வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு பேஷியல் செய்வது எப்படி?

வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு பேஷியல் செய்வது எப்படி?

இறைவன் படைத்த படைப்பில் ஆண்களை விட பெண்கள் இயற்கையாகவே மிகவும் அழகானவர்கள். அழகாக இருக்கும் பெண்கள் தங்களை மேலும் அழகுபடுத்திக்கொள்ள(glowing) மிகவும் மெனக்கெடுகின்றனர். இதற்காக பார்லர் செல்வது கெமிக்கல் நிறைந்த க்ரீம்களை அதிகம் பயன்படுத்துவது நிறை காரியங்களில் ஈடுபடுகின்றனர். பார்லர் செல்வது தவறு என்று கூறவில்லை. நல்லது தான் அழகாக வைத்துக்கொள்ளவது மிகவும் நல்ல விடயம் என்றாலும் அதிகமான கெமிக்கல்கள் நிறைந்த க்ரீம்களை உபயோகப்படுத்த வேண்டாம்.


இயற்கையாகவே கிடைக்கும் பொருட்களை கொண்டு வீட்டில் எவ்வாறு முகத்தையும் நம் மனதையும் ஆரோக்கியமாக(glowing) பேஷியல் செய்துக் கொள்வது என்பதை பார்ப்போம்.


கிவி பழத்தில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. எனவே சருமத்தில் சுருக்கங்கள் அதிகம் இருந்தால், 1 முட்டையின் மஞ்சள் கருவுடன், 1 டேபிள் ஸ்பூன் கிவி சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், முகத்தில் உள்ள சுருக்கங்களுடன், அதிகப்படியான எண்ணெயும் நீங்கும்.


வாழைப்பழத்தில் ஜிங்க், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ, பி மற்றும் ஈ போன்றவை நிறைந்துள்ளன. இத்தகைய வாழைப்பழத்தை மசித்து, அத்துடன், 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் மாவு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவினால், முதுமைத் தோற்றமானது நீங்கி, இளமைத் தோற்றத்தைப் பெறலாம்.


* பேஸ் மாஸ்க்குகள் அனைத்திலுமே தேன் சேர்க்கப்படும். ஏனெனில் தேனில் வைட்டமின் ஈ சத்து அதிகம் இருப்பதால் தான். அதிலும் முதுமைத் தோற்றத்தைப் போக்குவதற்கு, 1 டேபிள் ஸ்பூன் தேன், 1/2 டீஸ்பூன் வைட்டமின் ஈ எண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தை மசாஜ் செய்து குளிர்ந்து நீரில் அலச வேண்டும். இதனால் முகம் நன்கு மென்மையாகவும், இளமைத் தோற்றத்துடனும் இருக்கும்.


* முட்டையின் வெள்ளைக்கருவை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி, முகம் பொலிவோடு(glowing) மின்னும்.


வீட்டிலேயே பேஷியல் செய்வது எப்படி?
வீட்டில் கிடைக்கும் பழங்களை கொண்டு எளிய முறையில் பேஷியல் செய்யலாம். மாசடைந்த சூழல் காரணமாக வெளியே சென்று வந்தாலே முகம் கறுத்துவிடும். இதனை போக்க முகத்தை நன்றாக பேஷியல் சுத்தம் செய்யவேண்டும்.


கிளன்சிங்
ஒரு கிண்ணத்தில் சிறிதளவு வீட்டில் உள்ள பாலை எடுத்து முகம் முழுவதும் பூச வேண்டும். பின்னர் மெதுவாக தேய்க்கவேண்டும். 5 நிமிடம் கழித்து சிறிதளவு பஞ்சைக் கொண்டு துடைக்கவேண்டும். இதனால் முகத்தினுள் படிந்திருக்கும் அழுக்கு நீங்கிவிடும்.


மசாஜ்
சூரியக்கதிர் தாக்குதலினால் ஏற்படும் கருமையை தயிர் போக்குகிறது. தேன் பயன்படுத்தியும் சருமத்தை மசாஜ் செய்யலாம். வறண்ட சருமம் கொண்டவர்கள் தேனுடன் பப்பாளிக்கூழ் சேர்த்து மசாஜ் செய்யலாம்.


தக்காளி, ஆரஞ்ச், கொய்யாப்பழம், வாழைப்பழம் போன்றவைகளையும் கூழ் போல மசித்து மசாஜ் செய்யலாம் முகத்திற்கு புத்துணர்ச்சி கிடைக்கும். மசாஜ் முடிந்தவுடன் ஸ்கிரப் செய்ய வேண்டும்.


ஸ்கிரப்
வால்நெட், பாதாம் இவற்றைப் பொடியாக அரைத்து ஸ்கிரப்பாக பயன்படுத்தலாம். சருமத்தில் அதிக கருப்பு வெள்ளை இருந்தால் சர்க்கரையைப் பொடித்து அத்துடன் சிறிது பப்பாளி விழுதை சேர்த்து முகத்தில் அழுத்தி தடவ வேண்டும். இதனால் இறந்த செல்கள் உதிர்ந்து விடும்.


பின்னர் சிறிய டவலைக் கொண்டு வெந்நீரில் நனைத்து பொறுக்குமளவு சூட்டுடன் முகத்தின் மேல் போட்டு மூன்று நிமிடங்கள் கழித்து எடுக்க வேண்டும். இவ்வாறு இரண்டு அல்லது மூன்று முறை செய்ய வேண்டும். இந்த முறையை பின்னபற்ற முடியாதவர்கள் சிறிய பாத்திரத்தில் நீரை கொதிக்க வைத்து ஆவி பிடிக்க வேண்டும் அதனுள் வேப்பிலைகள் சிறிது போட்டு அதோடு சேர்த்து ஆவி பிடித்தால் மிகவும் நல்லது. அடுத்து பேக் போடலாம்.


பேக்
முகத்திற்கு பேக் போட நமக்கு தேவையான பழங்களை தேர்ந்தெடுக்கவேண்டும். கேரட், ஆப்பிள், ஆரஞ்சு, உருளைக்கிழங்கு, தேன், வெள்ளரி, ஸ்ட்ராபெரி, பேரீச்சம் பழம், எலுமிச்சைச்சாறு சிறிதளவு இவற்றில் ஏதாவது ஒன்றை நன்றாக அரைத்து பேக் போட்டு அரைமணி நேரம் ரிலாக்ஸ் ஆக இருக்கவேண்டும்.


பின்னர் முகம் கழுவினால் உங்கள் முகத்தைப் பார்த்து நீங்களே அசந்துபோவீர்கள். அந்த அளவிற்கு முகம் பொலிவாய் மாறும். பழங்களை தனியாகவும் அரைத்து பேசியல் போடலாம் அல்லது இரண்டு, மூன்று பழங்களைச் சேர்த்து அரைத்தும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். பார்லர் போய் வந்த எபெக்ட் கட்டாயம் கிடைக்கும். அதைவிட அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பீர்கள். கொஞ்சம் உங்களுக்கென நேரத்தை ஒதுக்கி பராமரிப்பது மிகவும் அவசியம்.


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo