கனமான தோற்றமா?​ நொடிகளில் ஒல்லியாக தெரிய (look slim) இந்த வித்யாசமான குறிப்புகளை பின்பற்றுங்கள்!

கனமான  தோற்றமா?​ நொடிகளில் ஒல்லியாக தெரிய (look slim) இந்த வித்யாசமான குறிப்புகளை பின்பற்றுங்கள்!

இன்று பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன். விடிந்தால் தீர்வு காணும் விஷயம் அல்ல. இந்த புத்தாண்டின் பார்ட்டிகளில் நீங்கள் ஒல்லியாகவும் அழகாகவும் தோன்ற  தற்காலிக தீர்வாக(tips) நம் உடையணியும் முறையில் சற்று கவனம் செலுத்துவோம்.


பெண்களின் உடற்பருமன் என்பது ஒரே சீராக இல்லாமல், தேவையற்ற இடங்களில் கொழுப்பு படிவத்தின் காரணமாக சதை பிதுங்கிய தோற்றம் பெண்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்துகிறது.


நீங்கள் இதனால் சங்கடத்தில் இருப்பவரா?


இடுப்பு,  இருப்பிடத்தில் அதிகமாக இருக்கும் கொழுப்பினால் ஏற்படும் சீரற்ற தோற்றத்தை தற்போதைக்கு  தவிர்க்க கீழாடை உடுத்தும் முறையில் சிறப்பு கவனம் வேண்டும். அப்போது தான் நமக்கு அது ஒல்லியான தோற்றம் தரும்.


எப்படி எவ்வாறு என்று சிறிய யோசனையைகள் சில....


ப்ரிண்ட்ஸ் / பட்டேர்ன்ஸ்  (prints & patterns) -


சுடிதார், குர்தி, டாப் போன்ற ஆடைகளுக்கு கீழாடையை உடுத்தும் லெக்கின்ஸ் எல்லோருக்கும் பொருந்தாது.ப்லைன் லெக்கின்ஸ் (plain leggings) இன்றைய பெண்களின் மத்தியில் பிரபலம்.  இவை உடல்பருமனாக இருக்கும் பெண்கள் சற்று மாற்றி யோசிக்க வேண்டும்.


நேர்கோடுகள் உள்ள லெக்கின்ஸ் அல்லது பேண்ட்க்கு முன்னுரிமை அளியுங்கள். அதுப்போல சாமக்கோடு உள்ள லெக்கிங்ஸ் ஜெஃகிங்ஸ் அணிந்தால் நாகரீக தோற்றத்தோடு ஒல்லியாவும் தெரியும்.


கோடுகள் டிசைன் என்று பார்க்கும் போது அலை வடிவ ஜீன்ஸ் (flared jeans) கூடுதல் அழகோடு கச்சித மேனியாக இருக்கும்.


Printed pants - how to look slimmer -1


ஷேப் வெற் (shapewear) -


இதுபோன்ற உள்ளாடைகள் இருப்பதினால் உடனடியாக நம்  உடம்பிற்கு ஒல்லியான தோற்றம் தருகிறது . இது உடம்பில் இருக்கும்  கூடுதல் தசைகளை .உள்ளே இழுத்து உங்களை ஒல்லியாக காண்பிக்க உதவும். இது ஒன்று உங்கள் வார்டரோபில் இருப்பது மிக அவசியம். எந்த விதமான உடைகளுக்கும் இது பொருந்தும். நொடியில் நீங்கள் ஒல்லியாக தெரிய இது ஒரு மாய வித்தை !


காலணி -


ஆடைகள் மட்டும் இல்லாமல் தோற்றத்தை கவனம் செலுத்தும் போது காலணியும் அடங்கும். உயரம் கூட தெரிய,  ஹீல்ஸ் செப்பல் பயன்படுத்தினால் மேனி ஒல்லியாக (slim) தெரியும். அதுவும் நுட் ஹீல்ஸ் உங்களை இன்னும் உயரமாக காண்பிக்கும் !நீங்கள் உங்கள் நிறத்திற்கு ஏற்ற ஹீல்ஸை வாங்குங்கள். அது பிளாக் அல்லது பாயிண்டட் ஹீல்ஸ் ஆகா இருக்கலாம். இதைl உங்கள் கால்கள் இன்னும் நீளமாக தோற்றம்  அளிக்கும்.


Heels - how to look slimmer -2நம்மில் பலர் ஆடைகளை சரியாக வாங்குவதில்லை. அதாவது, ஏதேனும் ஒரு ஆடையை வாங்குவதற்கு முன்பு, இது நம் உருவத்திற்கு ஏற்றதா என்று சிந்திக்கிறது இல்லை. இதில் நாம் இவாறு தெரிவோம் என்று யோசிப்பது முக்கியம். நன்றான ஆடைகள் என்றால் அதில் நாம் வசதியாகவும் எந்த வித ஒற்றப்பாடே இல்லாமலும் இருக்கவேண்டும்.மேலும், இது நம்மளுடைய தோற்றத்தில் இருக்கும் பலவீங்களை முக்காடு போட்டு மூடிவிடும். அதுவே சிறந்த ஆடையின் அடையாளம்!


  • லூசான ஆடைகள் உங்களை பெரிதாகதான் காட்டும். இதற்கு மாறாக ஸ்லிம்  பிட் (slim fit) ஆடைகளை தேர்ந்தெடுங்கள்.

  • உள்ளாடைகளையும் சரியான சைசில் போடவேண்டும்.

  • இடுப்பின் கீழ்ப்பகுதிக்கு முக்காடு போடுவதுபோல ஒரு கார்டிக்கன் (cardigan) அல்லது  ஒரு ஷர்டை இழுத்து கட்டலாம்.

  • அசிமெட்ரி ஸ்கர்ட் அல்லது அலை வடிவு ஸ்கர்ட் (assymmetric/flared skirt) உடம்பின் கீழ் பகுதியை உருமறைப்பு செய்த்துவிடும்.

  • எந்த நிறத்தில் ஆடை  அணிகிறோம் என்பதும் மிக முக்கியம். கருப்பு நிறம் அல்லது கரும் பச்சை, கரும் சிவப்பு அல்லது ஊதா கலர் போன்ற இருன்ட கலர்கள் தொடைகளை  இன்னும் ஒல்லியாக காட்ட உதவும் .


மேலும் சற்றேண்டு ஒல்லியாக தெரிய...


நீங்கள் நிற்கும் விதமும் முக்கியம். நீங்கள் புகை படங்களில் எவ்வாறு   நிற்கிறீர்கள் என்று தெரிந்து கொண்டு சில டிப்ஸை பின்பற்றுங்கள்.


  • உதாரணத்திற்கு - நிற்கும்போது இரெண்டு கைகளையும் இடுப்பில் வைத்து போஸ் அளிக்கிறது .

  • நேராக நிற்பது , கூன்  போடாமல் நிற்பது.

  • கால்களை கோணலான விதத்தில் வைத்து நிற்பதுcrossed legs - how to look slimmer - 3


இவைகள் தர்கலிக தீர்வானலும், நிரந்தர தீர்வுக்கு வழிவகுக்க வேண்டும் என்றால் நீங்கள் உண்ணும் உணவில் சில மாற்றங்களை செய்யவேண்டும். ஒழுக்கமான டயட் மற்றும் போதுமான அளவு தண்ணீரை குடிக்க வேண்டும்.


உடல் பயிற்சியிலும் கவனம் செலுத்துங்கள். ஒரு பக்கம் நிரந்தர தீர்வை பார்க்க முயற்சிக்கவும், மறுபக்கம் எங்களின் உடனடி தீர்வையும் (டிப்ஸ்) பின்பற்றுங்களேன்!


எனவே, நீங்கள் பார்ட்டியில்  ஜொலிக்க தயாரா?


giphy


படங்களின் ஆதாரங்கள் - பிக்ஸாபெ ஜிபி பேக்செல்ஸ்


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி !மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.