காதல் திருமணங்கள்(Marriage) சகஜமாகி விட்ட இந்தக்காலத்திலும் கூட பெற்றோரால் பார்த்து நிச்சயிக்கப்படும் திருமணங்கள்(Marriage) தான் நம் நாட்டில் அதிகம். தனது மகளுக்கோ, மகனுக்கோ பார்த்துப்பார்த்து திருமணம் செய்து வைக்கவேண்டும் என்பதுதான் ஒவ்வொரு பெற்றோரின் வாழ்நாள் கனவாக இருக்கும். நம்மைப்போல எளிமையான திருமணமாக இருக்கக்கூடாது என ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப்பார்த்து செய்வார்கள்.
பொதுவாக ஒரு வீட்டில் திருமணம்(Marriage) என்றாலே அக்கம் பக்கத்தினர், சொந்தக்கார்கள், நண்பர்கள் வருகையால் ஒருமாதத்திற்கு முன்பிருந்தே வீடு களைகட்டத் தொடங்கிவிடும். பெற்று வளர்த்த மகளை இனி அடிக்கடி பார்க்க முடியாது என்ற எண்ணத்தில் கல்யாணப்பெண்ணுக்கான உபசரிப்பு சற்று கூடுதலாகவே இருக்கும். அத்துடன் மாப்பிள்ளை குறித்த கிண்டல்,கேலிகளும் களைகட்டும்.
அதே சமயம் நீங்கள் திருமண(Marriage) வயதில் இருந்து உங்களுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்றால், என்னென்ன விஷயங்களில் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை? இங்கே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் காதல் திருமணங்களுக்கு இணையாக வீட்டில் பார்த்து செய்து வைக்கப்படும் திருமணங்களும் விவாகாரத்துக்காக கோர்ட் படியேறி நிற்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மத்தவங்க விருப்பம்
உங்க கல்யாணத்துக்காக(Marriage) நீங்க ரெடியாகும் போது பையன் நல்லவன்னு அப்பா-அம்மா சொல்றாங்க, அண்ணன்-தம்பி சொல்றாங்கன்னு ஓகே சொல்லாதீங்க. உங்களுக்கும் சில எதிர்பார்ப்புகள் இருக்கும். அதனால முடிஞ்சவரைக்கும் நீங்க பையன்கிட்ட பேசிப்பாருங்க. சகஜமா பேச முடியுதா? அவரோட பேசும்போது நீங்க கம்பர்ட்டபிளா பீல் பண்றீங்களானு? செக் பண்ணிக்கங்க. மத்தவங்க சொல்றாங்கன்னு முடிவெடுத்து பின்னால
வருத்தப்படாதீங்க. வாழ்ற காலம் முழுக்க அவரோட சேர்ந்து இருக்கப்போறீங்க. அதனால ஆறு மாசமோ ஒரு வருஷமோ தேவையான அளவு டைம் எடுத்து முடிவு பண்ணுங்க.
லைப்ஸ்டைல்
நீங்க வேலை(Job) பாத்துட்டு இருந்தா அத கல்யாணத்துக்கு அப்புறமும் வேலைய(Job)கண்டினியூ பண்ணப் போறீங்களா? இல்லையான்னு? முன்னாலே உங்களுக்கு ஹஸ்பெண்டா வரப்போறவரோட பேசி முடிவு பண்ணிக்கங்க. அதேபோல நீங்க நைட் ஷிப்ட்ல வேலை(Job) பாக்குறவங்களா இருந்தா அத புரிஞ்சுக்கறவரா இருக்குறான்னு பார்த்துக்கங்க. உங்களுக்கும், அவருக்கும் ஒருசில விஷயங்கள்ல ஒத்து போகலன்னா பரவாயில்ல,எல்லா விஷயங்கள்லயும் ஒத்து போகலன்னா யோசிச்சு முடிவெடுங்க.
கிரெடிட்கார்டு
என்னதான் கல்யாணம் பண்ணிக்க போறவரா இருந்தாலும் கல்யாணத்துக்கு முன்னால பணமோ, கிரெடிட்கார்டோ கொடுக்காதீங்க. ஒருவேள அத
சரியான நேரத்துக்கு உங்களால திருப்பிக் கட்டமுடியாம போனா ரெண்டு பேருக்கும் இடையில மனக்கசப்புகள் உருவாகறதுக்கு வழிவகுக்கும். அதோட இல்லாம இது உங்க ரெண்டு பேர் உறவுலயும் விரிசல் உருவாகறதுக்கு காரணமா அமையும்.
டேட்டிங்
நிச்சயம் பண்ணிட்டாங்க இனி என்ன, நாம தான் கல்யாணம்(Marriage) பண்ணிக்கப்போறோம்னு கல்யாணத்துக்கு முன்னால ஊர் சுத்தறது, டேட்டிங் போறது இதெல்லாம் பண்ணாதீங்க. ஒருவேள எதிர்பாராம ஏதாவது ஒரு விஷயத்துக்காக கல்யாணம் நின்னு போச்சுனா அந்த நினைவுகள் உங்கள ரொம்ப பீல் பண்ணி உருக வச்சிடும்.
என்ன வேலை, எவ்ளோ சம்பளம்
நல்ல குடும்பம், நல்ல பையன்னு சொன்னாலும் மாப்பிள்ளை என்ன வேலை(Job) பாக்குறார்? எவ்ளோ சம்பளம் எல்லாம் கேட்டு தெரிஞ்சுக்கங்க.
விக்குற வெலைவாசியில குடும்பத்த ஓட்டுறது ரொம்ப கஷ்டமா இருக்கு. அதனால உங்களுக்கு என்னவெல்லாம் சந்தேகம் இருக்கோ அத,
கல்யாணத்துக்கு சம்மதம் சொல்றதுக்கு முன்னால பேசி கிளியர் பண்ணிக்கங்க. அதேபோல அவரோட படிப்பு உங்களோட அளவுக்கு இருக்குற மாதிரி பார்த்துக்கங்க. உங்களோட கம்மியா படிச்சவரா இருந்தா அதுவே தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட விஷயங்களுக்கு வழிவகுக்கக்கூடும்.
நிச்சயம் ஆனாலும்
தேதி குறிச்சு கல்யாணம் முடிவு பண்ணதுக்கு அப்புறம் அவரோட பேச்சு, நடவடிக்கைகள் உங்களுக்கு திருப்தியா இல்லேன்னா தயங்காம உங்க வீட்ல
சொல்லுங்க. ரொம்ப ஆபாசமா பேசுறது, கல்யாணத்துக்கு முன்னால உறவு வச்சுக்க வற்புறுத்துறது இப்படியெல்லாம் நடந்துச்சுனா யோசிச்சு
முடிவெடுங்க. உங்க வீட்ல கலந்து பேச தயங்க வேண்டாம். முடிஞ்சவரைக்கும் உங்க அப்பா-அம்மா கிட்ட எதையும் மறைக்காம சொல்லிடுங்க. இது உங்களுக்கு எல்லா விதத்திலும் உதவியா இருக்கும்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப்
ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான
மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.
Also read what do women expect from their husband in marriage