தாடி பாலாஜிக்கு அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

தாடி பாலாஜிக்கு அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர்கள் தாடி பாலாஸி(balaji) நித்தியா. அனைவருக்கும் தாடி பாலாஜி(balaji) மனைவி தான் நித்தியா என்கிற மாயையை பிக்பாஸ் நிகழச்சி மூலம் உடைத்து தனக்கென தனி அங்கிகாரத்த பெற்றுக்கொண்டார்.


அட போங்கப்பா இவங்களுக்கு வேற வேலையே இல்லை எப்பா பார்த்தாலும் சண்டை போடுறாங்க. தாடி(balaji) பாலாஜி சட்டு புட்டுன்னு ஒரு முடிவுக்கு வாங்கப்பா என நாம் அனைவரும் சொல்வது அவங்க காதில் விளாமல் இல்லை. அட ஏன் இவங்கள் இடையில் இவ்ளோ சண்டை. பல முறை பல நபர்கள் பேசி பார்த்து விட்டனர். ஏன் தாடி பாலாஜிக்கு(balaji) பஞ்சாயத்து கூட பண்ணி பார்த்துவிட்டனர். ஆனால் இவர்களுக்கான புரிதல் ஏன் இன்னும் வரவில்லை என தெரியவில்லை.


நீங்கள் என்ன வேனா பண்ணுங்க.. அந்த குழந்தைய நினைத்தால் தான் பாவம்மா இருக்கு என அனைவரும் சொல்வது அவர்கள் காதில் விழுந்து விட்டது போல. இப்போதான் அதற்கு ஒரு சரியான முடிவு கிடைத்துள்ளது. நீதிமன்றம் பாலாஜிக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளது.


court-permits-thadi-balaji-meet-his-daughter003


சரி கதைக்கு வருவோம்
தமிழ் சினிமாவில் காமெடியனாகவும், சின்னத்திரையில் காமெடி ஷோ நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருபவர், நடிகர் தாடி பாலாஜி(balaji). இவருக்கும் இவரது மனைவி நித்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர்.


இவர்களுக்கு போஷிகா என்ற மகள் உள்ளார். இருவரும் ஒருவர் மீது ஒருவர் புகார் செய்துள்ளதால் போலீஸ் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், மகளை பார்க்க அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் பாலாஜி வழக்கு தொடுத்திருந்தார். விசாரணையில், வாரம் ஒரு முறை பாலாஜி அவரது மகளை பார்க்க அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுகுறித்து பாலாஜி(balaji) கூறுகையில், என் மகளின் படிப்பு செலவை நானே பார்த்துக் கொள்கிறேன். என் பலமே என் மகள் தான். அவரை வைத்து என்னை வீழ்த்த நித்யா நினைக்கிறார். நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் எனக்கு நியாயம் கிடைத்துள்ளது. வாரம் ஒரு முறை என் தாய் வீட்டில் மாலை 3:00 முதல் 4:00 மணி வரை என் மகளை பார்க்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது. இதற்கு துணை நின்ற அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.


இனி பாலாஜி(balaji) தைரியமாக தனது குழந்தையை நீதிமன்ற அனுமதியுடன் அடிக்கடி பார்த்து பேசி மகிழலாம். அட நீங்கள் என்னமோ பண்ணுங்கப்பா ஆனா அந்த பிஞ்சு குழந்தையை நிம்மதியாக வாழவிடுங்க என்பது தான் எங்கள் அனைவரின் வேண்டுகோள். அப்படியே உங்கள் மகளின் படிப்பில் இருவரும் கவனம் செலுத்தினால் நல்லது. மன உளைச்சலில் இருக்கும் குழந்தை தனது நண்பர்களுடன் பேசி பழகும் போதும் உங்கள் பிரச்சணையை மறந்து அதன் உலகத்தில் வாழ ஆரம்பிக்கும். மற்ற குழந்தைகளுடன் பேசி பழகும் போது அதன் வாழ்க்கையை அவர்கள் புரிந்து வாழ்வார்கள். 


court-permits-thadi-balaji-meet-his-daughter004
மேலும் குழந்தைகள் எளிதில் சில விஷயங்களை மறக்கும் தன்மை கொண்டவர்கள். ஆனால் அது அனைத்தும் அவர்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத வரை தான். “பசு மறத்தானி” போன்று என பெரியவர்கள் சொல்லி கேள்வி பட்டிருப்பீர்கள். அதன் அர்த்தம் அவர்கள் இளம் வயதில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு விட்டால் மனதில் நன்றாக பதிந்து விடும். குறிப்பாக யாரையாவது பற்றி தவறாக நினைத்தார்கள் என்றால் யார் சொன்னாலும் மாற்றிக் கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கே அவர்கள் செய்தது சரி என புரிந்தால் மட்டும் தான் மாற்றம் நிகழும். எனேவே குழந்தைகளை எப்போதும் அவர்கள் உலகத்தில் குழந்தைகளுடன் வாழ விட வேண்டும் என மனோ தத்துவ மருத்துவர்கள் சொல்கின்றனர்.


வயதில் குறைவான நடிகர்களை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட நடிகைகள்


ஆணுறையை(condom) பயன்படுத்தும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள்!


வீட்டிலேயே தக்காளி பேஷியல் செய்துக்கொள்வது எப்படி


பட ஆதாரம் - gifskey, pexels, pixabay, Youtube


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo