'தல' தோனி Vs 'தளபதி'கோலி .. 'ஐபிஎல்' கோப்பையை வெல்லப்போவது யார்?

'தல' தோனி Vs 'தளபதி'கோலி .. 'ஐபிஎல்' கோப்பையை வெல்லப்போவது யார்?

மொத்த மேட்சும் 3 மணி நேரத்தில் முடிந்து விடும், கடைசி பந்துவரை ஆட்டம் செம திரில்லாக இருக்கும். ஒரு ரன்னில் கூடஆட்டத்தின்
வெற்றி-தோல்வி மாற்றி எழுதப்படும். குறைந்த ரன்களே எடுத்தாலும் அந்த ரன்னை அடிக்க விடாமல் எதிரணி வீரர்களுடன் பவுலர்கள்
மல்லுக்கட்டுவர். விடுமுறைகளில் வருவதால் ரேட்டிங், டிஆர்பி எல்லாம் இஷ்டத்திற்கு எகிறும். தோனிடா, கோலிடா என சமூக வலைதளங்களில்
ரசிகர்கள் சண்டை போட, சமயங்களில் சம்பந்தப்பட்ட அணியின் வீரர்களும் நேரடியாக மோதிக்கொள்வர். இதனால் வருடாவருடம் நடக்கும் ஐபிஎல் போட்டிகள் ஒட்டுமொத்த இந்தியாவையுமே ஒரு திருவிழா போல கொண்டாட வைத்திடும்.அதேபோல இந்த வருடமும் இந்தியாவைக் கொண்டாட வைத்திட அந்த ஐபிஎல் திருவிழா வந்துவிட்டது.மொத்தம் 8 அணிகள் மோதும் இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்(Chennai Super Kings) அணியின் கேப்டன் தோனி என்பதாலும், ஒட்டுமொத்த தமிழர்களின் பேவரைட் அணி என்பதாலும் முதல் போட்டிக்கே எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவான ரசிகர்களும் ரசிக்கக்கூடிய, ஐபிஎல் போட்டிகள் இந்த வருடம் மக்களவைத் தேர்தலை ஒட்டி முன்னதாகவே நடைபெறுகின்றன.


2019-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான முதல் கட்ட அட்டவணையை பிசிசிஐ நேற்று வெளியிட்டது. இதில் மார்ச் 23-ம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன.சென்னையில் மார்ச் 23-ம் தேதி மாலை நடைபெறும் முதல் ஆட்டத்தில் தோனி(Dhoni) தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்(Chennai Super Kings) அணியை எதிர்த்து கோலி(Kohli) தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bangalore) அணி மோதுகிறது.


இந்த நேரத்தில் இதுவரை எத்தனை அணிகள் கோப்பை வென்றுள்ளன. இதுவரை எந்த அணிகள் கோப்பை வெல்லவில்லை? இந்த வருடம் நடக்கும்
ஐபிஎல் போட்டிகளில் எந்த அணி கோப்பை வெல்ல வாய்ப்புள்ளது என்பதை இங்கே பார்க்கலாம்.


சென்னை சூப்பர் கிங்ஸ்(Chennai Super Kings)தோனி(Dhoni) தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்(Chennai Super Kings) அணி இதுவரை 2010,2011, 2018 என மூன்றுமுறை மொத்தம் கோப்பை வென்றுள்ளது. இதுதவிர 4 முறை இறுதிப்போட்டி வரை வந்து 2-வது இடம் பெற்றுள்ளது. வேறு எந்த அணியும் செய்யாத ஒரு மிகப்பெரிய சாதனை இது.இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்ட போதிலும் கூட கடந்த ஆண்டு களத்தில் குதித்து சென்னை அணி கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த ஆண்டும் சென்னை அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே ஒட்டுமொத்த சிஎஸ்கே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. 11 ஆண்டுகளில் இதுவரை சென்னை அணியின் கேப்டனாக தோனி(Dhoni) தவிர வேறு யாரும் களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bangalore)ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bangalore) அணியின் கேப்டனாக நடப்பு இந்திய அணியின் கேப்டன் கோலி(Kohli) இருக்கிறார். கோலி(Kohli), டிவிலியர்ஸ் தொடங்கி ஏராளமான நட்சத்திர வீரர்கள் இருந்தாலும் இதுவரை ஒருமுறை கூட அந்த அணி கோப்பை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு அரை இறுதிக்கு கூட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bangalore) தகுதி பெறாமல் போனதுதான் இதில் உச்சகட்டம். இதனால் இந்த வருடம் அந்த அணி கோப்பையை வெல்ல கடுமையாகப் போராடும் என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டனாக இந்தியாவுக்கு பல்வேறு வெற்றிகளை தேடித்தரும் கோலி(Kohli) தன்னுடைய பெங்களூர் அணிக்கு இந்த வருடம் கோப்பையை பரிசளிப்பாரா? என்பதை காத்திருந்து பார்ப்போம்.


டெல்லி கேபிடல்ஸ்பெங்களூர் அணி போல டெல்லி கேபிடல்ஸ் அணியும்(முன்னாள் பெயர் டெல்லி டேர்டெவில்ஸ்) இதுவரை கோப்பை வென்றதில்லை என்பது
குறிப்பிடதக்கது. வருடாவருடம் புள்ளிப்பட்டியலில் கடைசி 3 இடங்களில் ஏதாவது ஒன்றை மட்டுமே அந்த அணி தக்க வைத்துக்கொள்கிறது. இந்த
வருடம் பெயர் மாற்றியது மட்டுமின்றி கையோடு ஏராளமான வீரர்களையும் மாற்றியுள்ளனர். இதனால் இந்த வருடம் டெல்லி அணி பிற அணிகளுக்கு
மிகப்பெரிய டப் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


கிங்ஸ் லெவன் பஞ்சாப்கிங்ஸ் லெவன் பஞ்சாப் என பெயர் வைத்திருந்தாலும் இதுவரை ஐபிஎல் போட்டிகளில் 'கிங்'காக பஞ்சாப் அணி ஜெயிக்கவில்லை. 11 வருடங்களில்
ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை பஞ்சாப் அணி வென்றதும் கிடையாது. கடந்த வருடம் முதல் பாதி ஆட்டங்களில் கெத்து காட்டிய பஞ்சாப் அடுத்தடுத்த ஆட்டங்களில் வீரியம் இழந்து பெட்டிப்பாம்பாக சுருண்டது. எனினும் ஷேவாக்கை மாற்றிய கையோடு அடுத்தடுத்து பல்வேறு வீரர்களையும் மாற்றியுள்ளதால் இந்த ஆண்டு பஞ்சாப் அணி எழுச்சிபெற்று மற்ற அணிகளுக்கு மரண பயத்தைக் காட்ட வாய்ப்பிருக்கிறது.நாங்களும் கெத்து தான்மீதமுள்ள மும்பை, ஹைதராபாத் ராஜஸ்தான், கொல்கத்தா அணிகளும் பலம் பொருந்தியவை தான். இதில் சென்னை அணிக்கு இணையாக மும்பை
அணி 3 முறையும் கொல்கத்தா அணி 2 முறையும் ஹைதராபாத், ராஜஸ்தான் அணிகள் தலா 1 முறையும் கோப்பை வென்றுள்ளன. திறமை வாய்ந்த ஆல்ரவுண்டர்கள், பேட்ஸ்மேன்கள் இந்த அணிகளில் கொட்டிக்கிடப்பதால் வருடாவருடம் ஐபிஎல் போட்டிகளில் இந்த அணிகள் ஆடும்போது மைதானத்தில் அனல் பறக்கும். இந்த வருடமும் அதுபோன்ற ஆட்டங்களை மேற்கண்ட அணிகள் அளித்து ரசிகர்களுக்கு விருந்து படைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


நேரடி ட்விட்டர் மோதல்நேற்று ஐபிஎல் அட்டவணையை வெளியிட்ட உடனேயே சென்னை-பெங்களூர் அணிகள் இடையிலான நேரடி ட்விட்டர் மோதல் தொடங்கிவிட்டது. ஐபிஎல் குறித்து பெங்களூர் அணி தனது ட்விட்டர் பக்கத்தில்,''தென்னிந்தியாவின் ருசியான உணவுகளுடன் ஆரம்பிக்கிறது. இருப்பினும் நாங்கள் சுவையான சாம்பாரை செய்வோம்,'' என பதிவிட பதிலுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ''அந்த சாம்பார் மஞ்சள் நிறத்தில்தானே இருக்கும்'' என்று சிஎஸ்கே வெற்றி பெறும் என்பதை மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளது.


முதல் போட்டியை வெற்றியுடன் துவங்கப்போவது தல தோனியா? தளபதி கோலியா? என்பதை அறிந்துகொள்ள காத்திருப்போம்...


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப்
ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான
மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.