பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ஆஸ்கர் மன்னன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் , இந்தி சூப்பர் ஸ்டார் அக்க்ஷய் குமார் மற்றும் எமி ஜாக்சன் ஆகியோர் நடிப்பில் கடந்த நவம்பர் 29ஆம் தேதி 2.0 படம் ரிலீஸ் ஆனது. இது 2010ஆம் ஆண்டு வெளியான எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் இந்திய சினிமா வரலாற்றில் மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் ஆகும். இதன் பட்ஜெட் மட்டும் 543 கோடி ரூபாய்கள். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வெளியிட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினி மற்றும் ஷங்கர் இணையும் படம் என்பதால் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. இந்த படம் 2டி மற்றும் 3டி ஆகிய இரண்டு வடிவங்களில் வெளியிடப்பட்டது.
இந்த படம் தமிழில் மட்டுமின்றி, இன்னும் 14 மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளிவந்துள்ளது. இந்த படத்தின் சாட்டிலைட் மற்றும் இதர உரிமைகள் சுமார் 370 கோடிக்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் மற்றைய நாடுகளில் நவம்பர் 29ஆம் தேதி வெளியான இப்படம், சீனாவில் வரும் 2019ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி திரையிடவிருப்பது குறிப்பிடத்தக்கது. சீனாவில் மட்டும் கிட்டத்தட்ட 10000 தியேட்டர்களிலும் , 56000 ஸ்க்ரீன்களிலும் இந்த படம் திரையிடப்பட உள்ளது. இதில் 47000 3டி ஸ்க்ரீன்களில் திரையிட உள்ளார்கள். சீன மொழி அல்லாத ஒரு வெளிநாட்டு திரைப்படம் இவ்வளவு அரங்குகளில் திரையிடப்படுவது இதுவே முதல் முறை. எல்லாம் சூப்பர் ஸ்டார் ஜாலம் !!
செல்போன் உபயோகிப்பதால் பறவைகள் எப்படி பாதிக்கப்படுகின்றன மற்றும் அவை மனிதர்களை பழிவாங்க தொடங்கினால் என்ன நடக்கும் என்பதை கிராபிக்ஸ் தொழில்நுட்பத்துடன் சூப்பர்ஸ்டார் என்ற மாஸ் ஹீரோவை வைத்து ரசிகர்களை கட்டிப்போடும் ஒரு கதையை அற்புதமாக எடுத்து ரசிகர்களுக்கு விசுவல் விருந்து வைத்துள்ளார் டைரக்டர் ஷங்கர். அதுவே இப்படத்தின் அபார வெற்றியின் ரகசியம்.
வசூல் நிலவரம் :
2.0 படம் நவம்பர் 29ஆம் தேதி இந்தியாவில் 6900 ஸ்க்ரீன்களிலும், வெளிநாடுகளில் 2000க்கும் மேற்பட்ட ஸ்க்ரீன்களிலும் திரையிடப்பட்டது. முதல் நாளில் இந்தியாவில் 80 கோடி வசூலித்து சாதனை புரிந்தது. இந்திய அளவில் இது இரண்டாமிடம். இதற்கு முன்னர் பாஹுபலி 2 படம் 154 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
2.0 படம் உலக அளவில் முதல் நாளில் 117.34 கோடி ரூபாய் வசூலித்து சாதனை புரிந்தது.
இரண்டாம் நாளில் இந்திய அளவில் 45 கோடி ரூபாய்களை அள்ளியது. ஆஸ்திரேலியா பாக்ஸ் ஆபிசில் முதல் இடம் பிடித்தது. மேலும் மலேசியாவில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த தமிழ் படம் என்ற சாதனையையும் படைத்தது.
மூன்றாவது நாளில் தென்னிந்தியாவில் லேசான சரிவை சந்தித்த போதிலும், இந்திய அளவில் 56~57 கோடிகளை வசூல் செய்தது. மூன்றாம் நாள் முடிவில் ஒட்டுமொத்தமாக 290 கோடிகளை வசூல் செய்திருந்தது 2.0. அமெரிக்காவில் லிங்கா படத்தின் மொத்த வசூலை இரண்டே நாட்களில் கடந்தது 2.0. பாகிஸ்தானில் திரையிடப்பட்ட தியேட்டர்களின் எண்ணிக்கை 20லிருந்து 75ஆக அதிகரிக்கப்பட்டது.
நான்காவது நாளான ஞாயிற்றுக்கிழமை , திரையிடப்பட்ட இடங்களில் எல்லாம் ஹவுஸ் புல்லாக ஓடத்தொடங்கியது. ஒட்டுமொத்தமாக முதல் நான்கு நாள் முடிவிலான (நவம்பர் 29 – டிசம்பர் 2) காலகட்டத்தில் 400 கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்தது.
இதற்கு முன்னதாக தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படம் எந்திரன் ஆகும். அதன் சாதனையை 2.0 முறியடித்தது. இதுதான் சூப்பர் ஸ்டாரின் சிறப்பு. தனது சாதனைகளை தானே முறியடிக்கும் ஒருவர் ரஜினிகாந்த் மட்டுமே !!
ஐந்தாம் நாள் முடிவில் உலக அளவில் 451 கோடிகளை குவித்தது. வாட இந்தியாவில் வெளியிடப்பட்ட இந்த படம் 111 கோடிகளை குவித்தும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இதுவரை படமும் செய்யாத வசூல் வேட்டையை நிகழ்த்தியுள்ளது 2.0.
ஒட்டுமொத்தமாக முதல் வார முடிவில் 520 கோடிகளை குவித்து மிகப்பெரும் சாதனையை படைத்துள்ளது ஷங்கரின் 2.0 படம். உலக அளவில் 500 கோடிகளை குவித்த முதல் தமிழ் படம் 2.0 என்பது இப்படத்தின் தனிச்சிறப்பு.
படங்களின் ஆதாரங்கள் :இன்ஸ்டாகிராம்
ஜி-ஐ-எப்-ஜிஃபி