பதினைந்து வருசத்துக்கு முன்னாடி பாத்து பாத்து போட்டோ எடுப்போம். ஆனா இப்போ எடுத்து எடுத்து பாக்குறோம்! இன்னும் சொல்லப்போனால், இதுவே பலரது ஹாபியும் கூட. அதை எடுக்கும் போது எப்படி எல்லாம் நம்மை அழகாக காட்டி கொள்வோம் என்பது நம்மக்கு மட்டுமே தெரிந்த ஒரு உண்மை .ஏனெனில் புகைப்படம் என்பது நினைவுகள்! அதனை காலத்துக்கும் பொக்கிஷம் போல பாதுகாக்க போகிறோம்.
அதை இளமை, சந்தோசம், முக பாவனை என அனைத்தையும் தெளிவாக வெளிப்படுத்த வேண்டும்.
அப்படி சில சுவாரசியமான போஸ் உங்களுக்காக…
உட்காரும் போது :
போட்டோஸ்க்கு போஸ் குடுத்து உட்காரும் போது, நேர்வாட்டில் உட்காராமல் சற்று திரும்பி, கால்மேல் கால் போட்டால் ரிச் லுக் கொடுக்கும்.இது போன்ற போட்டோக்களில் பார்வை கேமரா மீது இல்லாமல் வேறு திசையில் அமைத்தால் எதார்த்தமாக இருக்கும்.
ஹாப்பி ஜம்ப் –
எதார்த்தமாக தெரிவது போல இருப்பதே இப்போ ட்ரெண்டிங்.குதிப்பது போல எடுத்தால், குள்ளமாக இருப்பவர்களின் உயரம் தெரியாமல் மறைக்கப்படும்.சின்ன சின்ன சேட்டைகள் செய்வது போல செய்கை செய்து எடுக்கலாம்.இது பார்க்க மிக எதார்த்தமாகவும் அழகாவும் அமையும்.
ஸ்கர்ட்டை வைத்து:
நேராக நிற்பது போல் நின்றால் ரொம்ப சிம்பிள் லுக்ல பழைய போஸ் மாதிரி தெரியும்.சிரித்து கொண்டே சுற்றுவது போலவும் லாங் ஸ்கிர்ட்டை சுழட்டி பறப்பது போல எடுத்தால், போட்டோ (photo) பார்க்க குதூகலமாக அமையும்.நடனம் ஆடுவது போல் போஸ் (pose) கொடுத்தால் கூட பார்க்க செமயா இருக்கும்.இது போல் உங்களிடம் இருக்கும் அணிகலன்களை பயன் படுத்தியும் போஸ் குடுக்கலாம்.
மேலும் படிக்க – பிரபலங்கள் அங்கீகரித்த சில ட்ரெண்டி ஸ்கர்ட்ஸ் : எங்கேயும் எப்போதும் அணிய
ஒல்லியாக தெரிய :
பலர் போட்டோ எடுக்கும் போது சந்திக்கும் பிரச்சனை குண்டாக தெரிவது. அதை தவிர்க்க நேராக நிற்கும் போது சற்று குண்டாக தெரியும் என்றால் , இது போல கைகளை வயிற்றின் பகுதியில் விரல்களை விரித்தது போல எடுக்கலாம். உங்களின் தொப்பையை மறைத்து, பார்க்க ஸ்லிம் லுக் கொடுக்கும்.
கால்கள் நீளமாக தெரிய :
சற்று உயரம் கம்மியாக இருப்பவர்கள், போட்டோவில் பார்க்க உயரமாக தெரிய மிக முக்கியம் கேமெராவின் கோணம்.கீழ் நோக்கி மேலே வரும் கோணத்தில் வைத்தால், உயரம் கூட தெரியும்.அதனை கொஞ்சம் எதார்த்தமாக அமைக்க கால்களை சற்று விலக்கி வைத்தால் அழகானதாக இருக்கும்.
சிலரின் கால் மட்டும் கொஞ்சம் உயரக்குறைவாக தெரியும். உடலோடு ஒத்துமை படுத்தி பார்க்கும் போது, அவர்கள் ஒருபக்கம் சிறிது திரும்பி, ஒற்றை காலை மடக்கியது போல நின்று, கேமரா கோணத்தை கீழ் இருந்து வைத்தால் மிக ஸ்டைல் லுக் கிடைக்கும்.
நிற்கும் புகைப்படம்:
நிற்பது போல எடுக்கும் புகைப்படத்திற்க்கு, குதித்து நடப்பது, ஓடுவது, சுற்றுவது போல செய்கை செய்யும்போது வரிசையாக கிளிக் செய்தால் ஸ்டைலிஷ் போட்டோஸ் கிடைக்கும்.பல கிளிக் செய்வதால் எதார்த்தமான அழகிய புகைப்படம் பல கிடைக்கும்.இந்த பிரீ ஸ்டைல் புகைப்படம் எடுக்கும் போது முடி பறப்பது போல் இருந்தால் மேலும் அழகூட்டும்.
சீட் கேண்டிட் பிக் (cheat candid pic) –
நம் கேண்டிட் ஷாட்டிற்கே ஒரு போஸ் கொடுப்பதுதான் சீட் கேண்டிட் பிக்! போட்டோ எடுக்கும் போது கேமராவை மட்டும் நோக்கி பார்வையை செலுத்தாமல் வேறு திசையில் பார்த்தால் எதார்த்தமாக இருக்கும்.எதாவது தின்பண்டம் கடிப்பது போல், அல்லது வாயில் வைப்பது போல் இருந்தால் இன்னும் பார்க்க குதூகலமாக இருக்கும் .
ஸ்டைல் லுக் :
ஒரு புறம் திரும்பி, ‘x’ போல இருகால்களையும் குறுக்கில் வைத்துக்கொண்டு இடையில் கைவைத்து கொஞ்சமாக சாய்த்தது போல் நின்றால் அருமையாக இருக்கும்.. இது உங்கள் உண்மையான உயரத்தை மறைத்துவிடும்! பிரீ ஹேர்ஆக இருந்தால் கூடுதல் மாடர்ன்னாக இருக்கும்.
ப்ளெயிங் ஸ்டைல் (playing style) :
இரு கைகளையும் பறப்பது போல் நீட்டி நேர்வாக்கில் இல்லாமல் சற்று சாய்ந்தது போல வைத்துக்கொண்டு ஒற்றை காலில் நின்றால் மிக அழகாக இருக்கும்.உங்கள் உயரமும் தெரியாமல் இருக்கும்.
முக பாவனை :
போட்டோகளில் முக பாவனை கவனிக்க வேண்டிய ஒன்று..பார்வையை கீழே தாழ்த்தி வெக்கம் கலந்த புன்னகை பூத்தால் அவ்ளோ அழகா அமையும் போட்டோ.அது போல சின்ன சின்ன அழகிய பாவனை, ஒரு கண்ணை சுருங்குவது, மூக்கை சுளிப்பது, உதடுகளை ஒவ்வொரு போக்காக வைத்துக்கொண்டு நக்கல் தொனியில் இருப்பது,நாக்கை வெளியே நீட்டுவது, எல்லாம் பார்க்க குதூகலமாக இருக்கும்.
எல்லோருமே…ஒவ்வொரு விதத்தில் அழகு!!
அதன் அருமை நம்மை வெளிப்படுத்துவதில் இருக்கிறது…!!
ஒருவர் குறைகளை குறையாக கருதாமல் அதனை கையாளும் திறமை புகைப்படம் எடுக்கும் விதத்தில் தெளிவாக தெரியும்.
படங்களின் ஆதாரங்கள் – இன்ஸ்டாகிராம் ,பேக்செல்ஸ்
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.