'கெமிஸ்ட்ரி'ல இந்த 'டாப் 10' ஜோடிகள அடிச்சுக்கவே முடியாது!

'கெமிஸ்ட்ரி'ல இந்த  'டாப் 10' ஜோடிகள அடிச்சுக்கவே முடியாது!

அந்த படத்துல ஹீரோ-ஹீரோயின் ரெண்டு பேருக்கும் செமையா கெமிஸ்ட்ரி(Chemistry) வொர்க்அவுட் ஆகியிருக்கு. லவ் சீனெல்லாம் பயங்கரம். ரெண்டு பேரு கெமிஸ்ட்ரிக்காகவே அந்த படத்த எத்தன வாட்டி வேணா பாக்கலாம். இந்த மாதிரி டயலாக்குகள நீங்க அடிக்கடி கேட்டிருக்கலாம். எவ்ளோ பெரிய ஆக்ஷன் படமா இருந்தாலும் அதிலயும் அங்கங்க லவ்வ தூவிவிட்டு ஹீரோவா ரொமாண்டிக்கா காட்டி இருப்பாங்க.முன்ன எல்லாம் ஹீரோ ரொம்ப வயசானவரா இருப்பாரு. ஹீரோயின் அவர சுத்தி சுத்தி ஓடிவந்து டூயட் பாடிட்டு இருப்பாங்க.ஆனா இப்போ நெலம அப்படி இல்ல. ஹீரோ-ஹீரோயின் ரெண்டு பேருமே நல்லா யங்கா இருந்தாதான் லவ் சீன் எல்லாம் எடுபடுது. இதனால இளம்
ஹீரோ-ஹீரோயின் சுத்தி நெறைய படங்கள் வெளியாகுது. அதுல பெரும்பாலான படங்கள் இந்த காலத்து இளைஞர்கள் மத்தியில நல்ல
வரவேற்பையும் பெறுது. அந்தவகையில கோலிவுட்(தமிழ்), டோலிவுட்(தெலுங்கு), சாண்டல்வுட்(கன்னடம்), மல்லிவுட்(மலையாளம்) ஒட்டுமொத்தமா தென்னிந்திய சினிமானு(South Cinema) கொண்டாடப்படுற தென்னிந்திய சினிமாவுல(South Cinema) ரசிகர்களை ரொம்பவே கவர்ந்த டாப் 10 ஆன்-ஸ்கிரீன்(On Screen) ஜோடிகளை(Couples) இங்கே பாக்கலாம்.


1.பிரபாஸ்-அனுஷ்கா ஷெட்டிபாகுபலி படங்கள் வழியா தென் இந்திய சினிமாவுல(South Cinema) மட்டுமில்லாம இந்திய சினிமாவுலயே மிகப்பெரிய இடம் பிடிச்சிருக்க நம்ம பிரபாஸ் தான் இப்போதைக்கு டோலிவுட்டோட மோஸ்ட் எலிஜிபில் பேச்சுலர். இன்னும் கல்யாணமாகாம சுத்திட்டு இருக்குற இவருக்கும் நம்ம 'தேவசேனா' அனுஷ்கா ஷெட்டிக்கும் படங்கள்ல கெமிஸ்ட்ரி(Chemistry) சும்மா அப்புடி இருக்கும். பாகுபலி மட்டுமில்லாம மிர்ச்சி, பில்லா படங்கள்லயும் ரெண்டு பேரு கெமிஸ்ட்ரியும் சும்மா அள்ளுச்சு. நெஜத்துல ரெண்டு பேரும் காதலிக்கிறாங்க சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கப் போறாங்கன்னு தெனமும் ஒரு கிசுகிசு வந்துட்டு இருக்கு. ஆனா ரெண்டு பேருமே தங்களுக்குள்ள காதல் இருக்குன்னு சொல்லல.அதேநேரம் இல்லன்னும் சொல்லல.


2. துல்கர் சல்மான்-நித்யா மேனன்ஓ காதல் கண்மணி அப்படின்னு ஒரே ஒரு படம் தான் நடிச்சாங்க. ஆனா இன்னும் இவங்க ரெண்டு பேருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி(Chemistry)
இங்க பேசுபொருளாகவே இருக்கு. லிவிங் டூ கெதர் கதையாக வெளிவந்து இளைஞர்கள் மத்தியில் பாராட்டையும் மத்தவங்க கிட்ட கடும்
விமர்சனங்களையும் எதிர்கொண்ட இந்தப்படம் துல்கர்-நித்யா கெமிஸ்ட்ரிக்காகவே வசூலில் பட்டையைக் கெளப்பியது குறிப்பிடத்தக்கது.


3. விஜய் சேதுபதி-மடோனா செபாஸ்டின்தமிழ்ல முன்னணி நடிகரா உயர்ந்துட்டு வர்ற நம்ம விஜய் சேதுபதி நடிக்கிற எல்லா படத்துலயும் எந்த கொறையும் இல்லாம நடிச்சுக் குடுத்துருவாரு.
ஆனா எத்தனையோ ஹீரோயின்ஸ் கூட அவர் நடிச்சு இருந்தாலும் மடோனா செபாஸ்டின் கூட மட்டும் தான் அவருக்கு கெமிஸ்ட்ரி நல்லா வொர்க் அவுட் ஆகும். காதலும் கடந்து போகும், கவண் இந்த ரெண்டு படங்கள்லயும் ரொமான்ஸ் அதிகமா இருக்காது, ஆனா ரெண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி செமையா வொர்க் அவுட் ஆகியிருக்கும்.


