logo
ADVERTISEMENT
home / Life
புதிதாக திருமணம் ஆனவரா?.. அப்போ இதெல்லாம் கொஞ்சம் செக் பண்ணிக்கங்க!

புதிதாக திருமணம் ஆனவரா?.. அப்போ இதெல்லாம் கொஞ்சம் செக் பண்ணிக்கங்க!

புதிதாக திருமணம்(Marriage) ஆன பெண்கள் அனைவருமே சற்றுநாள் உண்மையான சொர்க்கத்தில் தான் இருப்பார்கள். கணவன், புதிய உறவினர், விசேஷம், விருந்துகள் என ஒருசில மாதங்கள் அனைவருமே புது மணப்பெண்ணை தாங்கு தாங்கென தாங்குவார்கள். பிறந்த வீட்டை விட்டு புது மணப்பெண் பிரிந்து இருந்தாலும் அந்த கவலைகளை இந்த புதிய உறவுகள் பின்னுக்குத்தள்ளி விடும். அந்தவகையில் வேறு என்னவெல்லாம் புதிதாக திருமணம்(Marriage) ஆன பெண்களுக்கு கிடைக்கும் என்பதை இங்கே பார்க்கலாம்.

உங்கள் கனவுநாயகன்

ஒவ்வொரு நாளும் உங்கள் மனதுக்குப் பிடித்தவருடன் செலவு செய்வீர்கள். உங்கள் கனவு நாயகனுடன் வாழ வேண்டும் என்ற உங்களது நீண்டநாள்
ஆசை நிறைவேறும். ஒவ்வொரு நாள் காலை,இரவு பொழுதுகள் அவருடனேயே இருப்பீர்கள். முதல் ஒரு வருடம் சொர்க்கத்தில் இருப்பீர்கள்.

ADVERTISEMENT

அட்ஜஸ்ட்மெண்ட்

இதுநாள்வரை நீங்கள் உங்களுக்குப்பிடித்த மாதிரி இருந்து இருப்பீர்கள். ஆனால் இதற்குப்பின் உங்கள் வாழ்வில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும். பிறரது வாழ்க்கை முறைகளுக்கு ஏற்ப நீங்கள் சில அட்ஜஸ்ட்மெண்ட்களை செய்ய வேண்டியது இருக்கும்.

Also Read : திருமண நாள் வாழ்த்துக்கள்

ADVERTISEMENT

நோ டெட்லைன்ஸ்

இதற்கு முன்னால் வேலை மற்றும் பிற விஷயங்கள் தொடர்பாக உங்களுக்கென சில டெட்லைன்ஸ் இருந்து இருக்கும். இதை நினைத்து நீங்கள் அவ்வப்போது டென்ஷனும் ஆகி இருப்பீர்கள். ஆனால் திருமணத்திற்கு பின் உங்கள் கணவர் மற்றும் உறவினர்கள் உங்களைச்சுற்றி இருப்பார்கள். இதனால் டெட்லைனை நினைத்து இனிமேல் கவலைப்பட வேண்டியது இருக்காது.

எப்படி உங்கள் கணவருடனான காதலை அதிகப்படுத்துவது?

ஆடைகள் மாற்றம்

ADVERTISEMENT

இதற்கு முன்னாள் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் உடைகள் அணிந்து இருக்கலாம்.ஆனால் திருமணத்திற்குப்பின் உங்கள் உடைகளில் மிகப்பெரிய
மாற்றங்கள் வரக்கூடும். உங்கள் ஆடைகள் நன்றாக இருப்பதுடன், உடைகள் விஷயத்தில் உங்களுக்கு தேவையான முதிர்ச்சியும் கிடைக்கப்பெறும்.

திருமண வாழ்வில் தென்படும் சவால்கள்

செக்ஸ்

இதற்கு முன்னாள் செக்ஸ் குறித்து உங்களுக்கு பல்வேறு கனவுகள் இருந்திருக்கக்கூடும். உங்கள் வருங்கால கணவருடன் எப்படி எல்லாம் இருக்க வேண்டும்? என்பது குறித்து ஆயிரம் கனவுகள் கண்டிருப்பீர்கள். தற்போது அந்த கனவுகள் அனைத்தும் நனவாகி இருக்கும். இந்த புதிய உறவில் உங்களுக்கு மகிழ்ச்சியுடன், நிம்மதியும் கிடைக்கக்கூடும்.

ADVERTISEMENT

உங்கள் புதிய வீடு

உங்கள் கணவருடன் இணைந்து உங்கள் வருங்கால வீட்டை பார்த்துப்பார்த்து நீங்கள் வடிவமைக்கலாம். எந்த பொருள் எங்கு இருக்க வேண்டும்? என்ன நிறங்களில் பெயிண்ட் அடிக்க வேண்டும்? என்பது குறித்து நீங்கள் இருவரும் சேர்ந்து முடிவு செய்யலாம். கணவருடன் இணைந்து வீட்டை அலங்கரிப்பது உங்களுக்கு சில மறக்க முடியாத நினைவுகளையும் அளிக்கக்கூடும்.

பண்டிகைகள்

ADVERTISEMENT

திருமணம்(Marriage) ஆன முதல் வருடத்தில் வரக்கூடிய அனைத்து பண்டிகைகளுமே உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கக்கூடும். சந்தோஷம், மகிழ்ச்சி,கொண்டாட்டம் என அனைத்துமே உங்கள் கணவருடன் இருப்பதால் அது இரட்டிப்பாக இருக்கக்கூடும்.

புதிய பெற்றோர்கள்

கணவரின் அம்மா, அப்பா உங்களது அம்மா-அப்பாவாக மாறக்கூடும். கணவரின் உறவினர்கள் உங்களுக்கும் உறவினர்களாக மாறுவர். அவர்களுடன் உறவுகளை வளர்ப்பதில், நல்லிணக்கத்துடன் இருப்பதில் உங்களது நாட்கள் இனிமையாக கழியக்கூடும்.

ADVERTISEMENT

பொறுப்புகள்

இதுநாள்வரை உங்கள் வீட்டில் ஒரு குழந்தையைப் போல உங்களை பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் திருமணம்(Marriage) ஆனவுடன் உங்களுக்கும் சில பொறுப்புகள் வரக்கூடும். வீடு தொடர்பான பல்வேறு விஷயங்களில் உங்கள் பங்களிப்பையும் நீங்கள் அளிக்க வேண்டியது இருக்கும்.

உங்கள் வீடு

திருமணம்(Marriage) ஆனவுடன் உங்கள் சந்தோஷம் அதிகரிப்பதைப் போல சில விஷயங்களை நீங்கள் மிஸ் செய்யவும் கூடும். உங்கள் வீடு, அப்பா-அம்மா, உங்களது அறை, சகோதரன்-சகோதரி, உறவினர்கள், தோழிகள் என பலரையும் நீங்கள் மிஸ் செய்யக்கூடும். அப்போது உங்கள் அப்பா-அம்மாவின் பங்கு உங்களது வாழ்வில் எந்தளவு இருந்தது என்பதையும் நீங்கள் உணரக்கூடும். இதுபோன்ற செயல்கள் உங்களுக்கு முதிர்ச்சி அளிப்பதுடன் உங்கள் பொறுப்புகளையும் இனிதாக்கும். இதற்குமேல் சிறுபிள்ளைத்தனமாக அப்பா-அம்மா, சகோதரன்-சகோதரி ஆகியோருடன் நீங்கள் சண்டை போட்டுக்கொண்டிருக்க மாட்டீர்கள்.

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப்
ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான
மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

Also read expectation of women from men after marriage.

05 Mar 2019
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT