'ஆளப்போறான் தமிழன்'.. விளையாட்டு வீரராக நடிக்கும் 'தளபதி' விஜய்?

'ஆளப்போறான் தமிழன்'.. விளையாட்டு வீரராக நடிக்கும் 'தளபதி' விஜய்?

தெறி,மெர்சல்(Mersal) படங்களைத் தொடர்ந்து 3-வது முறையாக அட்லீ இயக்கத்தில் விஜய்(Vijay) நடிக்கவிருக்கிறார். தளபதி 63(Thalapathy63) என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்றுமுதல்(ஜனவரி 21) தொடங்குகிறது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நயன்தாரா, விவேக், யோகிபாபு, கதிர், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.வில்லு படத்துக்குப் பின் பத்து வருடங்கள் கழித்து விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பது,அட்லீ இயக்கம், ஏ.ஆர்.ரஹ்மான் இசை, ஏஜிஎஸ்
எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பு ஆகிய காரணங்கள் இப்படத்திற்கான எதிர்பார்ப்பினை ரசிகர்கள் மத்தியில் எகிறச் செய்துள்ளது. மெர்சல் படத்தில்
இடம்பெற்ற 'ஆளப்போறான் தமிழன்'(Alaporan Tamilan)பாடல் மிகப்பெரிய ஹிட்டடித்தால் இப்படத்திற்கு 'ஆளப்போறான் தமிழன்'(Alaporan Tamilan)என்ற தலைப்பு வைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.‘மெர்சல்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ஜி.கே.விஷ்ணு, இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். ‘மெர்சல்’, ‘சர்கார்’ படங்களைத் தொடர்ந்து
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரூபன் எடிட் செய்ய, கலை இயக்குநராக முத்துராஜ் பணியாற்றுகிறார். சண்டை இயக்குநராக அனல் அரசு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.


விஜய்(Vijay)தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோவாக விஜய் இருக்கிறார். அதேபோல இவரது படங்கள் வெளியாகும்போது சர்ச்சைகள் ஏற்படுவதும் தொடர் வாடிக்கையாகி வருகிறது. காவலன்,துப்பாக்கி தொடங்கி சமீபத்தில் வெளியான சர்கார் வரை இவரது படங்கள் வெளியாகும் போதெல்லாம் கண்டிப்பாக சர்ச்சைகள் இருக்கும் என அவரது ரசிகர்களே பேச ஆரம்பித்து விட்டனர். சர்ச்சைகளுடன் விஜய் படங்கள் வெளியாவதும் தொடர் வாடிக்கையாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.


அட்லீராஜா ராணி படத்தைத் தொடர்ந்து தெறி,மெர்சல்,தளபதி63 என தனது நான்கு படங்களில் 3 படங்களை விஜய்யை வைத்தே அட்லீ இயக்கி விஜய்யின்
பேவரைட் இயக்குநராக உருவெடுத்து இருக்கிறார்.மெர்சல் போல இப்படத்தையும் ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாக உருவாக்க கடுமையாக உழைத்து வருகிறார். விஜய்யின் பேவரைட் இயக்குநர் என்பதாலும், முந்தைய 2 படங்களும் ஹிட் அடித்ததாலும் அட்லீ-விஜய் 3-வது முறையாக இணைந்திருக்கும் இப்படத்துக்கு தளபதி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.தெறி-மெர்சல்(Mersal)அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து 2016-ம் ஆண்டு வெளியான தெறி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றது. தொடர்ந்து இதே கூட்டணியில் 2017-ம் ஆண்டு வெளியான மெர்சல்(Mersal) திரைப்படம் விஜய்க்கு பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்தது. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற ஆளப்போறான் தமிழன் பாடல் இன்றுவரை இளைஞர்களின் பேவரைட் பாடலாக உள்ளது.


நயன்தாராவில்லு படத்துக்குப் பின் சுமார் பத்து ஆண்டுகள் கழித்து விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். தொடர்ந்து ஹிட் கொடுத்து சினிமாவுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம்வரும் நயன்தாரா இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். இதுவும் இப்படத்துக்கு ஒரு மிகப்பெரிய பிளஸ் பாயிண்டாக அமைந்துள்ளது.


கில்லிஇப்படத்தில் விஜய்(Vijay) ஸ்போர்ட்ஸ் பயிற்சியாளராக நடிக்கவிருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை வைத்துப் பார்க்கும்போது அவர்
விளையாட்டு வீரராகவும் படத்தில் நடிக்க வாய்ப்புகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 16 ஆண்டுகளுக்கு முன் வெளியான கில்லி படத்தில்
விஜய் கபடி வீரராக நடித்திருந்தார். அப்படம் விஜய்யின் திரைவாழ்வில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.


ஸ்போர்ட்ஸ்தளபதி63(Thalapathy63) படத்தில் விஜய் ஸ்போர்ட்ஸ் பயிற்சியாளராக நடிப்பதால் செண்டிமென்டாக இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்போர்ட்ஸ் படத்திற்கு ஏற்ப உடலை மாற்றியமைக்கும் முயற்சியில் விஜய் சமீபகாலமாக ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தீபாவளி சென்டிமெண்ட்2017-ம் ஆண்டு மெர்சல்(Mersal) திரைப்படமும் 2018-ம் ஆண்டு சர்கார் திரைப்படமும் தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்தது. இதில் மெர்சல் மிகப்பெரிய வசூலைக் குவித்தது. அந்த வரிசையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு 'தளபதி63' படம் திரைக்கு வெளியாகவுள்ளது. வருடத்துக்கு ஒரு படம் என கதைகளை பொறுமையாக தேர்ந்தெடுத்து நடிக்கும் விஜய் சமீபகாலமாக தீபாவளியைக் குறிவைத்து தனது படங்களை வெளியிட ஆரம்பித்து இருக்கிறார். தீபாவளி செண்டிமெண்ட்டை விஜய்(Vijay) தொடருவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி !மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப்
ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான
மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.