உங்க காதலருக்கு சும்மா இருக்கி அணைச்சு நச்சுனு ஒரு கிஸ் கொடுக்க ரெடியா!

உங்க காதலருக்கு சும்மா இருக்கி அணைச்சு நச்சுனு ஒரு கிஸ் கொடுக்க ரெடியா!

கிஸ்ஸிற்கு மயங்காத காதலர்களே இல்லை எனலாம். ஒற்றை முத்தத்திற்காக உயிரையே தியாகம் செய்த நம்மர்களும் இருக்கத்தான் செய்கிறார். அத்தனை பவர் இந்த கிஸ்ஸிற்கு. சக்தி வாய்ந்த காதல் வயப்படும் பிளையிங் கிஸ் கொடுப்பது எப்படி தெரியுமா? அதுவும் ஃபெர்பைக்ட் கிஸ் கொடுப்பது என்பதை கீழே பாருங்கள்.


ப்ளேயிங் கிஸ்
காதலி கொடுக்கும் ஒற்றை ப்ளேயிங் கிஸ்க்காக(kiss) கால் கடக்க ஒவ்வொரு காதலனும் காத்திருக்கான். அந்த ஒற்றை முத்தத்தில் தான் எத்தனை எத்தனை அர்த்தங்கள் எத்தனை எத்தனை காதல்கள் காற்றில் சுமந்த வண்ணம் செல்கின்றன. அப்படிப்பட்ட முத்தத்தை அழகாக நேர்த்தியாக கொடுக்க வேண்டாமா? போற போக்கில் தூக்கி போடுவதை போன்று செய்தால் உங்கள் காதலர் என்ன தான் உணர்வார். அதற்காகத்தான் சில டிப்ஸ்கள் இங்கே. அழகாக உங்கள் ப்ளேயிங் கிஸ்ஸை(kiss) காற்றில் பறக்க விடுவது எப்படி?


how-to-blow-a-kiss-perfectly003
கண்களால் கைது செய்
காதலர்களுக்கு இடையே கெமிஸ்ட்ரி என்பது மிகவும் முக்கியம். அதில் கண்கள் தான் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே விழிகளால் கைது செய்தல் வேண்டும். எனவே முத்தம் கொடுப்பதற்கு முன் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து பரவசம் அடைந்து கொள்ள வேண்டும்.


முத்தத்தை பறக்க விடுங்க
இப்பொழுது உங்கள் அழகான உள்ளங்கையை உதட்டின் அருகே கொண்டு சென்று குவிந்த உதடுகளை தாங்குங்கள். ரெம்ப தூரம் உள்ளங்கையை வைத்தால் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று உங்கள் காதலருக்கு தெரியாது. எனவே உள்ளங்கையை உதட்டின் அருகே கொண்டு சென்று கிஸ்(kiss) வையுங்கள்.
how-to-blow-a-kiss-perfectly004
ப்ளேயிங் கிஸ் (kiss)
ப்ளேயிங் கிஸ்ஸில்(kiss) இது தான் முக்கியமான பகுதி. அப்படியே உள்ளங்கையை உதட்டின் அருகில் இருந்து எடுத்து முத்தங்களை ஊதி உங்கள் காதலர் காத்திருக்கும் திசைக்கு பறக்க விடுங்கள். உள்ளங்கையை மெதுவாக எடுத்து தாடையில் வைத்து பறக்க விடுங்கள்.


புன்னகை
புன்னகை ஒன்றே போதும் உங்கள் காதலை அவருக்கு வெளிப்படுத்த. இதில் தான ஏகப்பட்ட ஏக்கங்கள், காதல் வலி, காதலரை காணாத வேதனைகள் என்று எல்லாவற்றையும் ஓரே நாளில் சொல்லி விட முடியும். எனவே உங்கள் காதலரை நோக்கி புன்னகைக்க மறக்காதீர்கள்.


கவனமாக இருக்க வேண்டியவை
மேலே குறிப்பிட்டுள்ள டிப்ஸ்கள் உங்கள் க்யூட் கிஸ்ஸூக்கு(kiss) உதவும். இருப்பினும் உங்களுக்கு ஏதுவாக இதை மாற்றி கொண்டு செயல்படலாம். முத்தம் கொடுக்கும் போது உங்கள் சுற்றுப்புறத்திலும் கவனம் தேவை. இது வேண்டாத பிரச்சினைகளை தவிர்க்க உதவும். உங்களுக்கும் உங்கள் காதலுக்கும் குறிப்பிட்ட இடைவெளி இருக்கும் போது இந்த ப்ளேயிங் கிஸ்ஸை(kiss) கொடுங்கள்.


how-to-blow-a-kiss-perfectly005
அவசர அவசரமாக கிஸ்(kiss) கொடுத்து விட்டு பேந்த பேந்த விழிக்காதீர்கள். எதிலும் நிதானம் அவசியம். ப்ளேயிங் கிஸ்(kiss) கொடுக்கும் போது பார்த்து கொடுப்பது முக்கியம். வேற யாரையாவது பார்த்துக் கொண்டு கொடுத்தீர்கள் என்றால் அவர்கள் தங்களுக்கு தான் கொடுக்கிறீர்கள் என்று நினைக்க நேரிடலாம். பிறகு எல்லாம் வேடிக்கை ஆகி விடும். அப்புறம் வம்பை விலை கொடுத்து வாங்கினது போல் ஆகிவிடும். எனவே உங்களுக்கும் உங்கள் காதலருக்கும் இடையே ஐ காண்டேக் முக்கியம். இந்த ப்ளேயிங் கிஸ்ஸைத்தான்(kiss) நம்ம செலிபிரிட்டிகளும் விரும்புகின்றனர் என்று சினிமா தகவல் கூறுகிறது. என்னங்க ஆயிரம் முத்தங்களுடன் ரெடி ஆகிட்டீங்களா உங்கள் காதலர் வருகிறார் பாருங்கள். அடி தூள் தான்!


மென்மையான பாதத்தை பெற வீட்டிலேயே இனி பெடிக்யூர் செய்யலாம்!


கோடையில் முடி கொட்டுவதை தடுக்கும் எளிய தெரபிகள்: வீட்டிலேயே செய்யலாம்!


மென்மையான பாதத்தை பெற வீட்டிலேயே இனி பெடிக்யூர் செய்யலாம்!


பட ஆதாரம் - gifskey, pexels, pixabay, Youtube


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo