பார்லர் போகாமலே பளபளக்க வேண்டுமா ! மேனி அழகை மேலும் அழகாக்க இயற்கை குளியல் பொடி !

பார்லர் போகாமலே பளபளக்க வேண்டுமா ! மேனி அழகை மேலும் அழகாக்க இயற்கை குளியல் பொடி !

சோப்பில் உள்ள அல்கலைன் எல்லோருடைய சருமத்திற்கும் ஏற்றதல்ல. இதனால் வறண்ட சருமம் மேலும் வறள்கிறது. இது தவிர மரபணு மூலம் வறண்ட சருமம் கொண்டவர்கள் பல வருடங்களாக சோப் பயன்படுத்துபவர்களுக்கு சோரியாசிஸ் போன்ற நோய்களும் ஏற்படலாம்.                                                               

இதற்காக இயற்கையான முறையில் ஒரு தீர்வு இருக்கிறது. ஸ்நான பொடி என்று நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பொடியை நீங்கள் பயன்படுத்தலாம். ஆனால் அதிலும் கஸ்தூரி மஞ்சளின் அளவு அதிகமாக இருந்தால் உங்களுக்கு சருமம் மேலும் வறண்டு விட வாய்ப்பிருக்கிறது.                                                                      

ஆகவே உங்கள் அழகை தக்க வைக்க இயற்கையான குளியல் பொடியை (body wash powder) நாம் தயார் செய்யலாம். வாருங்கள்.

pixabay

தேவையான பொருள்கள்

சோம்பு 100gm
கஸ்தூரி மஞ்சள் 50gm
வெட்டிவேர் 200gm
அகில் கட்டை 200gm
சந்தனத்தூள் 300gn
கார்போக அரிசி 200
தும்மராஷ்டம் 200
எலுமிச்சை 200
கோரைக்கிழங்கு 200
கோஷ்டம் 200
ஏலரிசி 200
பாசிப்பயிறு அரை கிலோ

Youtube

மேலே கொடுக்கப்பட்ட பொருள்களை தனித்தனியாக காய வைக்க வேண்டும். 2 நாட்கள் வெயிலில் காய்ந்த பிறகு தனி தனியாக ஒவ்வொரு பொருளையும் பொடியாக்கவும். அதன் பின்னர் எல்லா பொடிகளையும் நன்றாக கலந்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ளுங்கள்.                                                                 

குளிக்கும்போது அளவாக எடுத்து தண்ணீரில் குழைத்து உங்கள் உடலில் பூசி 10 நிமிடம் ஊறவிட்டு குளித்து வாருங்கள். பார்லர் போகும் அவசியமே இல்லாமல் பளபளப்பாக மாறி விடுவீர்கள். அதே போல இவை அனைத்தும் மூலிகைகள் என்பதால் சரும பிரச்னைகளும் உங்களுக்கு வரவே வராது.

 

Youtube

தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சோரியாசிஸ் போன்ற நோய்கள். தேமல், படர்தாமரை, கரும்புள்ளிகள், கருவளையங்கள் கருந்திட்டுக்கள் முகப்பரு போன்ற எல்லா சரும பிரச்னைகளும் மாயமாக மறையும். தேகம் பொன்னால் வார்த்தது போல மின்னும்.

நான் குறிப்பிட்ட அளவை பயன்படுத்தினால் 3 மாதங்கள் வரை உபயோகிக்கலாம். பலன் தெரிந்து அதன் பின்னர் அதனையே தொடர்வீர்கள்.

 

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!