logo
ADVERTISEMENT
home / வாழ்க்கை
சேர்த்து வைத்த உங்கள் அழகை அழகாக பராமரிக்க சில குறிப்புகள்

சேர்த்து வைத்த உங்கள் அழகை அழகாக பராமரிக்க சில குறிப்புகள்

நமது அழகென்பது நமக்கு எப்போதும் பெருமை தருவது. யாரும் கேட்காமலேயே நம்மிடம் வந்து சேர்ந்த அழகை நாம் அப்படியே விட்டு விட்டால் சில நாட்களில் அது அழிந்து போகும் அல்லவா. அதற்கு பதிலாக அதனை நீங்கள் பராமரிக்கும் (maintain) அழகில் அந்த அழகே உங்களிடம் மயங்கி போகட்டுமே !

முகத்திற்கு முல்தானி மெட்டி, கண்களுக்கு பன்னீர் பஞ்சு, உதடுகளுக்கு கிளிசரின், கை கால்களுக்கு பாசிப்பயறு என்று நாம் பார்த்து பார்த்து சேர்த்து வைக்கிற அழகை அப்படியே அழகாகவே இருக்கும்படி பார்த்து கொள்வது பற்றிய சில குறிப்புகள் பார்க்கலாம்.

  • தூங்கி எழுந்த உடன் நீங்கள் பொதுவாக ப்ரஷ் செய்து லேசாக தண்ணீரை முகத்தில் தடவி கொள்வீர்கள். அதுதான் முகம் கழுவுதல் என்பீர்கள். அதாவது உங்கள் உறக்கத்தை கலைக்கும் அந்த முகம் கழுவலை இனி இப்படி செய்து பாருங்கள்.

  • ஒரு ஸ்பூன் காபி தூள் மற்றும் கொஞ்சம் பால் கலந்து பசை போல செய்து அதனை முகத்தில் தேய்த்து அப்படியே விட்டு விட்டு நீங்கள் காபி குடிக்க ஆரம்பியுங்கள். 15 நிமிடங்கள் கழித்து உங்கள் முகத்தை தண்ணீரால் கழுவுங்கள். இதனால் அழுக்குகளோடு சேர்ந்து நச்சுக்களும் வெளியே வந்து விடும்.

ADVERTISEMENT
  • அதே போல வீட்டை விட்டு வெளியே போய் வந்த உடன் நீங்கள் முகத்தை கழுவுங்கள். வெறும் நீரால் மட்டும். மாசுக்கள் முகத்தில் தங்குவதால்தான் மருக்கள் வருகின்றன. இப்படி செய்வதால் அழகு அப்படியே இருக்கும்.

  • ஈரப்பதம் எப்போதும் சருமத்தில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் முகம் வறண்டு தோல் பாளம் பாளமாக வெடிக்க தொடங்கும். அழகுக்காக மாய்ச்சுரைசிங் போடுகிறீர்கள் என்றாலும் தினமும் மூன்று முறையாவது முகம் கழுவுங்கள். அவ்வபோது பஞ்சை நீரில் அல்லது பன்னீரில் நனைத்து முகத்தை ஈரப்படுத்தி விட்டு அதன் பின்னர் மேக்கப் போடுங்கள்.

  • குளிக்கும்போது ஒரு சிலர் சோப்பு பயன்படுத்துவார்கள். ஒரு சிலர் பாடிவாஷ் பயன்படுத்துவார்கள். உண்மையில் பாசிப்பயறு மாவு உடலுக்கு நன்மை தரும். இறந்த செல்களை அகற்றி தேகத்தை முழுவதும் பொலிவாகவும் மிருதுவாகவும் மாற்றி கொடுக்கும்.

  • முடிந்தவரை அதீதமான ரசாயன பொருள்களை பயன்படுத்தி மேக்கப் போடாதீர்கள். இயற்கை பொருள்கள் பயன்படுத்துங்கள். அவசியம் ஏற்பட்டால் ஒழிய மேக்கப் இல்லாமல் எளிமையாக இருங்கள். அதுவும் ஒரு அழகு என்பது உங்களுக்கு தெரிய வரும். அதன்பின்னர் உங்கள் அழகு உங்களை விட்டு என்றும் நீங்காது.

ADVERTISEMENT

கொளுத்தும் வெயிலில் உங்கள் முகத்தை குளுகுளுன்னு வைத்துக்கொள்வதற்கான சூப்பர் டிப்ஸ்

முகத்தை பொலிவாக்க பார்லர் எதுக்கு? இருக்கவே இருக்கு வீட்டு முறை அழகுக் குறிப்பு!

படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ்

—                                                                                 

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.                                                             

07 Apr 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT