'சண்டை'க்குப்பின் தம்பதிகள் முதலில் இதைத்தான் செய்வார்களாம்!

'சண்டை'க்குப்பின் தம்பதிகள்  முதலில் இதைத்தான் செய்வார்களாம்!

கணவன்-மனைவி சண்டையை கிரமாப்புறங்களில் 'வீட்டுக்கு வீடு வாசல்படி' தான் என்பர். அதாவது அனைத்து வீடுகளிலும் வாசல்படி இருப்பது போல எல்லா வீடுகளிலும் சண்டை(Fight) சகஜம் என்பதை இப்படி மறைமுகமாகக் குறிப்பிடுவர். சண்டைக்குப்பின் தம்பதியர் தங்களுக்குள் எப்படி சமாதானம் ஆகலாம் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.


மன்னிப்பு


நேசமுள்ள தம்பதியர்(Couples) சண்டை(Fight) போட்டு முடித்தபின் தனது துணையிடம் ஆத்மார்த்தமாக மனமுருகி மன்னிப்பு கேட்பர். இதன் வழியாக தங்களது துணையை அவர்கள் எவ்வளவு தூரம் நேசிக்கின்றனர், அவர்கள் மீது எவ்வளவு அன்பு வைத்துள்ளனர் என்பதை வெளிப்படுத்துகின்றனர். இதுபோல சண்டைக்குப்பின் மன்னிப்பு கேட்பது துணையின் மீதான உங்கள் நேசத்தை மேலும் வலுப்படுத்தும்.(எல்லா நேரமும் நீங்கள் மட்டுமே மன்னிப்பு கேட்பது போல நடந்து கொள்ளாதீர்கள்)


செக்ஸ்


ஒருவருக்கொருவர் சண்டை(Fight) போட்டு கோபங்கள் தீர்ந்தபின் செக்ஸ் வைத்துக்கொள்வதை அநேக தம்பதிகள் விரும்புகின்றனர். ஒருவர் மீது
மற்றொருவர் அன்பு வைத்திருக்கும் பட்சத்தில் தம்பதிகள்(Couples) இதனை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்வதில்லை. இந்த வழியை நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம்.சந்தோஷம்


இதுபோன்ற சண்டைகள் தான் ஒரு தாம்பத்தியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்பதை தம்பதிகள் நன்கு அறிவர். மனமொத்த தம்பதிகள்
சண்டைக்குப்பின் ஒருவரை ஒருவர் மகிழ்ச்சியுடன் வைத்திருப்பதற்கு சிறுசிறு பரிசுகளை கொடுத்து உற்சாகமூட்டிக் கொள்வர். இதன்வழியாக
ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்திக் கொள்ளவும் அவர்கள் தயங்குவதில்லை. இதேபோல நீங்களும் உங்கள் துணையிடம் நடந்து கொள்வது உங்கள் இல்லற வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.


சாப்பாடு


சண்டை(Fight) போட்டு நிறைய எனர்ஜி செலவாகி இருக்கும் என்பதால் ஒரு நீண்ட சண்டைக்குப்பின் அதனை ஈடுகட்டும் விதமாக நன்கு சாப்பிட விரும்புவர். பெரும்பான்மையான தம்பதிகள் தங்கள் சண்டைகளை மறந்து ஒருவருக்கொருவர் அருகருகே அருகில் அமர்ந்து சாப்பிடுவர். சாப்பிடுவதால் நிறைய விஷயங்களை சமாளிக்க முடியும் என தம்பதியர் நம்புகின்றனர். இந்த விஷயத்தை நீங்களும் செய்து பார்க்கலாம்.


நினைவுகள்


சண்டையின்போது ஒருவரை ஒருவர் காயப்படுத்திக்கொண்டு இருப்பீர்கள். இது உங்களுக்கு கசப்பாக இருக்கக்கூடும். ஆனால் இந்த எண்ணங்களை
புறந்தள்ளிவிட்டு நீங்கள் ஏன் அவரைக் காதலித்தீர்கள்? என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதுகுறித்த மகிழ்ச்சியான தருணங்களை நினைவுபடுத்திக்
கொள்ளுங்கள். இது மீண்டும் உங்களை இணைப்பதற்கு உதவும்.
அணைப்பு


ஒருவரையொருவர் அணைத்துக்கொள்வது உங்கள் இருவருக்கும் இதமாக இருக்கக்கூடும். சூடான ஒரு விவாதத்திற்குப்பின் தம்பதியர்(Couples) ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொள்வது ஆறுதலாக அளிப்பதுடன் கோபமான உங்கள் மனநிலையை மாற்றி உங்களைக் கூல் செய்திடவும் உதவும். அதனால் ஈகோ பார்க்காமல் சண்டைக்குப்பின் உங்கள் பார்ட்னரை கட்டிப்பிடித்துக் கொள்ளுங்கள்.


பாராட்டு


உங்கள் துணையுடன் சண்டை(Fight) போட்டு முடித்தபின் அவரின் நிறைகுறைகளை அமைதியாக எடுத்துச்சொல்லுங்கள். அத்துடன் அவரின் நிறைகளை மனதாரத் தெரிவித்து அவரைப் பாராட்டவும் செய்திடுங்கள். பெரும்பாலான தம்பதிகள்(Couples) இப்படி மனம்விட்டு பேசாமல் இருப்பதால் தான் குடும்பத்தில் ஏகப்பட்ட குழப்பங்கள் விளைகின்றன.நடனம்


சண்டை(Fight) போட்டு முடித்தபின் துணையுடன் இணைந்து நடனம் ஆடலாம். இப்படி செய்யும்போது நீங்கள் அவரது கண்ணைப் பார்க்கும்படி இருக்கும். மேலும் ஒருவருக்கொருவர் நெருங்கி ஆடுமாறு நேரலாம். இவை உங்கள் இருவருக்கிடையே நல்ல ஒரு பிணைப்பை வலுவாக உருவாக்கிட உதவும். அத்துடன் நடனம் உங்களை மேலும் நெருக்கமாக்கிட உதவி செய்யும்.


நெட்பிலிக்ஸ்


ஏராளமான தம்பதியர்(Couples) தங்கள் சண்டையை முடித்தபின் டிவி ஷோ அல்லது தியேட்டரில் சென்று படம் பார்ப்பது ஆகியவற்றை செய்வதாக
கூறப்படுகிறது. இதுபோல சண்டைக்குப்பின் செய்வது உங்கள் மனநிலையை ரிலாக்ஸ் ஆக வைத்திட உதவும்.நேரம் அளியுங்கள்


ஒருவேளை நீங்கள் மிகக்கடுமையாக சண்டை(Fight) போட்டுக்கொண்டீர்கள் என்றால் உங்கள் துணைக்கு சற்று நேரம் கொடுங்கள். அவர்கள் தங்களை
ஆசுவாசப்படுத்திக் கொள்ள நேரம் அளியுங்கள். உடனே சென்று பேசும்போது கோபம் ஒருவேளை உங்கள் துணைக்கு குறையாமல் இருந்தால் மீண்டும்
அங்கே ஒரு சண்டை வெடிக்க வாய்ப்பிருக்கிறது. எனவே உங்கள் அந்த சூழலை விட்டு வெளியே வந்திட சற்று நேரம் அளியுங்கள்.


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப்
ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான
மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.