திருச்சியை உறைய வைத்த 50 கோடி கொள்ளை! மிஞ்சியது அட்டை பெட்டிகள் மட்டுமே! - லலிதா ஜூவல்லரி

திருச்சியை உறைய வைத்த 50 கோடி கொள்ளை! மிஞ்சியது அட்டை பெட்டிகள் மட்டுமே! - லலிதா ஜூவல்லரி

இரண்டே இரண்டு பேர் திரைப்படங்களில் காட்டப்படுவது போல செலவே இல்லாத சிறிய குழந்தைகள் முகமூடி அணிந்தபடி 50 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றிருக்கின்றனர். திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே இருக்கும் லலிதா ஜுவல்லரி (lalitha jewellary) நிறுவனத்தில்தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

நேற்று அதிகாலையில் இந்த கொள்ளை சம்பவம் நடந்திருக்கிறது. லலிதா ஜுவல்லரி நிறுவனத்தின் காம்பவுண்ட் சுவரை ஓட்டை போட்டு கச்சிதமாக உள்ளே நுழைந்து நிதானமாக ஒவ்வொரு நகைகளையும் கொள்ளையடித்து வெறும் அட்டைப்பெட்டிகளை மட்டுமே விட்டு சென்றிருக்கின்றனர் கொள்ளையர்கள்.                                                  

Twitter
Twitter

இத்தனைக்கும் அன்றைக்கு ஆறு வாட்ச்மேன்கள் லலிதா ஜூவல்லரியை காவல் காத்தனர் என்பதுதான் சோகமே. லலிதா ஜுவல்லரி (lalitha jewellary) நிறுவனத்தை அடுத்து ஒரு பள்ளி மைதானம் இருக்கிறது. நீண்ட நாட்களாக நோட்டம் விட்ட நபர்கள் தான் இதனை செய்திருக்க வேண்டும் என்பது புலனாகிறது.                                      

கொள்ளையின் போது சிசிடிவியில் தன்னுடைய முகம் தெரியாமல் இருக்க குழந்தைகளின் பொம்மை மாஸ்க்கை அணிந்தபடி துணிகரமாக இந்த கொள்ளை சம்பவத்தை அந்த இருவர் செய்திருக்கின்றனர். விஷயம் தெரிந்த உடன் கமிஷனர் அமல்ராஜ் உடனடியாக லலிதா ஜுவல்லரிக்கு வந்து விட்டார்.

 

Twitter
Twitter

கொள்ளை சம்பவம் நடைபெற்ற ஸ்டைலை வைத்து பார்க்கும் போது வடமாநில கொள்ளையர்கள் இதனை செய்திருக்கலாம் என சந்தேகப்படுகின்றனர். இந்த கொள்ளை சம்பவத்தை செய்தது இரண்டு பேராக இருக்க முடியாது என தெரிகிறது. வெளியாட்கள் அத்தனை நகைகளையும் இடம் மாற்ற உதவி செய்திருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.                             

காவல்துறையினர் மோப்ப நாயின் உதவியுடன் கொள்ளைக்காரர்களை கண்டுபிடிக்க துப்பு துலக்கி வருகின்றனர். ஆனால் கொள்ளைக்காரர்கள் தங்களை மோப்ப நாய் கண்டுபிடிக்காமல் இருக்க மிளகாய் தூளை கொண்டு ஆங்காங்கே தூவி இருப்பதால் சிக்கல் நீடிக்கிறது.

இருபது வயதிலேயே திருமணம் - நீலிமா ராணியின் வெளிவராத குடும்ப புகைப்படங்கள் உங்களுக்காக !

Twitter
Twitter

கடையை சுற்றி கேமராக்கள் இருந்தும், கடைமுன்பு காவலாளிகள் இருப்பது தெரிந்தும் கிட்டத்தட்ட ஒன்றே முக்கால் மணி நேரம் வரை கடைக்குள் இருந்து நிதானமாக கொள்ளையடித்து சென்றிருக்கின்றனர் கொள்ளையர்கள். இந்த சம்பவம் திருச்சி மாநகரத்தை உறைய வைத்திருக்கிறது. சாமான்ய மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

திருச்சி லலிதா ஜுவல்லரியில் நடந்த இந்த சம்பவம் அங்குள்ளவர்களை மட்டும் அல்லாது ஒட்டு மொத்த தமிழகத்தையும் உலுக்கி எடுத்திருக்கிறது. இதன் விசாரணைகள் இனி பலமானால் மட்டுமே தேவையான விபரங்கள் கிடைக்கலாம்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!