வாழைப்பூ சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் மற்றும் சுவையான ரெசிபிகள்!

வாழைப்பூ சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் மற்றும் சுவையான ரெசிபிகள்!

வாழையடி வழை என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள். வாழைக்கு அழிவே கிடையாது, அதன் தண்டு, காய், பழம், பூ, இலை, நார், பட்டை என எல்லாவற்றையும் நாம் பயன்படுத்துகிறோம். 

இதற்கு காரணம் வழையின் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இதில் வாழைப்பூ பல்வேறு நன்மைகளை நமக்கு அளிக்கின்றது. வாழைப்பூ குருத்தை பச்சையாகவே சாப்பிடலாம். வாழைப் பூ சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் மற்றும் ரெசிபிகள் குறித்து காண்போம்.

வாழைப்பூ - ஆரோக்கிய நன்மைகள்

இரத்தசோகை நீங்க : வாழைப்பூவை இரண்டு வாரங்கள் உட்கொண்டால் இரத்தில் உள்ள கொழுப்புகள் குறைக்கப்பட்டு, இரத்த ஓட்டம் சீராகும். இதனால் இரத்தசோகை வராது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும். 

பெண்களுக்கு : பெண்கள் வாழைப்பூவை (valaippu) தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப்படுதல், வயிற்று வலி ஆகியவற்றை போக்கும்.

கர்ப்பிணிகளுக்கு : கருவுற்றிருக்கும் பெண்களுக்கு கருவுற்ற சில மாத காலங்கள் வாந்தி வருதல், தலைசுற்றல், உடல் மற்றும் மன சோர்வு நிலை போன்றவை ஏற்படும். இத்தகைய அனைத்து குறைபாடுகளையும் களைவதில் வாழைப்பூ உணவு சிறப்பாக செயல்படுகிறது.

twitter

மூளைக்கு : வாழைப்பூவில் பொட்டாசியம் சத்து அதிகம் நிறைந்துள்ளது. வரமொருமுறை வாழைப்பூவை சமைத்து சாப்பிடுவதால் நாள் முழுவதும் சுறுசுறுப்பு, உற்சாகம் நிறைந்திருக்கும். மூளை எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க செய்யும். 

மலச்சிக்கல் : மலச்சிக்கல் பிரச்சனையை போக்கும் ஒரு சிறந்த இயற்கை உணவாக வாழைப்பூ பயன்படுத்தப்பட்டிருக்கிறது. வயிற்றில் நீர் சத்து குறைபாட்டால் மலம் இறுகி போவதை வாழைப்பூ தடுக்கும்.

அல்சர் குணமாக : அல்சர் என்பது வயிறு மற்றும் குடல்களில் எரிச்சல் ஏற்படுத்தக்கூடிய ஒரு புண் ஆகும். இதனை சரி செய்ய வாரம் ஒரு முறை வாழைப்பூவை உணவில் சேர்த்து வர வேண்டும். 

இதய நோய்களுக்கு : ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து இதயத்திற்கு சரியான அளவில் ரத்தம் சென்று வர அடிக்கடி வாழைப்பூவை பக்குவம் செய்து சாப்பிட்டு வர வேண்டும். இதனால் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கலாம்

twitter

உடல் எடை அதிகரிக்க : வாழைப்பூவில் கொழுப்பு சத்து அதிகமாக இருப்பதால் இது ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. 

ரத்த சோகை : நமக்கு ரத்த சோகை குறைபாடு ஏற்படாமல் இருக்க இரத்தத்தில் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பது அவசியம். வாழைப்பூவை (valaippu) அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து ரத்த சோகை குறைபாடு நீங்கும். 

வாழைப் பூ ரெசிபிகள்

வாழைப் பூ கூட்டு 

தேவையானவை:

வாழைப் பூ -  1 கப்,
துவரம் பருப்பு - 1/2 கப்,
சின்ன வெங்காய்ம் - 8,
தக்காளி - 1,
மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன்,
தேங்காய் துருவல் - 1/2 கப்,
பூண்டு - 10 பல்,
பச்சை மிளகாய் - 2,
சீரகம் - 1 ஸ்பூன்,
சோம்பு - 1 ஸ்பூன்,
கடுகு, உளுந்து, கறிவெப்பிலை - தேவையான அளவு,
எண்ணெய் - 2 ஸ்பூன் உப்பு. 

youtube

செய்முறை:

வாழைப்பூவை நரம்பை நீக்கி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி  மோரில் போட்டு வைத்து கொள்ள வேண்டும். பூண்டு, சீரகம், சோம்பு, தேங்காய் துருவலை விழுதாக அரைத்து  கொள்ளவும். 

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து கருவேப்பிலை தாளித்து, பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, மஞ்சள் பொடி, உப்பு  சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் வாழைப்பூ, பருப்பு சேர்த்து இந்த கலவையுடன், தேங்காய் விழுது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிடவும். சுவையான வாழைப்பூ கூட்டு தயார்.

வாழைப்பூ வடை

தேவையான பொருள்கள் :

வாழை பூ - 1 கப்,
கடலை  பருப்பு  - 1/2 கப்,
துவரம் பருப்பு  - 1 ஸ்பூன்,
பச்சை  மிளகாய்  - 3,
இஞ்சி - சிறிது,
தண்ணீர் - தேவையான  அளவு,
கறிவேபில்லை - சிறிது,
எண்ணெய் - தேவையான  அளவு,
பெருங்காயம்  - 1/4 ஸ்பூன்,
பெருஞ்சீரகம் - 1/4   ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு. 

youtube

செய்முறை :

முதலில்  கடலை பருப்பு, துவரம் பருப்பு இரண்டையும்  3 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். வாழை பூவை  சுத்தம் செய்து மோர்ரில் நனைத்து பின்னர் சிறிது  சிறிதாக நறுக்கிகொள்ளவும். 

பருப்பு ஊறியதும் அதனுடன் பச்சை  மிளகாய், இஞ்சி, பெருங்காயம், பெருஞ்சீரகம், உப்பு தேவையான அளவு சேர்த்து  தண்ணீர் இல்லாமல் அரைக்கவும். பருப்பு பாதி அரைந்தவுடன் அதில் வாழைப்பூவை சேர்த்து  அரைக்கவும்.

இதனை ஒரு பத்திரத்தில் எடுத்து, அத்துடன் நறுக்கிய வெங்காயம், கறிவேபில்லை சேர்த்து நன்றாக கலக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், எழுமிச்சை பழம்  அளவு பருப்பை டுத்து உருட்டி பின்னர் ஒரு வாழை இலையில் எண்ணெய் தடவி வடை தட்டி  போடவும். வடை பொன் நிறமாக வந்தவுடன் எடுக்கவும். சூடான வாழைப்பூ (valaippu) வடை தயார். 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!