கோடையில் வரண்ட சருமத்தை பளபளப்பாக்கும் பப்பாளி பேஷ் பேக்

கோடையில் வரண்ட சருமத்தை பளபளப்பாக்கும் பப்பாளி பேஷ் பேக்

பெண்கன் அநேகரால் விரும்பப்படும் பழங்களில் ஒன்று பப்பாளி(papaya). இதை விரும்பி உண்ணுவதை விட சரும பராமரிப்பு அதிகம் பயன்படுத்தும் விருப்பப் பொருளாக உள்ளது. பொதுவாக ஆப்பிள், மாதுளை, கொய்யா போன்ற பழங்கள் சீசன் மாதங்களில் மட்டும் தான் கிடைக்கும். ஆனால் பப்பாளி பழம் வருடத்தில் உள்ள அனைத்து மாதங்களிலும் கிடைக்கும்.


பப்பாளியில்(papaya) வைட்டமின் ஏ சத்து அதிகமாக உள்ளது. இதை தினமும் சாப்பிட்டால், மாதவிடாய் கோளாறுகள் சரியாடையும். பப்பாளி(papaya) பழச்சாற்றை முகத்தில் பூசி வந்தால், முகம் பொலிவடையும். இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்தவதில் பப்பாளிக்கு முக்கிய பங்கு உண்டு.


papaya-face-packs-for-glowing-fair-smooth-skin003
சுற்றுச்சூழல் மாசு மற்றும் வெப்பநிலை மாற்றம் காரணமாக சருமம் மிக சீக்கிரமே பொலிவிழந்து விடுகிறது. சருமம் அதன் மென்மை தன்மையையும், ஈரப்பதத்தையும், அழகையும் இழந்து போவதை யாரும் விரும்ப மாட்டார்கள். உங்கள் சருமம் வறட்சியாகவோ அல்லது அதிகபடியான எண்ணெய் தன்மையுடனோ இருக்கலாம். 


Also Read இரட்டை கன்னம் குறைக்க உதவிக்குறிப்புகள்


இயற்கை கொடுத்த வரப்பிரசாதம் தான் பப்பாளி(papaya). பப்பாளியில்(papaya) சருமத்திற்கு தேவையான வைட்டமின் மற்றும் மினரல்ஸ் இருக்கிறது. மேலும் இதில் பொட்டாசியம் நிறைந்திருப்பதால், சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை கொடுத்து, முகத்தை பொலிவாக வைக்க உதவும்.


பப்பாளி பேஸ் பேக்


பப்பாளி மற்றும் தேன்
வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு பப்பாளி(papaya) மற்றும் தேன் சிறந்த தீர்வு. தேன் சருமத்திற்கு சிறந்த மாய்சுரைசராக செயல்படும். பப்பாளியின்(papaya) விழுது முகத்தில் உள்ள துளைகளில் ஆழமாக சென்று சுத்தம் செய்கிறது.


பப்பாளியின்(papaya) விழுது – ¼ கப்
தேன் – ½ தேக்கரண்டி
எலுமிச்சை சாறு – ½ தேக்கரண்டி
இவை மூன்றையும் நன்கு கலந்து முகத்தில் தடவவும். 10 நிமிடங்களில் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். வாரத்தில் நான்கு நாட்கள் செய்து வந்தால் முகம் பிரகாசமாக இருக்கும்.


papaya-face-packs-for-glowing-fair-smooth-skin004
பப்பாளி மற்றும் ஆரஞ்சு
பப்பாளி(papaya) மற்றும் ஆரஞ்சு இரண்டையும் கலந்து பயன்படுத்துவதால் அதிகபடியான எண்ணெய் சுரப்பது குறைந்துவிடும். மேலும் முகத்தில் உள்ள கருமையை போக்க வல்லது.


பப்பாளி விழுது – தேவையான அளவு
ஆரஞ்சு சாறு – 3 தேக்கரண்டி
ஒரு பௌலில் பப்பாளி(papaya) விழுது தேவையான அளவு எடுத்து கொண்டு, அதில் 3 தேக்கரண்டி ஆரஞ்சு சாறு சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி வரவும். இதனால் முகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்கும்.


பப்பாளி, வாழைப்பழம் மற்றும் வெள்ளரி
உங்கள் சருமத்தை பிரகாசமாக்க வாழைப்பழம், வெள்ளரி மற்றும் பப்பாளி(papaya) ஆகிய மூன்றையும் சேர்த்து ஃபேஸ் பேக் போடலாம். சருமத்தை ஈரப்பதத்துடனும் மென்மையாகவும் வைக்க உதவும். பப்பாளி(papaya), வெள்ளரி மற்றும் வாழைப்பழம் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து கொள்ளவும். இதனை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 15 நிமிடங்கள் வரை வைத்திருந்து கழுவி விடவும். இது சருமத்திற்கு சிறந்த மாய்சுரைசராக செயல்படுகிறது.


papaya-face-packs-for-glowing-fair-smooth-skin005
பப்பாளி மற்றும் எலும்பிச்சை
நன்கு பழுத்த பப்பாளியை(papaya) நறுக்கி மிக்சியில் அரைத்து அதனுடன் எலுமிச்சை சாறை சேர்த்து உடலில் தேய்த்து ஒருமணி நேரம் கழித்து குளித்தால் சருமம் மெருகேரும்


கருமை நீங்க
பப்பாளி(papaya) பழத்தை சிறிது துண்டுகளாக வெட்டி, அதை நசுக்கி கழுத்து பகுதிகளில் தேய்த்து வந்தால், கருமைகள் நீங்கும்.


இது போன்று இயற்கையாக கிடைக்கும் பப்பாளி(papaya) பழத்தை வாரம் இரண்டு முறை பயன்படுத்தி வந்தால் நல்ல பலன்களை காணலாம்.


ஒரே நாளில் உங்கள் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி!


வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு முடி உதிர்வை தடுக்கும் எளிய வழிகள்


சரியான பிரா சைஸ்சை கண்டுபிடிப்பது எப்படி? மார்கெட்டில் கிடைக்கும் பிரா வகைகள்!


பட ஆதாரம் - gifskey, pexels, pixabay, Youtube


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo