உலக நாயகன் கமலின் மூத்த வாரிசு என்ற மிகப்பெரிய புகழ் இருப்பினும், தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டவர்தான் ஸ்ருதி ஹாசன்(shruthi). கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் சினிமா உலகில் கலக்கிக்கொண்டு இருப்பவர் ஸ்ருதி ஹாசன்(shruthi).
ஸ்ருதி(shruthi) காதல் பற்றி இதற்கு முன்பு அழித்திருந்த பேட்டியில், அந்த காலத்தில் நோக்கிய போன், எஸ்.எம்.எஸ். எல்லாம் எனக்கு நினைவிருக்கிறது. முன்பு லேண்ட்லைன் போன் இருந்தது. பசங்க போன் செய்தால் அம்மா எடுத்துவிடக் கூடாது என்று பயப்படுவோம். இந்த தலைமுறையினருக்கு அது எல்லாம் தெரியாது.
காதலை பொறுத்தவரை நான் அந்த காலத்து பெண். எனக்கு காதல் கலந்த காமெடி படங்கள் பிடிக்கும். வீட்டில் இருந்தால் அத்தகைய படங்களையே பார்ப்பேன். ஆனால் இதுவரை நான் ஒரு ரொமான்டிக் காமெடி படத்தில் கூட நடிக்கவில்லை என்பது வருத்தமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்து வந்த ஸ்ருதி ஹாசன்(shruthi), லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்சேல் என்பவரை காதலிக்க தொடங்கியதும் நடிப்பதை குறைத்துக் கொண்டார். மேலும், தனது காதலுக்கு அப்பா கமல்ஹாசன், அம்மா சரிகா ஹாசன் இருவரும் சம்மதம் தெரிவித்ததால், மைக்கேலை திருமணம் செய்துக்கொள்ளவும் இருந்தார்.
இதற்கிடையே, மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டிய ஸ்ருதி ஹாசன்(shruthi), விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘லாபம்’ படத்தில் ஒப்பந்தமானார். மேலும், சில இயக்குநர்களிடம் கதை கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஸ்ருதி ஹாசனும், அவரது காதலர் மைக்கேலும் பிரிந்துவிட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது. காதல் முறிவு குறித்து மைக்கேல் கார்சேல், சமூக வலைதளத்தில் ஸ்ருதி ஹாசனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்துடன், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ”உலகத்தின் இரண்டு வெவ்வேறு மூலைகளில் தான் வாழ்க்கை நம்மை வைத்துள்ளது, அதனால் நாம் தனியாக தான் வாழ்க்கை பாதையில் செல்ல வேண்டும் என நினைக்கிறேன். அந்த இளம் பெண் எப்போதும் எனது சிறந்த துணையாக இருப்பார். எப்போதும் நல்ல நண்பராக நான் அவருக்கு இருப்பேன்.” என்று தெரிவித்துள்ளார்.
இந்த காதல் முறிவு ஸ்ருதியை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காதல் பிரேக்கப் ஆவதற்கு முக்கிய காரணங்கள்
வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லையா? விரட்ட எளிமையான வழிகள்
தாடி பாலாஜிக்கு அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்
பட ஆதாரம் – gifskey, pexels, pixabay, Youtube
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo