logo
ADVERTISEMENT
home / வாழ்க்கை
நல்ல ஹாஸ்டலா தேடுறீங்களா? இத கொஞ்சம் படிச்சிட்டு போங்க!

நல்ல ஹாஸ்டலா தேடுறீங்களா? இத கொஞ்சம் படிச்சிட்டு போங்க!

படித்து முடித்து வேலை தேடி நல்ல வேலையாக கிடைத்தால் அந்த தருணம் அப்பாடா என ஒரு நிம்மதி வரும். ஆனால் அதைவிடவும் நிம்மதியானது
தருணம் எது தெரியுமா? வேலை கிடைக்கும் இடத்தில் நல்ல ஒரு தங்குமிடம் கிடைப்பது தான். அதுவும் சென்னை போன்ற பெருநகரங்களில்
தங்குவதற்கு ஹாஸ்டல்(Hostel) தேடும்போது தான் வாழ்க்கையின் மொத்த தத்துவத்தையும் நீங்கள் உணர்வீர்கள்.

ஆபிஸ் பக்கத்துல வேணும், பஸ் ஸ்டாப் பக்கத்துல இருக்கணும், மெயின் ஏரியால இருக்கணும், வாஷிங் மெஷின் என எக்கச்சக்க கண்டிஷன்களுடன்
ஹாஸ்டல் தேட ஆரம்பிக்கும் நீங்கள் நாளடைவில் டயர்டாகி, ஹாஸ்டல்னு ஒண்ணு கெடைச்சா போதும் என்ற ஜென் மனநிலைக்கு வந்திருப்பீர்கள். எல்லாத்துக்கும் உதவுற நம்ம கூகுள் ஆண்டவர் இதுக்கு உதவாம போய்டுவாரா? என நினைத்து ஒருவேளை நீங்கள் கூகுளில் ஹாஸ்டல்(Hostel) தேட ஆரம்பித்தால் இவ்ளோ நல்ல ஹாஸ்டல்களா? என பூரிப்படைவீர்கள்.

ஆனா கூகுள்ல தேடுன கையோட நேர்ல போய் ஹாஸ்டல் பார்த்தா பொட்டி, படுக்கையோட சொந்த ஊருக்கு போக ரெடி ஆகிடுவீங்க. அப்படி
இருக்கும் அந்த ஹாஸ்டல்களின் நிலை. வேற எப்படி தான் ஹாஸ்டல் (Hostel) தேடுறது என கேட்கிறீங்களா? நல்ல ஹாஸ்டலா தேடுறீங்களா? இத கொஞ்சம் படிச்சிட்டு(Read) போங்க! என்னோட சொந்த அனுபவத்துல உங்களுக்கு சில டிப்ஸ் சொல்றேன் நல்லா கேட்டுக்கங்க.

ADVERTISEMENT

விதிமுறைகள்

ஒரு ஹாஸ்டல்(Hostel) போகும்போது அந்த ஹாஸ்டலோட ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் நல்லா படிச்சு(Read)தெரிஞ்சுக்கங்க. சில ஹாஸ்டல்ல இந்த டைமுக்குள்ள வரணும், வெளில போகும்போது கையெழுத்து போட்டு போகணும். ஊருக்கு போனா இன்பார்ம் பண்ணனும்னு சொல்வாங்க. சில ஹாஸ்டல அந்த மாதிரி எந்த டைமிங்கும் இருக்காது. நீங்க நெனச்ச நேரத்துக்கு வெளில போயிட்டு வரலாம்.

சுத்தி பாருங்க

ADVERTISEMENT

ஹாஸ்டல் போனா உங்க ரூம் மட்டும் பாத்துட்டு வராம மொத்த இடத்தையும் சுத்தி பாருங்க. துணி எங்க தொவைக்கணும், மாடி எத்தன மணி வர திறந்திருக்கும். டிவி ஹால்ல எவ்ளோ நேரம் டிவி பாக்கலாம். சாப்பாடு எங்க சாப்பிடனும். சமைக்கற எடம் எப்படி இருக்கு? அப்படின்னு
எல்லாத்தையும் பாருங்க. அதே மாதிரி ஹாஸ்டல் பாக்க போகும்போது ரொம்ப உள்ள தேடாம ஓரளவு நடமாட்டமும், பாதுகாப்பும் உள்ள பகுதியா
பாருங்க.

வாஷிங்மெஷின்(Washing Machine)

ADVERTISEMENT

ஹாஸ்டல்ல என்னென்ன வசதி இருக்குன்னு கேட்டு தெரிஞ்சுக்கங்க. வைஃபை, வாஷிங்மெஷின்(Washing Machine), ஹீட்டர்னு என்னவெல்லாம் இருக்குதுன்னு கேட்டு தெரிஞ்சுக்கங்க. அதேபோல கரண்ட் பில் எவ்ளோ வரும்? ஒரு யூனிட்டுக்கு எவ்ளோ போடறாங்கன்னு தெரிஞ்சுக்கறதும் உங்களுக்கு நல்லது. ரூம், பாத்ரூம் கிளீன் பண்ண ஆள் வச்சு இருக்காங்களா? எத்தன நாளுக்கு ஒருதடவ கிளீன் பண்ணுவாங்கனு கரெக்டா கேட்டுக்கங்க.

சாப்பாடு(Food)

சில இடத்துல லிமிடெட் சாப்பாடு(Food) இருக்கும், சில இடத்துல அன்லிமிடெட் சாப்பாடு(Food) இருக்கும். ஒருசில ஹாஸ்டல்ல சாப்பாடு(Food) எடுக்க, சாப்பிட டைமிங் இருக்கும். சில இடத்துல எந்த டைம் போனாலும் சாப்பாடு இருக்கும். ஒருவேள உங்களுக்கு ஷிப்ட்ல வொர்க் பண்றமாதிரி இருந்தா உங்க டைமிங் ஏத்தமாதிரி சாப்பாடு கெடைக்குமானு? கேட்டுக்கங்க.

ADVERTISEMENT

சமைச்சு சாப்பிடலாம்

சாப்பாடு இல்லாமயும் ஹாஸ்டல்ஸ் இருக்கு கேஸ் சிலிண்டர் குடுத்துடுவாங்க, நீங்களே சமைச்சுக்கலாம். இல்ல வெளில வாங்கி சாப்டுக்கலாம். பிரிட்ஜ், வாஷிங்மெஷின்(Washing Machine), ஹீட்டர், டிவி, ஏசி,வைஃபை எல்லா வசதியும் இருக்கும். சாப்பாடு மட்டும் இருக்காது. இப்போ இதுமாதிரி ஹாஸ்டல்ஸ் ரொம்ப பேமஸ் ஆகிட்டு வருது. அதனால உங்களுக்கு சாப்பாடு ஒரு பிரச்சினை இல்லைனா நீங்க இதுமாதிரியும் டிரை பண்ணலாம். முக்கியமா உங்க பிரண்ட்ஸ் உங்களுக்கு தெரிஞ்சவங்க யாராவது ஹாஸ்டல்ல தங்கி இருந்தா அவங்ககிட்ட சொல்லி தேடுங்க. உங்களுக்கு நேரம், செலவுன்னு எல்லா மிச்சமாகும். இந்த டிப்ஸ் எல்லாம் படிச்சு(Read)பாலோ பண்ணி நல்ல ஹாஸ்டலா தேடுங்க, வாழ்க்கைய எஞ்ஜாய் பண்ணுங்க…

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

ADVERTISEMENT

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப்
ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான
மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

01 Feb 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT