இவர்தான் சர்ச்சைக்குரிய தாடி பாலாஜியின் முதல் மனைவியா! வெளியே வராத புகைப்படங்கள் !

இவர்தான் சர்ச்சைக்குரிய தாடி பாலாஜியின் முதல் மனைவியா! வெளியே வராத புகைப்படங்கள் !

காமெடி நடிகர் தாடி பாலாஜியை தெரியாதவர்கள் தமிழகத்தில் இருக்க முடியாது. சினிமா படங்களில் காமெடி மூலம் பிரபலம் ஆனாரோ என்னவோ ஆனால் அவரது குடும்ப விவகாரம் காரணமாக யூட்யூப் முழுக்க பிரபலம் ஆனவர் தாடி பாலாஜி.                                 

நித்யா தான் தாடி பாலாஜியின் (balaji) மனைவி என்று எல்லோரும் நினைத்திருந்தனர். இந்நிலையில்தான் தாடி பாலாஜி தன்னுடைய முதல் மனைவி உடன் அவருக்கு திருமணம் நடந்த பின்னரும் பேசி வருவது தெரிந்துள்ளது.     

புதுவித நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சந்தியா .. இப்போது எப்படி இருக்கிறார் ?                                                 

Youtube

பாலாஜி குறித்து பல்வேறு பேட்டிகள் கொடுத்து தன்னுடைய பிரச்னையை மீடியா மூலம் வெளிக்கொணர்ந்தவர் நித்யா. பாலாஜி வேலை செய்யும் சேனல் எப்படியாவது நித்யா மற்றும் பாலாஜி மூலம் தங்கள் TRBயை தக்க வைக்க இருவரையும் பிக் பாஸ் வீட்டிற்குள் கொஞ்ச நாள் வாழ விட்டனர்.                                  

ஆனால் அங்கும் அவர்கள் கருத்து வேறுபாடு தொடர்ந்தது. அதே சமயம் நித்யா ஒரு மாதத்திலேயே வெளியே வந்து விட்டார். அதன் பின்னர் பாலாஜியின் நடவடிக்கைகளை பிக் பாஸ் மூலம் பார்த்த நித்யா தொடர்ந்து பலரின் வேண்டுகோளுக்கு இணங்க இன்னுமொரு 100 நாட்கள் பாலாஜியுடன் வாழ தீர்மானித்தார்.   

இப்படித்தான் என் வாழ்க்கையை என் இஷ்டம் போல் முழுவதுமாய் மாற்றிக்கொண்டேன் !                          

Youtube

அந்த 100 நாட்களில் பாலாஜி முழுமையாக மாறி விட்டால் ஏற்று கொள்வதாக கூறி இருந்தார். ஆனால் சில நாட்களிலேயே பிரச்னை ஆரம்பித்தது. மீண்டும் காவல் நிலையம் சென்ற தம்பதிகள் தற்போது நீதிமன்றத்தின் விவாகரத்து முடிவுக்காக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில்தான் நித்யா ஒரு பேட்டியில் கூறி இருந்தார். பாலாஜிக்கு தனக்கு முன்பே திருமணம் ஆனதை மறைத்துதான் தன்னை திருமணம் செய்து கொண்டதாக கூறி இருந்தார். அவருக்கு முதல் மனைவி மூலம் மகன் இருப்பதையும் கூறி இருந்தார்.

பார்லர் போகாமலே பளபளக்க வேண்டுமா ! மேனி அழகை மேலும் அழகாக்க இயற்கை குளியல் பொடி !

 

Hotstar

பாலாஜியின் முதல் மனைவி தீபாவிற்கு இரண்டாவது திருமணம் முடிந்து அவரது கணவரோடு அவர் வசித்து வருகிற நிலையில் முதல் மகனை சந்திக்கும் சாக்கில் அடிக்கடி முதல் மனைவியுடன் பாலாஜி பேசுவதாக தீபாவின் கணவர் ஒரு ஆடியோவில் தெரிவித்திருந்தார்.

எங்கள் குடும்பத்தை சிதைக்க வேண்டாம் என்றும் பாலாஜியிடம் பேசியிருந்தார். இந்த தகவல் வைரலாக போது நித்யா இந்த பிரச்னையால்தான் தான் பாலாஜியை பிரிய முடிவெடுத்ததாகவும் தெரிவித்திருந்தார். இப்படி பல சிக்கல்களை கொண்டிருக்கும் பாலாஜிக்கு இரண்டு மனைவிகள் மூலமாகவும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். அவர்களின் நிலைதான் மிகவும் வேதனையானது.

இப்போது இணையத்தில் பாலாஜி யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைத்திருந்த முதல் மனைவியின் புகைப்படம் வைரலாகி வருகிறது.அந்த பெண்ணை பார்த்தாலும் அப்பாவி போலத் தெரிகிறார். ஆனாலும் தன் நிலை மீது நம்பிக்கை இல்லாத யாரும் யாருக்கும் வாக்குறுதி கொடுப்பதோ திருமணம் செய்வதோ சரியான விஷயம் அல்ல என்பது இதில் இருந்து உணர்ந்து கொள்ள முடிகிறது.

வைரலாகும் ரகுல் ப்ரீத்தின் புதிய போட்டோஷூட் படங்கள்... ராணாவுடனான உறவு குறித்து விளக்கம்!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!