logo
ADVERTISEMENT
home / Celebrations
திருமணத்திற்கு சம்மதித்த நயன்தாரா.. இந்த வருட இறுதியில் கெட்டி மேளம் ?

திருமணத்திற்கு சம்மதித்த நயன்தாரா.. இந்த வருட இறுதியில் கெட்டி மேளம் ?

தமிழ் சினிமாவின் நீண்ட நாள் காதலர்களாக இருந்து வரும் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடிக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

கடந்த கால காதல் வாழ்க்கைகள் கசப்பில் முடிய அதன் பின்னர் நடிப்பே தனது காதல் என்று தீவிரமாக படங்களில் நடித்து வந்தார் நயன்தாரா. காதலுக்காக நடிப்பை துறந்த நயன்தாரா மீண்டும் நடிப்பு வாழ்க்கைக்குள் நுழைந்தார்.

முன்பை போல கவர்ச்சியை தனது ஆயுதமாக்காமல் நடிப்பு திறமையை மட்டுமே வெளிப்படுத்தும் படங்களில் நடிக்க தொடங்கினார். தனது உடலை வெளிப்படுத்தும் படங்களை நிறுத்தினார். ஏற்கனவே நயன்தாராவுக்கென இருந்த ரசிகர்கள் இதனை மேலும் ஆதரிக்க நயன்தாரா சினிமாவில் தான் விட்ட இடத்தை மீண்டும் பிடித்தார்.

மாமியாருடன் புத்தாண்டு கொண்டாடிய நயன்தாரா – வைரலாகும் புகைப்படம்

ADVERTISEMENT

ராஜா ராணி திரைப்படம் அவரது பெஸ்ட் கம் பேக் படமாக இருந்தது. அதன் பின்னர் மளமளவென படங்கள் குவிந்தன. இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் காமெடி படத்தில் நயன்தாரா வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வெற்றி பெற்றார்.

அதற்கு முன்பிருந்தே சிம்புவுடன் பழகிய காலத்திலிருந்தே விக்னேஷ் சிவனுடன் பல காலங்கள் நட்பில் இருந்தவர் நயன்தாரா என்பதால் அந்த படத்திற்கு பின்னர் இருவருக்கும் காதல் ஆரம்பித்தது.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் காதலிக்க தொடங்கிய நயன்தாரா அதை பற்றிய அறிக்கைகளை வெளியிடாமல் எங்கு சென்றாலும் விக்னேஷ் சிவனுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர விட்டார்.

ADVERTISEMENT

ஆராத்யாவை விட்டு விடுங்கள் ஐஸ்வர்யா.. இணையத்தில் வைரலான விமர்சனம்

திருமணம் பற்றிய கேள்விக்கு மட்டும் பதில் சொல்லாத நயன்தாரா 100 திரைப்படங்கள் முடித்த பின்னரே திருமணம் என்கிற இலக்கை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனை விக்னேஷ் சிவனும் புரிந்து கொண்டார் என்கிற நிலையில் விக்னேஷ் சிவனின் அம்மா இதனை ஏற்கவில்லை என்று தெரிய வருகிறது.

இப்போது இரண்டு வீட்டாரும் பேசி ஒரு முடிவுக்கு வந்துள்ளதாகவும் விரைவில் அவரது திருமணம் (wedding) நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகி இணையத்தை வலம் வருகின்றன. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு இந்த வருட இறுதியில் நிச்சயதார்த்தமும் அடுத்த வருட ஆரம்பத்தில் திருமணமும் நடக்க இருப்பதாக தெரிய வருகிறது.

ADVERTISEMENT

பிரிவை கேட்டதும் நெஞ்சம் நொறுங்கியது.. கமல்ஹாசன் சரிகா பற்றி அக்ஷரா உருக்கம்

இப்போது நயன்தாரா ரஜினியுடன் தர்பாரிலும் விஜய் உடன் விஜய் 63லும் நடித்து வருவதால் அந்த படங்கள் முடிவடைந்த பின்னர் நிச்சயதார்த்தம் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இது தவிர விக்னேஷ் சிவனும் இரண்டு படங்களை இயக்க இருக்கிறார் என தகவல்கள் கூறுகின்றன.

இரு வீட்டாரும் சந்தித்து பேசிய போது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் சமீபத்தில் வைரல் ஆனது. கூடிய விரைவில் நயன் நல்ல செய்தி சொல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

ஜெஸ்ஸி.. ஜானு..மற்றும் த்ரிஷா… ஹாப்பி பர்த் டே !

புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்

—                    

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                  

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.                                     

04 May 2019
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT