logo
ADVERTISEMENT
home / அழகு
வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு சருமம் பளபளப்பாக்க!

வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு சருமம் பளபளப்பாக்க!

அதிகமான வேலைப்பளு மற்றும் மன உளைச்சலால் நமது சருமம்(skin) எப்பொழுதும் வரண்டு சோர்வுடன் காணப்படும். பலவித கெமிக்கல் நிறைந்த க்ரீம்களை பயன்படுத்தி முக அழகை கெடுத்துக்கொள்ளமால் வீட்டில் இருந்தவாரே முகத்தையும் சருமத்தையும் எவ்வாறு பாதுகாப்பது என இங்கு பார்ப்போம்

சரும பளபளப்பிற்கு
நன்கு பழுத்த பப்பாளிப் பழத்தை சீவி அரைத்து, உடல் முழுவதும் தடவிக் கொள்ளவும். 15 நிமிடம் கழித்து பாசிப்பயறு மாவு போட்டு உடம்பை தேய்த்துக் குளிக்கவும். தினமும் பப்பாளிப் பழம் சாப்பிடவும். வாழைப் பழத் தோலையும் இது போலத் தேய்த்துக் குளித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தினமும் பப்பாளி சாப்பிட்டால் சருமத்தில் பளபளப்பை உண்டாக்கும்.

சருமம் மிருதுவாக
பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம்(skin) மிகவும் மிருதுவாகும். ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.

இதையும் படியுங்கள் முகத்தில் இருந்து மருக்கள் நீக்குவது எப்படி

ADVERTISEMENT

பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம்(skin) அழகாகவும், பளபளப்பாகவும் மாறும். தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும்.

தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

வறண்ட சருமத்தை பாதுகாக்க
​தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவவும். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போய்விடும்.

தோல் நீக்கிய சிறிது ஆப்பிள் பழத்துண்டுகளை ஒரு கப் பாலில் போட்டு நன்றாக கொதிக்க வைத்திடுங்கள். அது தயிர் போன்று மாறும். அதை நன்றாக ஆற விட்டு, அதில் தேவையான அளவுஎடுத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவிட்டு பின் கழுவிவிடுங்கள். இப்படி தினமும் செய்து வாருங்கள். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போவதோடு, முகம் பிரகாசிக்கவும் ஆரம்பித்து விடும்.

ADVERTISEMENT

தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

கருமை நீங்க
ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில்(skin) தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.

இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும். கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும்(skin) இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

இடுப்பில் காய்ப்புத் தழும்பு அகல
இடுப்பில் இறுக்கமான ஆடை அணிந்து வருவதால் சிலருக்கு இடுப்பைச் சுற்றி கருப்புத்தழும்பு ஏற்பட்டு விடும். இதைப்போக்க இரவில் இறுக்கமான ஆடையைத் தவிர்த்து லூசான ஆடையை அணிந்து கொள்ள வேண்டும். தேங்காய் எண்ணையை இடுப்பைச் சுற்றி தேய்த்து சிறிது மசாஜ் செய்து வந்தால் போதும். மெதுவாக கறுப்புத் தழும்பு மறைந்து பளபளப்பாகி விடும்.

ADVERTISEMENT

அழகை கெடுக்கும் தோல் சுருக்கம்
சிலருக்கு இளமையிலேயே தோலில் சுருக்கங்கள் விழுந்து, வயதாகிவிட்டது போன்ற தோற்றத்தை தரும். இதிலிருந்து தப்பிக்க இதோ வழி. தோல் சுருக்கம் மறைந்து என்றென்றும் இளமையுடன் திகழ்வதற்கு கீழ் கண்ட குறிப்புகளை பயன்படுத்தலாம்.

முதலில், 3 முட்டைகளை உடைத்து நன்றாக கலக்கி கொள்ளவும். ஒரு தேக்கரண்டி தேன், 2 தேக்கரண்டி பால், அரை தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை எடுத்து கொள்ளவும்.

இவற்றுடன் கால் தேக்கரண்டி பாதாம் எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். இதனுடன் குளியல் சோப் துண்டுகள் சிறிதளவு சேர்க்கவும். இந்த கலவையை உடல் முழுவதும் தேய்த்து குளிக்கவும்.

வாரம் ஒருமுறை இந்த கலவையை தேய்த்து குளித்து வந்தால், இரண்டே மாதங்களில் தோல் சுருக்கங்கள் நீங்கி, மேனி பளபளப்பாகிவிடும்.

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

28 Feb 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT