logo
ADVERTISEMENT
home / ஃபேஷன்
‘கிகி’ வரிசையில் இணையத்தைக் கலக்கும் புதிய ‘சேலஞ்ச்’ .. வீடியோ உள்ளே!

‘கிகி’ வரிசையில் இணையத்தைக் கலக்கும் புதிய ‘சேலஞ்ச்’ .. வீடியோ உள்ளே!

உங்களைப் பார்த்து ஒருவர் இதுபோல செய்வாயா? என சேலஞ்ச்(Challenge) செய்துவிட்டால், அதை எப்படியாவது செய்து முடிக்க வேண்டும் என ஒரு
வெறியே உள்ளுக்குள் உருவாகி விடும். இதனால் தான் ஆதிகாலம் தொட்டே மற்றவர்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவதில் சேலஞ்சுகள் முக்கியப்
பங்கு வகிக்கின்றன. பெரியவர்கள், குழந்தைகள், பெண்கள், பிரபலம், ஏழை என யாரும் இதற்கு விதிவிலக்கானவர்கள் கிடையாது. சினிமாவில் கூட
ஹீரோவைப் பார்த்து யாராவது சேலஞ்ச்(Challenge) செய்தால் உடனே நான் அதனை எப்பாடுபட்டாவது செய்து முடிக்கிறேன் என்றுதான் ஹீரோ
சொல்வார். அந்த சேலஞ்ச்(Challenge) சில நேரங்களில் முட்டாள்தனமாக இருந்தாலும் கூட அதுகுறித்து யாரும் கவலைப்படுவதில்லை.

ஐஸ் பக்கெட் சேலஞ்ச்

கடந்த சில ஆண்டுகளாக தொழில்நுட்பத்தின் உதவியால் ஐஸ் பக்கெட் சேலஞ்ச், கிகி சேலஞ்ச், மோமோ சேலஞ்ச், நீலத்திமிங்கலம் (புளூ வேல்)
சேலஞ்ச், ஃபிட்னஸ் சேலஞ்ச்(Fitness Challenge) போன்ற சேலஞ்சுகள் வெளியாகி உலகளவில் ட்ரெண்டாகி ஹிட்டடித்தன. இதுபோன்ற சேலஞ்சுகளை கிரிக்கெட் வீரர்கள், நடிகர்-நடிகைகள், பிரபலங்கள் ஆகியோர் ஏற்றுக்கொண்டு செய்து காட்டுவார். தாங்கள் செய்வதை இவர்கள் வீடியோவாகவும் வெளியிட்டு தங்களது சக வீரர்களும் இந்த சேலஞ்சை மேற்கொள்ளுமாறு சவால் விடுவர்.

ADVERTISEMENT

ஃபிட்னஸ் சேலஞ்ச்(Fitness Challenge)

இதற்கு உதாரணமாக ஃபிட்னஸ் சேலஞ்சை(Fitness Challenge) கூறலாம். விராட்கோலி இந்த சேலஞ்சை மேற்கொள்ளுமாறு பிரதமருக்கு சவால்விட,
அவரும் அதனை ஏற்றுக்கொண்டு பல லட்சங்களில் அந்த சேலஞ்சினை வெற்றிகரமாக முடித்தார். இதனால் இந்தியா முழுவதும் இந்த சேலஞ்ச் வெகு வேகமாகப் பரவியது.

கிகி சேலஞ்ச்

ADVERTISEMENT

ஓடுகின்ற காரில் இருந்து திடீரென கீழிறங்கி டான்ஸ் ஆடிவிட்டு மீண்டும் காரில் ஏறி அமரவேண்டும் என்பது தான் கிகி சேலஞ்ச். இதனை ஹாலிவுட்
பிரபலங்கள் தொடங்கி கோலிவுட் பிரபலங்கள் வரை பலரும் செய்துகாட்டி வீடியோவாக வெளியிட, இந்திய போலீசார் பல்வேறு எச்சரிக்கைகளை
விடுத்து இந்த சேலஞ்சை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மோமோ சேலஞ்ச்-நீலத்திமிங்கலம் (புளூ வேல்) சேலஞ்ச்

ADVERTISEMENT

மேலேபார்த்த சேலஞ்சுகளை விட பன்மடங்கு ஆபத்தானதாக இந்த இரண்டு சேலஞ்சுகளும் கருதப்பட்டன. யாரோ ஒருவரின் கட்டளைகளுக்கு ஏற்ப
விளையாடி, கடைசியில் தற்கொலை செய்துகொள்ளும்படி கட்டளை இடுவதுதான் இந்த இரண்டு சேலஞ்சுகளின் தனித்தன்மையாக இருந்தது. இதில் நீலத்திமிங்கலம் சேலஞ்ச் கையில் பிளேடால் திமிங்கலத்தை வரைந்து கொள்வதாக இருந்தது. இந்த இரண்டு சேலஞ்சுகளையும் கண்டு பெற்றோர்கள் அலற, ஒருவழியாக காவல்துறையின் அறிவுரை, கண்காணிப்பு போன்றவற்றால் இந்த இரண்டு சேலஞ்சுகளும் முடிவுக்கு வந்தன.

நில்லு நில்லு

ஒரு விஷயத்திற்கு பழகிவிட்டால் அதற்கு அவ்வளவு எளிதில் எண்ட்கார்டு போட்டுவிட முடியாது என்பதற்கு ‘நில்லு நில்லு சேலஞ்ச்’ ஒரு சிறந்த
உதாரணம். கேரளாவில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘ரெயின் ரெயின் கம் அகைன்’ படத்தில் இருந்து ‘நில்லு நில்லு‘ என்னும் பாட்டை
பாடிக்கொண்டு, திடீரென நடுரோட்டில் செல்லும் வாகனங்களை வழிமறித்து கையில் இலைகளுடன் ஆட ஆரம்பித்தனர். பெண்கள், குழந்தைகள்,
இளைஞர்கள் என யாரும் இதற்கு விதிவிலக்காக இல்லை. கடைசியில் கேரள காவல்துறை வழக்கம்போல படாதபாடுபட்டு இந்த சேலஞ்சை
முடிவுக்குக் கொண்டு வந்தனர்.

ADVERTISEMENT

ரைஸ் பக்கெட் சேலஞ்ச்

தலையில் ஒரு பக்கெட் ஐஸ் தண்ணீரை ஊற்றிக்கொள்ள வேண்டும் என்ற ஐஸ் பக்கெட் சேலஞ்சுக்கு மாற்றாக ரைஸ் பக்கெட் சேலஞ்ச் உருவானது.
அதன்படி ஏழைகளுக்கு ஒருபடி அரிசியை இலவசமாக வழங்கி, அதனை மற்றவர்களுக்கு சவாலாக விடுக்க வேண்டும். அந்த சவாலை உருவாக்கிய
ஹைதராபாத்தை சேர்ந்த மஞ்சுலதா கலாநிதிக்கு ஐநாவின் கர்மவீரா சக்ரா விருதும் வழங்கப்பட்டது. அதேபோல், இயலாதவர்களுக்கு உணவு
வழங்கிவரும் அமைப்பான ‘ஃபுட் பேங்க் – இந்தியா’ எனும் அமைப்பை சேர்ந்த சினேகா மோகன் தாஸ் சமீபத்தில் #CleanPlateChallenge என்ற சவாலை உருவாக்கினார். அதாவது ஒருவர் தன் தட்டில் உள்ள உணவு முழுவதையும் வீணாக்காமல் சாப்பிட்டு காலியான தட்டை புகைப்படமாக வெளியிட வேண்டும். உலகம் முழுவதும் இன்று கடும் சவாலாக உள்ள உனவு வீணாகுதல் பிரச்சினைக்கான சிறிய விழிப்புணர்வாக இந்த நகர்வு பார்க்கப்பட்டது. இதேபோல ஃபிட்னஸ் சேலஞ்சையும்(Fitness Challenge) இந்த வரிசையில் சேர்த்துக்கொள்ளலாம்.

டிரையாங்கிள் டான்ஸ் சேலஞ்ச்(Triangle Dance Challenge)

ADVERTISEMENT

மேலே சொன்ன சேலஞ்சுகளின் வரிசையில் தற்போது புதிய சேலஞ்ச் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

டிரையாங்கிள் டான்ஸ் சேலஞ்ச்(Triangle Dance Challenge) என பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்த சேலஞ்சில் மூன்று பேர் தங்களது கைகளை கோர்த்துக்கொண்டு நடனமாடி, அதனை வீடியோவாக வெளியிட வேண்டும் என்பது தான் சவால். டிக்டொக் புண்ணியத்தில் பலரும் நடனக்கலைஞர்களாக மாறிக்கொண்டிருக்கும் வேளையில் இதுபோன்ற சேலஞ்சுகள் வந்தால் விட்டுவிடுவார்களா என்ன?

டான்ஸ்

ADVERTISEMENT

ஆபிஸ், வீடு என பல இடங்களிலும் இந்த டிரையாங்கிள் டான்ஸ் சேலஞ்சினை(Triangle Dance Challenge) பலரும் வெற்றிகரமாக அரங்கேற்றி சமூக வலைதளங்களில் பகிர்ந்து லைக்ஸ்களை குவித்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரையாங்கிள் டான்ஸ் சேலஞ்ச்(Triangle Dance Challenge) வீடியோக்கள் அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகின்றன. டிக்டொக் புண்ணியத்தால் நீங்களும் வெகுவிரைவில் இதுபோன்ற டிரையாங்கிள் டான்ஸ் சேலஞ்ச்(Triangle Dance Challenge) வீடியோக்களை பார்க்கும் சூழ்நிலை வரலாம்.

அவ்வளவு ஏன் உங்கள் டான்ஸ் திறமையின் மேல் நம்பிக்கை வைத்து நீங்களும் இந்த டிரையாங்கிள் டான்ஸ் சேலஞ்சை(Triangle Dance Challenge) மேற்கொண்டு வீடியோ பகிரும் சூழ்நிலையும் வரலாம், எது எப்படியோ மோமோ, நீலத்திமிங்கலம், கிகி,நில்லு நில்லு போன்ற ஆபத்தான சேலஞ்சுகளை ஊக்குவிக்காமல், ஆரோக்கியமான சவால்களை உருவாக்கி பிறருக்கு சேலஞ்ச் விடுப்பது நமக்கும்-நாட்டிற்கும் ரொம்பவே நல்லது.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

ADVERTISEMENT

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப்
ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான
மிகச்சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

13 Mar 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT