தமிழ் சினிமாவுல ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்துக் காத்திருக்கக் கூடிய டாப் நடிகர்களோட 5 படங்கள்(Movies) பத்தின டீடெயில்ஸ் இங்கே குடுத்து இருக்கோம். படிச்சுப்பார்த்து இதுல நீங்க எந்த படத்துக்கு(Movie) மரண வெயிட்டிங் அப்படின்னு கமெண்ட்ஸ்ல மறக்காம குறிப்பிடுங்க..
என்ஜிகே-சூர்யா (NGK)
நந்த கோபால குமரன் சுருக்கமாக என்ஜிகே(NGK) என தலைப்பு வைத்து முழுநீள அரசியல் படமொன்றில் நடித்திருக்கிறார் சூர்யா. நீண்ட இடைவெளிக்குப் பின் ஆயுத எழுத்து பாணியில் ஒரு படம், செல்வராகவன் இயக்கம், யுவன் இசை, டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிப்பு என ரசிகர்கள் இப்படத்தினை எதிர்நோக்கி காத்திருக்க எக்கச்சக்க விஷயங்கள் உள்ளன. அதனை வலியுறுத்துவது போல சமீபத்தில் வெளியான என்ஜிகே(NGK) படத்தின் டீசரும் ரசிகர்கள் மத்தியில் நெருப்பினைப் பற்றவைத்து சென்றுள்ளது.
இப்படத்தின் டீசரைப் பார்த்த பலரும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்து இருப்பதாகத் தெரிவித்து வருகின்றனர். தானா சேர்ந்த கூட்டம் படத்துக்கு பின் சூர்யா நடிப்பில் வெளியாகும் இப்படம் நடிப்பில் அவரது மற்றுமொரு பரிமாணத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழில் முழுநீள அரசியலை மையமாக வைத்து வெளியாகும் இப்படம் அரசியல் படங்கள் வரிசையில் ஒரு தனித்த இடத்தினைப் பிடிக்குமா? என்பதை அறிய நாம் காத்திருப்போம்.அநேகமாக படம் கோடை விடுமுறையை குறிவைத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read About அதிரடி தமிழ் திரைப்படங்கள்
தல 59-அஜீத் குமார்
தல(Thala)அஜீத்(Ajith) ரசிகர்களுக்கு இது கொண்டாட்டமான ஆண்டு போல. இந்தாண்டு தொடக்கத்தில் வெளியான விஸ்வாசம், பாகுபலி உட்பட அனைத்து படங்களின் வசூலையும் உடைத்து தொடர்ந்து முன்னேறி வருகிறது. அதே வேளையில் தன்னுடைய அடுத்த 2 படங்களின் அறிவிப்புகளையும் அஜீத்(Ajith) வெளியிட்டு விட்டார். இந்தியில் வெளியாகி ஹிட்டடித்த பிங்க் படத்தின் ரீமேக் தமிழில் தல 59 ஆகத்தயாராக உள்ளது. அதேபோல தல 60 படமும் இந்தாண்டு மத்தியில் தொடங்கி அடுத்தாண்டு வெளிவரும் என அறிவிக்கபட்டுள்ளது.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்த 2 படங்களையும் தயாரிக்கிறார். தீரன் புகழ் ஹெச்.வினோத் இரு படங்களிலும் தல அஜீத்தை(Ajith) இயக்கவுள்ளார். சமூக அக்கறை உள்ள படம் என்பதோடு, இசைக்கு யுவன் மற்றும் ஸ்ரதா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், வித்யாபாலன் என காஸ்டிங் பட்டியல் உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் படக்குழு கெத்து காட்டி வருவதால் தல ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவான ரசிகர்களும் இப்படத்தை(Movie) ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறது.
தளபதி 63-விஜய்
தெறி, மெர்சல் படங்களுக்குப் பின் அட்லீ-விஜய் கூட்டணி, ஹீரோயினாக நயன்தாரா, இசைக்கு ஏ.ஆர்.ரஹ்மான், பாடல்களுக்கு விவேக் என
மிகப்பெரும் நட்சத்திரக் கூட்டணி+பொருட்செலவில் உருவாகி வரும் படம் தளபதி 63. மெர்சல்,சர்கார் சென்டிமெண்டில் இந்தாண்டு தீபாவளிக்கு படத்தை வெளியிட ஏஜிஎஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.கில்லி படத்துக்குப்பின் முழுநீள ஸ்போர்ட்ஸ் படத்தில் விஜய் நடிக்கும் படம், விஜய்-அட்லீ காம்போ என விஜய் ரசிகர்களுக்கு இப்படத்தினை
எதிர்நோக்கிக் காத்திருக்க ஆயிரம் விஷயங்கள் உள்ளன. அதே நேரம் நயன்தாரா,கதிர் என நடிப்பில் மிரட்டக்கூடியவர்களும் உள்ளதால் பொதுவான ரசிகர்களும் திரையில் படத்தைக் காண அண்ணா பாணியில் ‘ஐ ஆம் வெயிட்டிங்’ என காத்துக் கொண்டுள்ளனர்.
இந்தியன் 2-கமல்ஹாசன்
23 வருடங்களுக்குப்பின் உருவாகும் படம்(Movie), ஷங்கர் இயக்கம், கமல்ஹாசன் நடிப்பு என ரசிகர்கள் எதிர்பார்க்கக்கூடிய அனைத்து அம்சங்களும் இப்படத்தில் உள்ளன. லஞ்சத்துக்கு எதிரான படம் என்பதாலும், இப்படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றிப்படம் என்பதாலும் ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்களும் இப்படத்தினை எதிர்நோக்கி காத்திருப்பதாக தெரிவித்து இருந்தனர். ஹீரோயினாக காஜல் அகர்வால் இப்படத்தில் நடிக்கவுள்ளார். நடப்பு நிகழ்வுகளை ஷங்கர் காட்சிகளாக வைக்கக்கூடும் அதோடு மட்டுமின்றி கமல் நடிப்பும் ரசிகர்களை மிரட்டக்கூடும். ஆனால் படப்பிடிப்பு எப்போது தொடங்கும்? எப்போது வெளியீடு போன்ற தகவல்களை படக்குழு இதுவரை வெளியிடவில்லை. எனினும் ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட்
செய்யக்கூடிய படங்களில் இப்படத்துக்கும் ஒரு தனியிடம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
தலைவர் 166-ரஜினிகாந்த்
கடந்தாண்டு ரஜினி நடிப்பில் காலா, 2.O படங்கள் வெளியாக, இந்தாண்டு தொடக்கத்தில் பேட்ட வெளியானது. இந்த படத்துக்குப்(Movie) பின் ரஜினி மீண்டும் யாருடன் இணையப்போகிறார்? என அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். வழக்கம்போல அவர்களது எதிர்பார்ப்பினை வீணடிக்காத ரஜினி சர்கார் படத்தின் வழியாக இந்தியளவில் பேசுபொருளாக மாறிய ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். இப்படத்துக்காக சுமார் 100 நாட்கள் வரை ரஜினி கால்ஷீட் கொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.அரசியலை மையமாகக்கொண்டு இப்படத்தின் கதைக்களம் இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.
மேலும் நாற்காலி என படத்துக்கு(Movie) தலைப்பு வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ரஜினிக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். எனினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல்களை படக்குழுவினர் வெளியிடவில்லை. மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாம். ரஜினி அரசியல் எண்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படும் நேரத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிப்பதால் இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.