டியூசன் எடுத்து குடும்பத்தை காப்பாற்றும் தமிழக அரசு பள்ளி மாணவி நாசாவுக்கு செல்ல தேர்வு!

டியூசன் எடுத்து குடும்பத்தை காப்பாற்றும் தமிழக அரசு பள்ளி மாணவி நாசாவுக்கு செல்ல தேர்வு!

புதுக்கோட்டை மாவட்டம் இராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி ஜெயலட்சுமிக்கு நாசா செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவி ஜெயலட்சுமி. 

இவரது அப்பாவும், அம்மாவும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஜெயலட்சுமியின் தாயாருக்கு சற்று மனநிலை சரியில்லாத நிலையில், அவருடனே இருந்து வருகிறார். ஜெயலட்சுமிக்கு ஒரு தம்பி மட்டும் இருக்கிறான். 

இந்நிலையில் ஜெயலட்சுமி தான் குடும்பத்தை நிர்வகித்து வருகிறார். ஜெயலட்சுமியின் தந்தை அவ்வப்போது அனுப்பும் பணம் தான் வீட்டின் முக்கிய வருமாம். தற்போது 11ம் வகுப்பு படிக்கும் ஜெயலட்சுமி (jeyalakshmi) படிப்பில் ஆர்வமாக இருக்கிறார். 

twitter

இதனால் தனது அன்றாட செலவுகளை கவனித்து கொள்ள அக்கம் பக்கத்தில் இருக்கும் 8 மற்றும் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வருகிறார். மேலும் தன் தாயார் செய்து வந்து முந்திரி வியாபாரத்தையும் கவனித்து கொள்கிறார். 

ஜெயலட்சுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு முறை  செய்தித்தாளில் கோஃபார்குரு என்ற இணையதளம் நடத்திய போட்டியில் கலந்து கொண்டு திருச்சி மாணவி தன்யா தஸ்னீம் கலந்து கொண்டு நாசாவிற்கு செல்லும் வாய்ப்பை பெற்றது குறித்து வெளியான ஒரு செய்தியைப் படித்துள்ளார். 

twitter

இதைப் படித்ததும் அவருக்கு நாசாவிற்கு செல்ல வேண்டும் என் விருப்பம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் அந்த போட்டிக்காக விண்ணப்பித்துள்ளார். தமிழ் வழிக்கல்வி கற்று வரும் ஜெயலட்சுமி (jeyalakshmi) ஆங்கிலத்தில் நடக்கும் அந்த போட்டியில் பங்கேற்க வேண்டும் என அஞ்சாமல் முடிவு எடுத்தார். 

தமிழ் மீடியம் பள்ளியில் பயின்று வந்ததால் ஒரு மாதம் ஆங்கில பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்து போட்டியில் பங்கேற்றுள்ளார். தற்போது அந்த போட்டி குறித்த முடிவுகள் வெளியான நிலையில் ஜெயலட்சுமி வெற்றி பெற்று நாசாவிற்குச் செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நாசாவிற்கு செல்ல ஆகும் செலவை இணைய நிறுவனமே ஏற்றுக்கொள்ளும் நிலையில், நாசாவிற்கு செல்லும் மாணவர்களின் கைகளில் இருந்து ரூ.1.7 இலட்சம் செலவும் ஆகும் என்ற நிலையும் உள்ளது. படிப்பிற்கே பெரும் போராட்டத்திற்கு மத்தியில் சிரமப்பட்டு ஜெயலட்சுமி  இவ்வுளவு தொகையை செலவு செய்ய இயலாது என வருத்தத்தில் இருந்துள்ளார்.  

 

twitter

இவரை பற்றி நன்கு அறிந்த அக்கம் பக்கத்தினர் தங்களால் இயன்ற அளவு உதவி செய்த நிலையில் பாஸ்போர்ட் போன்றவை தயார் செய்துவிட்டனர். மற்ற செலவுகளுக்கு என்ன செய்வது என்று யோசித்து வந்த நிலையில், தனது குடும்ப சூழ்நிலை குறித்து தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் உதவி கேட்டு மனு கொடுத்துள்ளார்.  

இதனை தொடர்ந்து மாணவியின் கோரிக்கையை ஏற்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ப.உமாமகேஸ்வரி முயற்சியில் ஓஎன்ஜிசி நிறுவனம் இந்த மாணவிக்கு அமெரிக்கா சென்று வருவதற்கான அனைத்து செலவுகளையும் ஏற்பதாக மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அளித்துள்ளார்கள். 

இதனால் ஜெயலட்சுமி வரக்கூடிய மே மாதம் அமெரிக்கா செல்ல இருக்கிறார். இது குறித்து மாணவி ஜெயலட்சுமி, எனது தாயும் - தந்தையும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கோஃபார்குரு போட்டியின் மூலமாக எனது ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களின் உதவியோடு பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு சென்ற நேரத்தில் பாஸ்போர்ட் வழங்கும் அதிகாரி எதற்காக பாஸ்போர்ட் வாங்குகிறீர்கள் என்று வினவினார்.

 

twitter

நாசாவிற்கு செல்லும் வாய்ப்பு குறித்தும், எனது குடும்ப சூழ்நிலை குறித்தும் அவரிடம் தெரிவித்தேன். மேலும் நான் கட்டாயம் செல்வேனா என்பதும் எனக்கு தெரியாது, எனினும் முயற்சியாக இதனை செய்கிறேன் என்று தெரிவித்தேன். 

இதனை அறிந்த அதிகாரி ரூ.500 கொடுத்து உதவி செய்தார்.  அப்துல்கலாம் போன்று பெரிய விஞ்ஞானியாக ஆக வேண்டும் என்ற ஆசை உள்ளது, கட்டாயம் நான் வருவேன் என நம்பிக்கை (jeyalakshmi) தெரிவித்துள்ளார். 

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நான் தேர்வாகியிருப்பது ஊக்கத்தை அளிக்கும் என்று நினைக்கிறன் என்று அவர் கூறினார்.  ஏழை மாணவிக்கு உதவிய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கும் நன்றிகளை பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!