மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா .. தொடர் ஷூட்டிங்கால் உடல்நலம் பாதிப்பு

மருத்துவமனையில்  விஜய் தேவரகொண்டா .. தொடர் ஷூட்டிங்கால் உடல்நலம் பாதிப்பு

ஒட்டு மொத்த இந்தியாவின் ஈர்ப்பான நடிகர் விஜய் தேவரகொண்டா தற்போது மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாராம்,


அர்ஜுன் ரெட்டி என்கிற ஒற்றை படம் வெளிவந்தாலும் வந்தது மொழி பேதமின்றி ஒட்டு மொத்த இந்தியாவும் விஜய் தேவரகொண்டாவின் தீவிர ரசிகர்கள் ஆகி விட்டனர். சில சினிமா பிரபலங்களும் கூட இவரது ரசிகர்கள் என்பது இன்னொரு தகவல்.


இந்நிலையில் இத்தனை பேருக்கு பிடித்தமான விஜய் தேவரகொண்டா (vijaydevarakonda) தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.


ஜான்வியின் "ஹாட்டி"யான விஜய் தேவரகொண்டாவிற்கும் ராஷ்மிக்காவிற்கும் நடுவே என்னமோ' இருக்கிறது !ஹைதராபாத்தில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் இப்போது அனுமதிக்கப்பட்டிருக்கும் விஜய் தேவரகொண்டா தொடர் ஷூட்டிங்கால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார் எனும் தகவல் வெளியாகி உள்ளது.


புதன் அன்று காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு காரணமாக படப்பிடிப்பிலிருந்து மருத்துவமனைக்கு சென்ற விஜய்க்கு தேவையான ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் மற்றபடி கவலைப்படும்படி எதுவும் இல்லை என்று அவருக்கு நெருங்கிய நட்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


புதன்கிழமை காலை ஆறு மணி வரை ஷூட்டிங்கில் இருந்தேன் திடீரென காய்ச்சல் வந்ததால் சீக்கிரம் ஷூட்டிங் போக வேண்டும் என்பதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார் விஜய் தேவரகொண்டா.இதனால் கவலையடைந்த ரசிகர்கள் சீக்கிரம் விஜய் தேவரகொண்டா குணமாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்களாம்.


இவரது அடுத்த படமான டியர் காம்ரேட் வரும் ஏப்ரல் மாதம் வெளிவர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.இதில் ராஷ்மிகாவுடன் நடித்த லிப்லாக் காட்சி வைரலாகி இருக்கிறது என்பது கூடுதல் தகவல்.த்ரிஷாவுக்கு திருமணம் - முதலிடத்தில் விஜய் தேவரகொண்டா


 


படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ்.


 


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.