ரஜினிகாந்தின் 168வது படத்தில் இணைந்த நடிகை கீர்த்தி சுரேஷ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ரஜினிகாந்தின் 168வது படத்தில் இணைந்த நடிகை கீர்த்தி சுரேஷ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ரஜினிகாந்தின் 168வது படத்தில் கீர்த்தி சுரேஷ் இணைந்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'தர்பார்' படத்தின் பணிகள் அனைத்தையும் முடித்து கொடுத்துவிட்டார் நடிகர் ரஜினிகாந்த். 

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் 2020ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டைப் பிரம்மாண்டமாக நடத்தி முடித்துள்ளது படக்குழு.  

twitter

தர்பார் படத்தை அடுத்து ரஜினிகாந்தின் 168-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தை விஸ்வாசம் பட இயக்குநர் சிவா இயக்குகிறார். விஸ்வாசம் படத்தை அடுத்து நடிகர் சூர்யாவை வைத்து படம் இயக்க இருந்த சிவா, தற்போது ரஜினியின் 168-வது படத்தை இயக்க உள்ளார்.

மேலும் படிக்க - பிரபல நடிகருடன் டேட்டிங் செல்ல விரும்புகிறேன்.. ட்விட்டரில் காதலை வெளிப்படுத்திய ரைசா!

டி.இமான் இசையமைக்கும் இந்தப் படத்தில் நகைச்சுவை நடிகர் சூரி இணைந்துள்ளார். இது அவருக்கு ரஜினியுடன் நடிக்கும் முதல் படம். இந்தப் படத்தின் நாயகிகள் குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் மூத்த நடிகைகளான குஷ்பூ அல்லது மீனா நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. 

இந்நிலையில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் இந்தப் படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது முதன்முறையாக ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கிறார்.

twitter

அவர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்கிறாரா அல்லது முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்பதை படக்குழு உறுதிப்படுத்தாத நிலையில் அவரது கேரக்டர் குறித்து ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. 

மேலும் படிக்க - சானியா மிர்ஸாவின் சொல்ல மறந்த காதல் கதை-தேசங்களைத் தாண்டிய காதல்

தனது 25வது படத்தில் ரஜினியுடன் நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். கடந்த வருட தீபாவளியின்போது விஜய்யுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்த சர்கார் படம் வெளியானது. அடுத்ததாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் பெண்குயின் என்கிற கதாநாயகி வேடத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் படத்தில் தற்போது அவர் நடித்து வருகிறார். 

twitter

 

சமீபத்தில் கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தை கலக்கின. உடல் எடையை முழுவதும் குறைத்து சிலிம் தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில் தலைவர் ரஜினிகாந்தின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதால் மிகவும் குஷியில் இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். 

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கும்  நடிகை கீர்த்தி, “என்னுடைய பயணத்தில் இந்த மைல்கல்லை எட்டியிருப்பது மிகவும் மகிழ்ச்சி. நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து நடிப்பது என் வாழ்வில் மறக்கமுடியாதது. 

ரஜினிகாந்தின் பெரிய ரசிகை நான். அவருடைய 168வது படத்தில் நானும் இருக்கேன் என்பது பெரிய பெருமையா இருக்கு. இயக்குநர் சிவா மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு நன்றி” என்று கூறியுள்ளார். முன்னதாக ‘நெற்றிக்கண்’ படத்தில் கீர்த்தியின் தாயார் மேனகா ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க - உங்கள் கழுத்தின் வடிவங்களில் ஒளிந்திருக்கும் உளவியல் ரகசியங்கள்

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!