படப்பிடிப்பில் விபத்து : விக்கி கௌஷலிற்கு கன்னத்தில் 13 தையல்கள்

படப்பிடிப்பில் விபத்து : விக்கி கௌஷலிற்கு கன்னத்தில் 13 தையல்கள்

URI திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்கும் விக்கி கௌஷலின் ரசிகர்களிற்கு இது கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கலாம்.


அந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு பானு பிரதாப் சிங் உடன் ஒரு ஹாரர் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் விக்கி கௌஷல் (Vicky Koushal) . இந்த திரைப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.


இந்திய பெண்களின் தற்போதைய Obsession விக்கி கௌஷல் என்றால் அது மிகையில்லை. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தினால் விக்கியின் முகத்தில் 13 தையல்கள் போடப்பட்டுள்ளதாக தகவல் கூறுகின்றன.படப்பிடிப்பில் கடந்த 18ம் தேதி யாருமே எதிர்பார்க்காத வகையில் ஒரு முக்கியமான சண்டை காட்சியில் விக்கி கௌஷலின் மேல் கதவு விழுந்திருக்கிறது. இதனால் அவரது கன்ன எலும்புகள் முறிந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.


அதற்கு பின்னர் அவசரமாக மருத்துவம் செய்த பின்னர் அவர் முகத்தில் 13 தையல்கள் போடப்பட்டிருப்பதாக பிரபல நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.


பானு பிரதாப் பின் அந்த ஹாரர் கதை ஒரு கப்பலை கதைக்களமாக கொண்டிருக்கிறது என்றும், கடலுக்கும் கரைக்கும் நடுவே கதை நகர்கிறது என்றும் கூறப்படுகிறது.இதற்காக படக்குழுவினர் குஜராத்தில் உள்ள அலாங் எனும் இடத்தில் கடந்த 5 நாட்களாக படப்பிடிப்பு நடத்தி வந்திருக்கின்றனர். அலாங் என்பது உலகளவில் கப்பல்களை உடைப்பதில் சிறந்த இடமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.


கதைப்படி ஒரு சண்டைக்காட்சியில் விக்கி கௌஷல் ஒரு கதவை உடைத்து கொண்டு உள்ளே நுழைய வேண்டிய காட்சி படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக கதவு விக்கி மேல் வீழ்ந்திருக்கிறது. உடனடியாக அருகே உள்ள மருத்துவமனையில் முதலுதவி செய்த பின்னர் திங்கள் அன்று மும்பைக்கு பறந்திருக்கிறார்கள் குழுவினர்.


மருத்துவமனை கொடுத்த தகவல்படி விக்கி கௌஷலின் முகத்தில் 13 தையல்கள் போடப்பட்டிருப்பதாக தினசரிகள் தெரிவிக்கின்றன.


சூப்பர் டீலக்ஸ் - பெண்கள் மீதான பார்வையை அகலமாக்குகிறதுவிக்கி கௌஷல் வளர்ந்து வரும் பாலிவுட் நடிகர். பெண்களின் தற்போதைய பேவரைட் நாயகன். மூன்று வருடங்களுக்கு முன்பு மஸான் திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அந்த படம் எதிர்பார்த்தபடி போகவில்லை.


ராஸி, சஞ்சு, மணமர்ஷியன் போன்ற திரைப்படங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவருக்கு URI திரைப்படம் திருப்பு முனையாக அமைந்தது. சூப்பர் ஹிட் ஆனது.


தீபிகா படுகோன் கர்ப்பம்..? விவரங்கள் உள்ளே..!சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் கதையை கொண்ட திரைப்படமான URI படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது . தாங்க முடியாத வரவேற்பை பெற்ற URI திரைப்படம் குறித்து விக்கி கூறுகையில் இது மொத்த குழுவின் வெற்றி என்பதை மறுக்க முடியாது என்றும் ஓரளவிற்கு இந்த படம் வெற்றியடையும் என்று நாங்கள் கணித்திருந்தோம். ஆனால் ரசிகர்கள் இந்த அளவு கொண்டாடுவார்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை ரசிகர்களுக்கு நன்றி என்று அவர் தெரிவித்திருந்தார்.


இப்போதுதான் முதல் வெற்றியை ருசிக்கும் விக்கி கௌஷலிற்கு முகத்தில் 13 தையல்கள் போடப்பட்டிருப்பது பாலிவுட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.


முதல் சந்திப்பும்.. அதன்பின்பான பதட்டமும்.. மாதுரி பற்றி மனம் திறந்த சஞ்சய் தத் !படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ்


---                                              


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.