4. தனுஷ்-அமலாபால்தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த தனுஷுக்கு செம பிரேக் கொடுத்த படம் தான் வேலையில்லா பட்டதாரி. அவரோட 25-வது படமா
வெளியான வேலையில்லா பட்டதாரி தமிழ்,தெலுங்கு ரெண்டு மொழியிலயும் வசூல வாரிக்குவிச்சிச்சு. இயல்பான கதை, அம்மா செண்டிமெண்ட், என்ஜினியரிங் பசங்களோட சோகம், காமெடி இது எல்லாவத்துக்கும் மேல தனுஷ்-அமலாபால் ரெண்டு பேரோட கெமிஸ்ட்ரியும் படத்த பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்க வச்சது.


5. அல்லு அர்ஜுன்- ரகுல் பிரீத் சிங்டோலிவுட் ஹீரோக்கள்ல நல்ல டான்சர்னு பேர் எடுத்த அல்லு அர்ஜுன் எத்தனையோ ஹீரோயின் கூட சேர்ந்து நடிச்சி இருந்தாலும் ரகுல் பிரீத்
சிங்கோட மட்டும் தான் அவருக்கு கெமிஸ்ட்ரி செமையா வொர்க் அவுட் ஆச்சு. ரெண்டு பேருமே நல்ல ஹைட், கலர் அதோட வயசு வித்தியாசம்
அதிகம் இல்லாததுனால சரோனைடு படத்துல ரெண்டு பேரு கெமிஸ்ட்ரியும் சூப்பரா இருக்கும்.


6. சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷ்


 


தமிழ் சினிமாவுல நம்பர் 1 நாயகியா வலம்வர்ற கீர்த்தி சுரேஷ் சிவகார்த்திகேயனோட ரஜினிமுருகன் படத்துல தான் நாயகியா அறிமுகமானாரு. ரெண்டு பேரு கெமிஸ்ட்ரியும் செமையா வொர்க் அவுட் ஆக தொடர்ந்து ரெமோ, சீமராஜா படத்துலயும் இந்த ஜோடி சேர்ந்து நடிச்சி இளைஞர்கள் மனச கவர்ந்துச்சு.


7. விஜய்-காஜல் அகர்வால்கோலிவுட்டின் தளபதி என கொண்டாடப்படும் நடிகர் விஜய்யுடன் துப்பாக்கி,ஜில்லா, மெர்சல்னு மொத்தம் 3 படத்துல காஜல் அகர்வால் சேர்ந்து நடிச்சு இருக்காங்க. ரொமான்ஸ், டான்ஸ் என ரெண்டு ஏரியாவுலயுமே இந்த ஜோடி சூப்பர்னு சொல்ற அளவுக்கு விஜய்க்கு ஈடு கொடுத்து காஜலும் நல்லா டான்ஸ் ஆடுவாங்க. ,மெர்சல் படத்துல காஜல்-விஜய் வர்ற காட்சிகள் கம்மியா இருந்தாலும் ரெண்டு பேரு கெமிஸ்ட்ரியும் நல்லாவே வொர்க் அவுட் ஆச்சு.

8. அஜீத்-நயன்தாராதமிழ் சினிமாவின் தல என கொண்டாடப்படும் அஜீத்-நயன்தாரா இருவரும் இணைந்து பில்லா,ஏகன், ஆரம்பம்,விஸ்வாசம் என நான்கு படங்களில்
நடித்துள்ளனர். இந்த நான்கு படங்களிலுமே இருவரின் கெமிஸ்ட்ரியும் ரசிக்கக்கூடிய வகையில் இருக்கும். ஒருகட்டத்துக்கு பின் காதல் காட்சிகளில் நடிப்பதை அஜீத் வெகுவாக குறைத்துக்கொண்டார் எனினும் நயன்தாரா-அஜீத் கெமிஸ்ட்ரி ரசிகர்களின் மனங்கவர்ந்த கெமிஸ்ட்ரி(Chemistry) ஆகவே இருக்கிறது.


9. நாக சைதன்யா-சமந்தாபடத்தில் மட்டுமில்லாது நிஜவாழ்விலும் இணைந்த ஜோடி இது. ஏ மாயா சேசாவே படத்தில் முதன்முறையாக இணைந்த இந்த ஜோடி தொடர்ந்து
மனம், ஆட்டோநகர் சூர்யா,த்ரயம் படங்களில் இணைந்து நடித்து ரசிகர்கள் மனதில் நல்ல ஜோடிப்பொருத்தம் என பெயர் வாங்கியது. இருவருக்கும்
இடையிலான கெமிஸ்ட்ரி நன்றாக வொர்க் அவுட் ஆக தற்போது மஜிலி என்னும் படத்தில் திருமணத்துக்குப் பின் மீண்டும் இந்த ஜோடி இணைந்து
நடித்துள்ளது.


10. பிருத்விராஜ்-பாவனாமலையாளம் மட்டுமின்றி தமிழிலும் இருவரும் தனித்தனியாக நடித்து ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தவர்கள். பேருக்கேற்றவாறு ராஜகுமாரன் போல இருக்கும் பிருத்விராஜ்க்கு நல்ல ஜோடி என பாவனாவை சொல்லலாம். இருவருக்கும் இடையில் கெமிஸ்ட்ரி எக்கச்சக்கமாக வொர்க் அவுட் ஆனதில் இதுவரை 7 படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.


இதேபோல தென் இந்திய சினிமாவுல(South Cinema) உங்களோட பேவரைட் ஜோடிகள்(Couples) யாராவது இருந்தா கமெண்ட்ஸ்ல சொல்லுங்க பிரண்ட்ஸ்...


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப்
ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான
மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.