logo
ADVERTISEMENT
home / வாழ்க்கை
பாகிஸ்தான் ‘ராணுவத்தினரிடம்’ சிக்கியபோது.. அபிநந்தன் ‘மனைவி’யிடம் என்ன சொன்னார் தெரியுமா?

பாகிஸ்தான் ‘ராணுவத்தினரிடம்’ சிக்கியபோது.. அபிநந்தன் ‘மனைவி’யிடம் என்ன சொன்னார் தெரியுமா?

பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் சிக்கியபோது, தனது மனைவியிடம் அபிநந்தன்(Abhinandan) என்ன பேசினார்? என்கிற விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அபிநந்தன்(Abhinandan)

பாகிஸ்தான் விமானப்படையின் எப்-16 ரக போர் விமானத்தை இந்திய(India) விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன்(Abhinandan) மிக்-21 பைஸன் ரக போர் விமானத்தின் மூலம் விரட்டிச் சென்றார். ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜவுரி வான் பகுதியில் பாகிஸ்தான் போர் விமானங்களை அபிநந்தன் (Abhinandan) இடைமறித்தார். அப்போது அந்த பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய அபிநந்தன் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் இருந்து திரும்பியபோது அந்நாட்டு விமானப்படையினர் அபிநந்தன் விமானத்தைச் சுட்டனர். இதில் அவர் பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினார். எனினும் பாகிஸ்தான் இராணுவத்தினர் அவரை உயிருடன் பிடித்து போர்க்கைதியாக தங்களது நாட்டுக்கு அழைத்துச் சென்றனர். ஏறக்குறைய 60 மணிநேரத்துக்கும் மேலாகப் பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியிலிருந்த அபிநந்தன், அதன்பின் இந்திய(India) அதிகாரிகளிடம் (Abhinandan) ஒப்படைக்கப்பட்டார்.

ADVERTISEMENT

சாதனை

பாகிஸ்தான் விமானப்படையின் எஃப்- 16 விமானத்தை அபிநந்தன் சுட்டு வீழ்த்தியது பெரும் வியக்கத்தக்க விஷயமானது. ஏனென்றால், அமெரிக்கத் தயாரிப்பான எப்-16 ரக போர் விமானம் அதி நவீன தொழில்நுட்பம் கொண்டது. இந்தியாவின்(India) மிக்-21 விமானத்தைக் காட்டிலும் அதிகமான வசதிகள், நவீன தொழில்நுட்பங்கள் கொண்டது. இதுவரை அந்த விமானத்தை யாரும் சுட்டு வீழ்த்தியது இல்லை.ஆனால், 20 ஆண்டுகளுக்கு முந்தைய ரஷிய தயாரிப்பான மிக்-21 பைஸன் ரக விமானத்தின் மூலம் எப்-16 ரக விமானத்தை அபிநந்தன் சுட்டு வீழ்த்தியதுதான் ஆச்சர்யமானது . இதன்மூலம் எஃப்-16 போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமை அபிக்கு கிடைத்தது.

மரியாதை

ADVERTISEMENT

அபிநந்தனின் சேவையைக் கொண்டாடும் விதமாக ரியல் ஹீரோ அபிநந்தனுக்குப் புகழாரம் சூட்டும் வகையில் இந்திய(India) இளைஞர்கள் பலரும் அபிநந்தன் வைத்திருக்கும் மீசையைப் போல் தங்கள் மீசையையும் வடிவமைத்துக் கொண்டனர். இதனால் அபிநந்தனின் ‘கன்ஸ்லிங்கர்‘ மீசை இந்திய இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. சலூன் கடைகளும் இளைஞர்கள் ஆர்வத்தை பாராட்டி இந்த மீசையை வைத்துக்கொள்ளும் இளைஞர்களுக்கு கட்டணத்தில் குறிப்பிட்ட சதவீதம் தள்ளுபடி வழங்கியது.

சிகிச்சை

ADVERTISEMENT

பாகிஸ்தான் ராணுவகத்தினரின் பிடியில் இருந்து மீண்டதால் அபிநந்தனுக்கு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் இந்திய ராணுவம் தரப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை பாகிஸ்தான் ராணுவத்தினர் மூளைச்சலவை செய்து அனுப்பினார்களா? என்றும் சோதிக்கப்பட்டது. மேலும் அபிநந்தனுக்கு இந்திய ராணுவம் தரப்பில் இருந்து விடுமுறையும் அளிக்கப்பட்டது. இந்தநிலையில் பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் இருந்தபோது அபி தனது மனைவியிடம் உரையாடிய விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

வீடியோ

முன்னதாக சர்வதேச நாடுகள் கொடுத்த அழுத்தம் காரணமாக அபிநந்தன் டீ குடித்தபடி பேசும் வீடியோ ஒன்றை பாகிஸ்தான் வெளியிட்டு இருந்தது. அதில் டீ கப்பை கையில் பிடித்தபடி அபிநந்தன் பாகிஸ்தான் வீரர்களிடம் பேசுவது போலவும், அவர்களின் கேள்விக்கு நான் அதனை உன்னிடம் சொல்ல முடியாது என்று அவர் அழுத்தத்துடன் கூறுவது போலவும் காட்சிகள் இருந்தன. இதனைப்பார்த்த பலரும் அபிநந்தனின் வீரத்தை போற்றிப் புகழ்ந்தனர்.

ADVERTISEMENT

தன்வி மார்வா

தொடர்ந்து அபிநந்தனை அவரின் மனைவியுடன் செல்பேசி மூலம் பேசவைத்து ஏதேனும் தகவல்களைத் திரட்ட பாகிஸ்தான் உளவு அமைப்பு முயற்சி செய்தது. இதற்காக அவரின் மனைவி தன்வி மார்வாவுக்கு பாகிஸ்தான் அரசு போன் செய்துள்ளது.

டீ ரெசிபி 

ADVERTISEMENT

அபிநந்தனிடம் வழக்கமான நலம் விசாரிப்புகளுக்குப்பின், ”அப்பா எங்கே? எனக் கேட்கும் நம் பிள்ளைகளிடம் என்ன சொல்ல? என்று தன்வி கேட்டிருக்கிறார். அதற்கு அபிநந்தன், ”அப்பா ஜெயிலில் இருக்கிறார் என்று சொல்” எனக்கூறியுள்ளார். இப்படிச்சென்ற அவர்களின் உரையாடலின் இடையில் நீங்கள் குடித்த டீ எப்படியிருந்தது? என தன்வி கேட்கிறார். அதற்கு அபிநந்தன்,”நன்றாக இருந்தது” என்று சொல்ல பதிலுக்கு தன்வி,”நான் போடும் டீயைவிட நன்றாக இருந்ததா? என்று கேட்கிறார். அதற்கு அபிநந்தன், ”ஆம், நன்றாகவே இருந்தது,” என்கிறார். உடனே தன்வி, ”அப்படியானால் அந்த ரெசிப்பியைக் கேட்டுட்டு வாங்க,” என நகைச்சுவையாகக் கூறுகிறார்.

இதன் வழியாக தனது கணவனின் மன அழுத்தத்தைக் குறைக்க தன்வி முயற்சி செய்தது தற்போது தெரியவந்துள்ளது.அபிநந்தனின் மனைவி தன்வி மார்வா, முன்னாள் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் பைலட் என்பது குறிப்பிடத்தக்கது.

 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

ADVERTISEMENT

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிகச்சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

02 Apr 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT