logo
ADVERTISEMENT
home / Celebrity gossip
பாட்லாவின் ரீமேக்கில் த்ரிஷா! இயக்குகிறார் ராதாமோகன்!

பாட்லாவின் ரீமேக்கில் த்ரிஷா! இயக்குகிறார் ராதாமோகன்!

இயக்குனர் ராதா மோகன் இயக்கிய அபியும் நானும் படத்தை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. 2008ல் வெளிவந்த இந்த திரைப்படத்தில் த்ரிஷாவின் (trisha) கதாபாத்திரம் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு இருந்தது.

இதே படத்தில் பிரகாஷ் ராஜின் நடிப்பு யாராலும் மறக்க முடியாததாக இருக்கும். பெண் குழந்தையின் பாசமிகு தகப்பனாக தனது அன்பு முழுவதையும் அள்ளிக் கொடுப்பவராக ,அவள் வளர வளர தன்னை விட்டு விலகி போகும் சமயம் தாங்க முடியாமல் தவிப்பவராக எனப் பல்வேறு உணர்ச்சிகளை திரையில் கொண்டு வந்திருப்பார்.

இந்நிலையில் ஏறத்தாழ 11 வருடங்களுக்கு பிறகு இந்த மூவர் கூட்டணி மீண்டும் இணையலாம் எனக் கூறப்படுகிறது. இயக்குனர் ராதாமோகன் மீண்டும் ஒரு ஹிந்தி படத்தையே ரீமேக் செய்யப் போகிறார்.

ADVERTISEMENT

காதல், த்ரில்லர், காமெடி என விதம் விதமான ஸ்டைல்களில் படங்களை இயக்கி அதில் தனித்துவத்தை ஏற்படுத்தியவர் இயக்குனர் ராதா மோகன். பெரும்பாலும் இவரது படங்கள் மென்மையான உணர்வுகளை கதையின் தளமாகக் கொண்டிருக்கும்

முன்னதாக இயக்குனர் ராதா மோகன் இயக்கிய சில நேரடி தமிழ்ப்படங்கள் தோல்வியடைந்த நிலையில் துமாரி சுலு எனும் இந்திப் படத்தை காற்றின் மொழியாக்கி வெளியிட்டார் இயக்குனர் ராதாமோகன். அது வணிக ரீதியாக வெற்றியடைந்த நிலையில் தனது அடுத்த படத்தையும் ரீமேக் செய்யவே விரும்புகிறார் இயக்குனர்.

இந்தியில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற பாட்லாவின் தமிழ் ரீமேக்கை ராதா மோகன் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ADVERTISEMENT

இதில் டாப்ஸி பன்னு கதாபாத்திரத்தில் த்ரிஷா நடிக்கிறார் எனக் கூறப்படுகிறது. அமிதாப்பின் கதாபாத்திரத்தை பிரகாஷ் ராஜ் ஏற்க பேசப்பட்டு வருகிறது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதே டாப்ஸி மற்றும் அமிதாப் நடிப்பில் வெளியான “பிங்க்” திரைப்படத்தை விடவும் பாட்லா படம் அதிகமாக வசூல் செய்து வெற்றிகரமாகத் திரைகளில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

சிறந்த தமிழ் ஹீரோயின்கள்

படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ்

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

ADVERTISEMENT

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

                                                                                                                                                   

 

22 Mar 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT