கர்ப்பமான புகைப்படத்தை கிண்டலடித்த நெட்டீசன்கள்: சரியான பதிலடி கொடுத்த சமீரா ரெட்டி

கர்ப்பமான புகைப்படத்தை கிண்டலடித்த நெட்டீசன்கள்: சரியான பதிலடி கொடுத்த சமீரா ரெட்டி

வட இந்தியா மட்டும் இன்றி தென் இந்திய சினிமாவிலும் தனது நடிப்பு மற்றும் அழகால் தனக்கென தனி ரசிகர்களை கொண்டிருப்பவர் சமீரா ரெட்டி(sameera). தமிழில் இவர் நடித்த வாரனம் ஆயிரம் திரைப்படத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.


அடியே கொள்ளுதே.. அழகோ அல்லுதே என்கிற பாடலை இப்பொழுது கேட்டாலும் அனைவருக்கும் நினைவில் வருவது சமீரா ரெட்டியில்(sameera) முகம் தான். தமிழில் வாரனம் ஆயிரம் மூலம் அறிமுகமாகியிருந்தாலும் அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தார். அதன் பிறகு குறிப்பிட்ட சில படங்களில் மட்டுமே நடித்த சமீரா தென்னிந்திய திரைப்படத்தில் அதிக கவனம் செலுத்த தொடங்கினார்.


அதன் பிறகு தொழிலதிபரான அக்ஷை வர்தேவை 2014 ம் திருமணம் செய்து கொண்டார். குடும்ப வாழ்க்கை அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்த சமீராவிற்கு(sameera) 2015ம் ஆண்டு அழகான ஆண் குழந்தை பிறந்தது. கற்ப காலத்தை கொஞ்சம் பூசினார் போன்று குண்டாக காணப்பட்டார். அதன் பிறகு உடல் எடையை குறைக்க அதிக காலம் அவருக்கு தேவைப்பட்டது.


தற்போது இரண்டாவது குழந்தையை பெற்றுக் கொள்ள தயாராகி வருகின்றார். தற்போது கர்ப்பமாக இருக்கும் சமீரா(sameera) தனது புகைப்படத்தை சமூக வளைதளத்தில் பதிவு செய்துள்ளார். தனது முதல் மகனுடன் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை சமீரா ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.


இதனை பார்த்த சிலர் பாராட்டினாலும் சிலர் கேளியும் கிண்டலும் செய்து வருகின்றனர். பொருமையாக இருந்த சமீரா(sameera) தன்னை கிண்டல் செய்த அனைவருக்கும் தகுந்த பதிலை தற்போது தெரிவித்துள்ளார். இதில் சிலர் கரீனா கபூருடன் ஒப்பிட்டு பேசியுள்ளனர்.

கரீனா விரைவில் தனது பழைய செக்ஸியான தோற்றத்திற்கு மாரியுள்ளார். ஆனால் நீங்கள் இன்னும் அத்தகைய தோற்றத்தை பெறாத நிலையில் மீண்டும் கர்ப்பமாக உள்ளீர்கள். இந்த எடையை குறைக்க எவ்வளவு காலம் எடுக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு சமீரா(sameera) சரியான பதிலை தெரிவித்து அனைவரின் வாயை அடைத்துள்ளார்.


என்னை பற்றி கிண்டலாக பேசிய அனைவருக்கும் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். செக்ஸியாக இருப்பது என்பது எனது தோற்றத்தை பொருத்தது. நீங்கள் குழந்தையாக இந்த உலகத்தில் பிறக்கும் போது உங்கள் அம்மா கூட தான் செக்ஸியாக இருந்தார். அதற்காக உங்கள் அம்மாவையும் அப்படித்தான் பேசவீர்களா. நான் கற்கமாக இருப்பதையும் குழந்தை பெற தயாராக இருப்பதையும் ஒரு சூப்பர் பவர் எனக்குள் இருப்பதை போன்று உணர்கிறேன்.


ஆம் எனது முதல் குழந்தையை பெற்றெடுக்கும் போது மிகவும் கூச்சப்பட்டேன். வெளி உலகத்திருந்து என்னை மறைத்து கொண்டு வாழ தொடங்கினேன். ஆனால் இரண்டாவது குழந்தைக்கு அப்படி நினைக்கவில்லை. மிகவும் சந்தோஷமாக உணர்கிறேன். தைரியமாக உணர்கிறேன். நான் ஒன்றும் கரீனா கிடையாது. எனக்கு முதல் குழுந்தை பிறந்ததும் எனது உடல் எடையை குறைக்க சிறிது காலம் எடுத்தது. தற்போது மீண்டும் கர்ப்பமாகியுள்ளேன். கற்ப காலத்தில் உடல் எடை அதிகரிப்பது ஒன்றும் புதிதல்ல. ஒரு நடிகையாக நான் அநேக கிண்டல்களை சந்தித்துள்ளேன். இது ஒன்றும் புதுதல்ல என காரமாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
 

 

 


View this post on Instagram


 

 

Weekend vibes! Take me back to @godomrep #casadecampo #dominicanrepublic #mood #beach #needavacation 🌈


A post shared by Sameera Reddy (@reddysameera) on
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo