'திருமணத்துக்கு' அப்புறம் இதெல்லாம் நீங்க 'என்ஜாய்' பண்ணி இருக்கீங்களா?

'திருமணத்துக்கு' அப்புறம் இதெல்லாம் நீங்க 'என்ஜாய்' பண்ணி இருக்கீங்களா?

நமக்கென ஒரு விஷயம் நடைபெறும்போது அது எல்லையில்லாத மகிழ்ச்சியை நமக்கு அளிக்கும். அதிலும் திருமணம்(Wedding) என்பது வாழ்க்கையில் ஒருமுறை தான் வரும் என்பதால் அதுகுறித்த வண்ணமயமான கனவுகள் அனைவர் வாழ்விலும் எக்கச்சக்கமாக இருக்கக்கூடும். இதுபோன்ற விஷயங்களில் ஆர்வம் இருந்தாலும் பசங்க வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்கள். ஆனால் தங்கள் வீட்டைவிட்டு இன்னொரு இடத்துக்கு செல்வதால் பெண்களுக்கு ஒரே நேரத்தில் சங்கடம், சந்தோஷம் இரண்டுமே திருமணத்தின்(Wedding) போது இருக்கும்.ஒருபுறம் பிறந்த வீட்டைவிட்டு செல்லப்போகிறோம் என்ற கவலை மறுபுறம் திருமணம்(Wedding) குறித்த வண்ணமயமான கனவுகள், திருமணத்துக்கு
பிறகு வாழ்க்கை எப்படி இருக்குமோ? என்ற பயம் என பெண்கள் கலவையான உணர்ச்சிகளுடன் காணப்படுவார்கள். இங்கு தங்களின் திருமணத்திற்குப் பின் பெண்கள் தங்கள் வாழ்வில் என்ன மாதிரியான விஷயங்கள் இருக்கும்? அவர்கள் திருமண வாழ்க்கையை எந்தெந்த வழிகளில் என்ஜாய் செய்யக்கூடும்? போன்ற விஷயங்களை பார்க்கலாம்.


 Also Read About ஆண்டு சடங்குகள்புதிய பெற்றோர்கள்


திருமணத்துக்கு(Wedding) பின் உங்களுக்கு மாமனார்,மாமியார் வடிவில் புதிய பெற்றோர்கள் கிடைப்பார்கள். பெற்றோர்கள் மட்டுமின்றி நாத்தனார்,தாத்தா, மாமா, அத்தை,பாட்டி என ஏராளமான உறவினர்கள் கிடைக்கக்கூடும். இதனால் உங்களைச்சுற்றியும் எப்போதும் கலகலப்பான மனிதர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள். நீங்கள் தனியாக வசிக்கும் பட்சத்தில் உங்கள் பெற்றோர் தவிர மாமியார்-மாமனார் என புதிய உறவினர்களும் உங்களுக்கு கால் செய்து உங்கள் நலன் குறித்து அக்கறையாக விசாரிப்பார்கள்.காலண்டர்


திருமணத்துக்கு பின் முதல் ஒருசில மாதங்களுக்கு உங்கள் காலண்டர் நிரம்பி வழியக்கூடும. தங்கள் வீட்டு விஷேசங்களில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என உங்கள் உறவினர்கள் விரும்புவர். புது மணப்பெண், மாப்பிள்ளையை பார்க்க அனைவரும் ஆர்வமாக இருப்பார்கள் என்பதால் ஒருசில மாதங்கள் நீங்கள் அலைந்து திரியவேண்டியது இருக்கும்.


விருந்து


நெருங்கிய உறவினர்கள் போட்டிபோட்டு புது மணப்பெண், மாப்பிள்ளை இருவரையும் விருந்துக்கு அழைப்பர். கிட்டத்தட்ட நீங்கள் அனைவரின்
வீடுகளுக்கும் செல்ல வேண்டியது. இது தவிர்த்து வெளி விஷேசங்களிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டியது இருக்கும். இதனால் உங்கள் டயட்டை
சில மாதங்களுக்கு ஒத்திவைத்து சுவையான உணவுகளை தினந்தோறும் சாப்பிட வேண்டிய சூழ்நிலையில் இருப்பீர்கள். விருந்து, உபசரிப்புகள்
முடிந்தவுடன் உங்கள் பழைய ட்ரெஸ்களை அநேகமாக நீங்கள் தூக்கிப்போட வேண்டியது இருக்கும்.உங்களது நாட்கள்


திருமணத்துக்கு பின் நீங்கள் ஒருவேளை வேலைக்கு செல்பவராக இருந்தால் உங்களது பொழுதுகள் உங்களுக்கே சரியாக இருக்கும். உங்கள்
துணையை நினைப்பது தொடங்கி அவரை எப்போது சென்று பார்ப்போம்? என ஏங்க ஆரம்பித்து இருப்பீர்கள். உங்கள் ஆபிஸ் வொர்க்கை முடித்துவிட்டு
அவரை எப்போதுடா சென்று பார்ப்போம் என ஒவ்வொரு நொடியும் மணியைப் பார்த்து பொழுதை நெட்டித்தள்ளுவீர்கள்.


டபுள் பர்த்டே


திருமணத்துக்கு பின் வரும் முதல் பிறந்தநாள் மறக்க முடியாததாக அமையும். கேக் தொடங்கி பரிசுகள் வரை அனைத்தும் உங்களுக்கு டபுளாக
கிடைக்கும். உங்கள் அன்புக்கணவர் தொடங்கி அப்பா-அம்மா வரை பரிசுகளை வாரி வழங்குவார்கள். இதனால் உற்சாகத்துக்கு துளியும்
குறைவிருக்காது.வாரநாட்கள்


வார விடுமுறை நாட்களில் உங்கள் தோழிகள் உங்களை சந்திக்க ஆசைப்பட்டு உங்கள் வீட்டுக்கு வருவார்கள். இது உங்களது மகிழ்ச்சியை மேலும் பெருக்கெடுத்து ஓடச்செய்திடும்.


திடீர் மாற்றம்


குடும்பம் தொடர்பான விஷயங்களில் உங்களின் ஆலோசனையையும் கேட்க ஆரம்பிப்பர். திடீரென உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். சில
சமயங்களில் ஒரு குடும்பத்தின் தலைவியாக நீங்கள் மாறவேண்டியது இருக்கும். இதுநாள்வரை இருந்த சிறுபிள்ளைத்தனம் மறைந்து முதிர்ச்சியுடன் விஷயங்களை கையாள ஆரம்பித்து இருப்பீர்கள்.


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப்
ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான
மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.