உங்க ஆள்கிட்ட 'லவ்' சொல்றப்போ தயவுசெஞ்சு 'இதுபோல' பண்ணிடாதீங்க!

உங்க ஆள்கிட்ட 'லவ்' சொல்றப்போ தயவுசெஞ்சு 'இதுபோல' பண்ணிடாதீங்க!

வாழ்க்கையில ரொம்ப கஷ்டமான டாஸ்க் எது தெரியுமா? நான் உன்ன லவ்(Love) பண்றேன்னு உங்க ஆளுகிட்ட தைரியமா சொல்றதுதான். என்னதான் தெனமும் சைட் அடிச்சி இருந்தாலும், சேர்ந்து ஊரைச்சுத்தி இருந்தாலும் உன்ன லவ்(Love) பண்றேன்னு சொல்ல முடியாம படுற அவஸ்தை இருக்கே, அப்பப்பா அத வார்த்தையால சொல்ல முடியாது.நமக்கும் வயசாகுது சீக்கிரம் கல்யாணம் பண்ணிப்போம் எவ்ளோ நாள்தான் சிங்கிள் தான் கெத்துனு சிங்கிளாவே சுத்துறதுனு முடிவெடுத்து உங்களுக்கு
புடிச்ச பொண்ணு/பையன்கிட்ட உங்க லவ்வ(Love) சொல்றதுன்னு முடிவெடுத்து இருப்பீங்க. அதுக்கு வசதியா காதலர் தினம்(Valentines Day) வேற ரொம்ப பக்கத்தில வருது. ஸோ இந்த காதலர் தினத்துக்கு(Valentines Day) லவ்வ சொல்லி அடுத்த காதலர் தினத்துக்குள்ள(Valentines Day) கல்யாணம் பண்ணனும்னு சபதம் எடுத்து உங்க ஆளுகிட்ட லவ் சொல்ல போவீங்க.


ஆனா எப்படி சொல்லி அவள இம்ப்ரெஸ் பண்றது இந்த படத்துல வர்ற மாதிரி ட்ரை பண்ணலாமா? இல்ல வேற ஏதாவது கொஞ்சம் புதுசா
பண்ணலாமானு ரூம் போட்டு யோசிக்கிறீங்களா? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்காகத் தான். உங்க ஆள்கிட்ட 'லவ்' சொல்றப்போ தயவுசெஞ்சு 'இதுபோல' பண்ணிடாதீங்க!இத படிச்சிட்டு இதுல சொல்ற மாதிரி ஏடாகூடமா எதுவும் டிரை பண்ணாதீங்க. உங்களுக்கு என்ன வருமோ? உங்களுக்கு எது சரியா இருக்குமோ? அத மட்டும் டிரை பண்ணுங்க. எல்லாமே சுபமா முடியும்.


மோசமான லாங்வேஜ்உங்கள் காதலை(Love) சொல்ல நீங்கள் எந்த மொழியை தேர்வு செய்தாலும், அந்த மொழி உங்களுக்கு கம்பர்பிடளாக இருக்குமா? என்பதை தேர்வு
செய்துங்கள். உங்களுடைய உரையாடல்களை அந்த மொழியில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அவசர,அவசரமாக பேச வேண்டாம். உங்களுடைய தவறான கிராமர் உங்கள் எதிரில் இருப்பவரை சிரிக்க வைத்து விடும்.


சினிமாக்கள்படங்களில் வருவது போல எந்த ஒரு ஸ்டண்ட்டையும் முயற்சிக்க வேண்டாம். நீங்கள் விஜய் போல ஏதாவது பேசப்போய் உங்க ஆள் ஒருவேளை அஜீத் ரசிகராக இருந்தால்? அதனால் யாரையும் இமிடேட் செய்யாமல் உங்கள் உடல் மொழியிலேயே உங்கள் காதலை சொல்லிவிடுங்கள்.


வேகமாக மூச்சு விடுவது100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஓடுவது போல வேகமாக மூச்சு விட்டுக்கொண்டு உங்கள் காதலை சொல்ல வேண்டாம். இது உங்கள் பயத்தையும், படபடப்பையும் வெளிப்படையாக அறிவித்து விடும். ஒருவேளை உங்களுக்கு முத்தமிட ஏதேனும் வாய்ப்பு கிடைத்து அப்போது நீங்கள் இப்படி மூச்சு விட்டுக்கொண்டு இருந்தால் அது எல்லாவற்றையும் கெடுத்து விடக்கூடும்.


தோற்றம் அவசியம்உங்கள் காதலை சொல்லப்போகும் முன் உங்கள் ஆடைத்தேர்வில் கவனம் செலுத்துங்கள். உங்கள் ஆள் உங்களை பலநாட்களாக அறிந்திருக்கலாம்
ஆனால் அன்றைய தினம் நீங்கள் காதலை சொல்லப்போகும் நாள். எனவே உங்கள் ஆடைத்தேர்வில் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
நல்ல ஆடைகளை உடுத்தி மிகவும் ஸ்மார்ட்டாக சென்று உங்கள் காதலை சொல்லுங்கள்.


பெர்ப்யூம்நீங்கள் பெர்ப்யூம் பிரியராக இருக்கலாம். உங்களுக்கு விருப்பப்பட்ட பெர்ப்யூமை நீங்கள் விதவிதமாக இதுநாள்வரை அடித்து மகிழ்ந்திருக்கலாம்.
ஆனால் உங்கள் காதலை சொல்லப்போகும் முன் இதமான நறுமணம் கொண்ட பெர்ப்யூமை அடித்து செல்லுங்கள். நீங்கள் அடித்திருக்கும் பெர்ப்யூம் உங்களுக்கு மட்டுமின்றி உங்களை சுற்றி இருக்கும் நபர்களுக்கும் மகிழ்ச்சியான மனநிலையை உருவாக்க வேண்டும். அதைவிடுத்து மிகுந்த வாசனை கொண்ட பெர்ப்யூம் அடித்து சென்று உங்கள் ஆளுக்கு அது பிடிக்கவில்லை என்றால் அது மோசமான மனநிலையை உருவாக்கி விடக்கூடும்.


நினைவில் இருக்கும்படிஇது உங்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நாள். எனவே உங்கள் நாளை மிகுந்த கவனமுடன் திட்டமிடுங்கள். உங்கள் காதலன்/காதலியை
எங்காவது நல்ல இடத்திற்கு கூட்டி செல்லுங்கள். அவரால் இந்த நாளை மறக்க முடியாதவாறு உங்கள் செயல்கள் இருக்கட்டும். என்றென்றும் இந்த
நாளை மகிழ்வுடன் நினைவில் கொள்ளும்படி இந்த காதலர் தினம் உங்களுக்கு அமையட்டும் என மனதார வாழ்த்துகிறோம்.


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப்
ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான
மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.