நான் அதுக்காக பிக்பாஸ் செல்லவில்லை... வெளியேறிய காரணம் குறித்தும் உருக்கமாக பேசிய கவின்!

நான் அதுக்காக பிக்பாஸ் செல்லவில்லை... வெளியேறிய காரணம் குறித்தும் உருக்கமாக பேசிய கவின்!

பிக்பாஸ் சீசன் 3 கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் இந்த சீசனில் வெற்றிபெறப்போகும் நபர் யார் என்பது இந்த வாரத்தின் இறுதியில் தெரிந்துவிடும். தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் ஷெரின், சாண்டி, லாஸ்லியா, முகேன் ஆகியோர் இருக்கின்றனர். 

இறுதிப்போட்டியில் வெல்பவர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்படும். ஆனால் கடந்த வாரம் ரூ.5 லட்சம் தருகிறேன் எடுத்துக்கொண்டு போட்டியில் இருந்து வெளியேறலாம் என்று பிக்பாஸ் அறிவித்தார். அப்போது சற்றும் யோசிக்காமல் கவின் எழுந்து தான் வெளியே செல்ல தயார் என அறிவித்தார். 

twitter

லாஸ்லியா, சாண்டி உள்ளிட்டோர் தடுத்தும் அவர் கேட்கவிலை. பணத்திற்காக நான் வெளியே செல்லவில்லை, இது நான் ஏற்கனவே எடுத்த முடிவு என கூறி கவின் அங்கிருந்து வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டாலும் அதில் ரசிகர்களின் அதிக ஆதரவை கொண்டவராக இருந்து வந்தார் கவின் தான். 

ரூ.5 லட்சம் பணத்துடன் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய கவின் : அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இதனால் கவின் பிக்பாஸ் அறிவித்த 5 லட்ச ரூபாய் பரிசுத் தொகையை எடுத்துக் கொண்டு வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்தவாரம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்த முகெனை தவிர மற்ற அனைவருமே நாமினேஷனில் இடம் பெற்றனர். எல்லா வாரமும் போல கவின் தான் கடந்த வாரம் நடைபெற்ற கவின் அதிக வாக்குகள் பெற்று முதலிடத்தில் இருந்து வந்தார். 

எனவே கவின் இருந்திருந்தால் அவர் நிச்சயம் தகுதி பெற்று இருந்திருப்பார். ஏனெனில் பலமுறை சக போட்டியாளர்களால் நாமினேட்  செய்யப்பத்திருந்தும் கூட அவர் ரசிகர்களால் தொடர்ந்து காப்பாற்றப்பட்டார். அதேபோல பிக்பாஸில் இருந்து கவின் வெளியேறிய போதும் கவினுக்கு இருந்த ஆதரவு என்னவென்று பலரும் அறிந்தனர்.

 
 
 
View this post on Instagram
 
 
 

A post shared by Kavin M (@kavin.0431) on

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், எனக்கு எப்படி ஆரம்பிக்கிறது என்று தெரியவில்லை. இந்த செய்தியை பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு அல்லது எனக்கு இருக்கும் பிரச்னைகள் முடிந்த பிறகு உங்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தேன். 

முதலில் அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றதற்கான முதல் காரணமே நான் மிகவும் மோசமான கால கட்டத்தில் இருந்தேன். என்னுடைய முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்தது. எனவே கடந்த இரண்டு வருடங்களாக என்னை தொலைத்த நான் இந்த வாய்ப்பின் மூலம் என்னை மீண்டும் முன்னே கொண்டு வந்து விடலாம் என்று நினைத்தேன். 

 

twitter

என்னை நிரூபித்துகொள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டேன். நான் நம்பிக்கையோடு தான் உள்ளே சென்றேன். அங்கே கிடைக்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்தி என்னை நான் நிரூபிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதைத் தவிர நான் எதையும் நினைக்கவில்லை. 

எனக்கு கொஞ்சம் பணமும், கொஞ்சம் பிரபலம் மட்டும்தான் இதன் மூலம் நான் எதிர்பார்த்தேன். ஆனால் தற்போது எனக்கு கிடைத்த பிரபலத்தை என்னால் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை என்று தான் நினைக்கிறேன்.  எனக்கு இப்போது சில பிரச்னைகள் இருக்கிறது. இதன் காரணமாக என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. நீங்கள் எனக்கு காட்டிய அன்பிற்கு பதிலளிக்க முடியாத நிலையில் நான் இருக்கிறேன். 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற முக்கிய காரணம் இது தான் ... தர்ஷனின் முதல் பதிவு!

எனக்கு நீங்கள் கொடுத்த அனைத்து அன்பிற்கும் நன்றி. அதேபோல எனது குடும்பத்தை காப்பாற்றுவதும் முக்கியம். இவை அனைத்தையும் தாண்டி இது வெறும் ரியாலிட்டி ஷோ தான் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அது எனக்கும் புரிந்து நான் சில நேரம் ஆகியது. ஆரம்பத்தில் ஒரு கதாபாத்திரமாக தான் நான் நடித்து வந்தேன். 

twitter

ஆனால், அது மற்றவர்களின் உணர்வு சம்பந்தப்பட்டது என்பதை ஒரு கட்டத்தில் உணர்ந்து எனது உணர்வுகளை நான் கட்டுப்படுத்திக் கொண்டேன். இந்த நிகழ்ச்சியில் உள்ள ஒரு சிலர் என்னால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதற்காக சொல்லவில்லை, இருப்பினும் எனது தவறை நான் ஏற்றுக் கொள்கிறேன். நீங்கள் என் மீது காட்டிய அன்பை நான் ஏற்றுக்கொண்டதை போல சிலர் காட்டிய வெறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.

இனி வரும் காலங்களில் என் மீது காட்டிய வெறுப்பையும் அன்பாக மாற்ற முயற்சி செய்வேன்.  போட்டியில் பங்கேற்ற 17 பேருக்கும் சரியான பாடத்தை நீங்கள் கற்றுக்கொடுத்துள்ளீர்கள். இது இதோடு முடியப்போவதில்லை, நீங்கள் காட்டிய அன்புக்கு நான் கடன்பட்டுள்ளேன். உங்களை காயப்படுத்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். எப்பவும் போல கூட இருங்க, எல்லோரும் நல்லா இருப்போம் என்று பதிவிட்டுள்ளார். 

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் முதல்முறையாக சிட்பண்ட் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த கவினின் தாயார் ராஜலட்சுமி மற்றும் அவரது பாட்டி தமயந்தி ஆகியோரை ஜாமினில் வெளியே கொண்டு வந்துள்ளார். மேலும் தாயாரிடம் சீட்டுப்பணம் கட்டி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பணத்தைத் திருப்பி தருவதாக வாக்கு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!