண்ட பார்டர் அல்லது பல வடிவங்கள் உள்ளடக்கிய புடவை என சில்க் காட்டன் பெயரை சொன்னாலே சிலிர்க்கும் அளவிற்கு அற்புதமானது இதன் தன்மை. விசேஷங்களுக்கு செல்லும்போது பட்டு புடவைகளுக்கு மாற்றாக இதனை அணியலாம்.படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் ட்விட்டர்


ஷாப்பிங் : பெண்களே! சரியான செலவில், ஸ்மார்ட் ஷாப்பிங் செய்து, ஸ்டைலாக தோன்ற சில வழிகள்


வேலைக்கு செல்லும் பெண்கள் எவ்வாறு உடை அணியலாம்! டிப்ஸ்...


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.


Also read wedding darees other than red you need to check out!