logo
home / வாழ்க்கை
“அந்த” விஷயத்தை பெண்கள் ஆரம்பித்து வைப்பதால்  இத்தனை நன்மைகளா

“அந்த” விஷயத்தை பெண்கள் ஆரம்பித்து வைப்பதால்  இத்தனை நன்மைகளா

எத்தனை கதைகளை படித்தாலும் படங்களை பார்த்தாலும் அவை நமக்கு சொல்பவை காமம் என்பதை முதலில் ஆண் தான் ஆரம்பிக்க வேண்டும் என்றுதான். தவறான சில பழக்கவழக்கங்கள் சொல்லிக் கொடுக்கப்பட்டதால்தான் தனது அடிமைத்தனத்தில் இருந்து பெண் வெளியே வர பல நூற்றாண்டு காலங்கள் ஆனது.

ஆண்தான் முதலில் காமத்தை (sex) ஆரம்பிக்க வேண்டும் என்பதும் அப்படியான ஒரு தவறான கற்பிதம்தான். அவர்கள்தான் இதற்காக நிர்ணயிக்கப் பட்டவர்கள் என்பது போலத்தான் அவர்கள் நடவடிக்கையும் இருக்கும்.  ஆனால் உலக அளவிலான ஆய்வில் எளிதில் சிற்றின்ப உணர்வுக்கு ஆட்படும் பெண்கள் இதில் தாங்களும் முதலடி எடுத்து வைக்க விரும்புவதாக சொல்லப்படுகிறது.

இருப்பினும் பெரும்பாலான பெண்கள் இதில் தயக்கம் காட்டுகின்றனர். காரணம் காலம் காலமாக அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டு இருப்பது இதுதான். ஆண் தான் முதலில் ஆரம்பிக்க வேண்டும், பெண் வெட்கப்பட வேண்டும், தயங்க வேண்டும், மறுக்க வேண்டும் அதன்பின் இறுதியாக உடன்பட வேண்டும். இதனை உளவியல் ரீதியாக அணுகினால் மறுக்கும் ஒரு பெண்ணை சம்மதிக்க வைப்பதன் மூலம் ஆண் என்பவன் முதலில் மூளை ரீதியாக ஆர்கசம் அடைந்து விடுகிறான். அதன்பின் பெண்ணைக் கூடுவதன் மூலம் உடல்ரீதியான ஆர்கசத்தையும் அவன் அடைகிறான்.

பெண்கள் தயங்குவதற்கான காரணம் எங்கே தன்னை தவறாக பேசிவிடுவார்களோ தனது ஆண் தன்னைப் பற்றி காம இச்சை கொண்டவள் என்கிற எண்ணத்திற்கு வந்து விடுவானோ என்றுதான் பின்வாங்குகிறார்கள். கம் ஆன் கேர்ள்ஸ் , என்றைக்காவது எல்லா முறையும் முதல் தூண்டலை செய்யும் ஆணை நாம் காம இச்சை பிடித்தவன் என்று யோசித்திருக்கிறோமா . இல்லைதானே? பின்னர் அவர்கள் மட்டும் நம்மை ஏன் அப்படி நினைக்கப் போகிறார்கள்.

காமம் என்பது படுக்கையறையில் நிகழ்த்தப்படும் செயல்திறன் அல்ல . இது பரஸ்பர சந்தோஷத்திற்காக செய்யப்படும் ஒரு விஷயமே.

முதல் தூண்டலை பெண்கள் தொடங்குவதால் ஏற்படும் நன்மைகள்

இது நம்பிக்கையை அதிகரிக்க செய்யும்

எப்போதும் ஆண் அழைப்பதும் பெண் உடன்படுவதும் சில சமயங்களில் நம்மை அவர்கள் அடிமையா என்று நினைக்க வைக்கலாம். அதற்குப் பதிலாக உங்கள் ஆணை நீங்கள் முதலில் அழைத்துப் பாருங்கள். அதன் பிறகான உங்கள் தன்னம்பிக்கை அளவு அதிகரித்துதான் இருக்கும் என்கிறது ஆய்வு.

உங்கள் உறவின் மிக சிறந்த உருமாற்றம் இதுதான்

என்னதான் உங்களை உங்கள் ஆணிடம் சமர்ப்பிப்பது உங்களுக்குத் பிடித்திருந்தாலும் கூட ஒருமுறை அவரை நீங்கள் படுக்கைக்கு அழையுங்கள். அது உங்கள் உறவின் சிறந்த உருமாற்றம் ஆகக் காரணமாகவே இருக்கும். சும்மா உங்கள் துணையைப் பார்த்து இந்த சட்டையில் உங்களை பார்த்தால் ஏதாவது செய்ய வேண்டும் போல இருக்கிறது. உடனே பெட்ரூமுக்கு வாங்க என்று சொல்லித்தான் பாருங்களேன். அதற்கு பின்பான அற்புதங்கள்… உங்களுக்கே தெரிய வரும்.

அழுத்தத்தை விடுவிக்கிறது.

தனது வேட்கை நிராகரிக்கப் படலாம் என்பது பெண்களுக்கு மட்டுமான பயம் மட்டும் அல்ல. ஆண்களுக்கும் இது இருக்கிறது. தான் ஆசையோடு அழைக்கும்போது பெண் மறுத்து விட்டால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாமல் மனதளவில் பெரும்பாலான ஆண்கள் காயப்படுகின்றனர். இது மரபணு சமாச்சாரம் என்பதை நாமும் புரிந்து கொள்ளத்தான் வேண்டும். அதனால் கேட்கமாலே வேட்கையோடு தவித்திருக்கும் உங்கள் ஆணை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். முன்விளையாட்டை நீங்கள் ஆரம்பித்து வையுங்கள்.

உங்கள் புரிதலுக்காக மேலும் சில குறிப்புகள்

வசதியான நேரம்

முக்கியமாக அந்த நேரங்களில் கவனத்தை சிதற விடுவதில் பெண்கள் முதன்மையானவர்கள் என்கிறது ஆய்வு. அப்படி இல்லாமல் கூடலைத் தொடங்குவதற்கு முன்னர் உங்களை நீங்கள் மன ரீதியாக தயார் செய்து தொந்தரவுகள் இல்லாத நேரத்தில் காமத்தைத் தொடங்குங்கள்.

பிடிக்காதவற்றை சொல்லி விடுங்கள்

உங்களுக்கு காமத்தில் என்னென்ன பிடிக்கும் என்னென்ன பிடிக்காது என்பதனைப் பற்றி முன்கூட்டியே சொல்லி விடுங்கள். இது உங்களுக்குள் உள்ள உறவை மேம்படுத்தும்.

தேகமெல்லாம் காமம்..

உங்கள் ஆணுக்கும் உங்களுக்கும் இடையே இரவுகளில் படுக்கையில் மட்டும் காமம் நடைபெறும் எனும் பழைய சலிப்பான பழக்கத்தை விட்டு வெளியே வந்து அவரோடு அவ்வப்போது செக்ஸ்ட் எனப்படும் செக்ஸ் சம்பந்தப்பட்ட டெக்ஸ்ட்களை செய்யுங்கள். GIF களை அனுப்புங்கள். அப்போது உங்கள் கூடல் நேரம் இன்னும் சுவாரசியமாக இருக்கும்.

புதியவற்றை முயற்சியுங்கள்

புதுமையான பலவித காமங்களை நீங்கள் முயற்சி செய்யுங்கள். முன் விளையாட்டை அவர் தொடங்க வேண்டும் என்று எதிர்பார்க்காமல் நீங்கள் தொடங்குங்கள். ஏதாவது புதிய கோணத்தை முயற்சிப்பதால் அது அற்புதமான சுகத்தை தரலாம்.

 

 —

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPx

 

28 Jan 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this