பாஸ்போர்ட்டில் மளிகை லிஸ்ட் ?! - அப்ப பால் கணக்க எதுல எழுதிருப்பாங்க..?!

பாஸ்போர்ட்டில் மளிகை லிஸ்ட் ?! - அப்ப பால் கணக்க எதுல எழுதிருப்பாங்க..?!

இந்தியாவிற்கென்றே சில தனிப்பட்ட டிசைன்கள் உண்டு.கோவிலில் செருப்பு தொலைந்து போகாமல் இருக்க பூட்டு போட்டு போகும் ஆட்கள் முதல் பாலிதீன் பைகளை சேர்க்க இன்னொரு பாலிதீன் பைகள் உபயோகிப்பது வரை பல்வேறு விதமான விஷயங்களில் ஒரு சிலர் சீரியஸாக காமெடி செய்வார்கள்.


ஏற்கனவே ரேஷன் கார்ட் விஷயங்களை பாஸ்போர்ட்டில் (passport) பிரிண்ட் செய்த விவேக் காமெடியை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். நிஜமாகவே அப்படி ஒரு விஷயத்தை நடத்தியிருக்கிறார் ஒரு இந்திய மனைவி!இப்படி ஒரு கணவன் செய்த தப்புதான் இன்று வாட்சப் முழுக்க வைரலாகி வருகிறது!


பொதுவாக நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் ஒரு சிலர் கிடைத்த காகிதங்களில் எல்லாம் போன் நம்பர் குறித்து வைப்பார்கள். அதன்பின் அவற்றை தூக்கியெறிய விடமாட்டார்கள்.


இங்கு ஒரு மனைவி தனது கணவனின் பாஸ்போர்ட்டில் மளிகை கடை லிஸ்ட் மற்றும் தொலைபேசி எண்களை குறித்து வைத்திருக்கிறார். வாட்சப்பில் தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோ அவரது மகனால் எடுக்கப்பட்டது.


நல்லவேளையாக அது அவரது கணவனின் பழைய பாஸ்போர்ட் என்றாலும் அதில் போன் நம்பர்கள் மட்டும் குறித்து வைக்காமல் பின்புறத்தில் மளிகை லிஸ்டும் எழுதி இருக்கிறார் இந்த அம்மணி.அப்போ பால் கணக்கு எதுல எழுதுவாங்க எனும் உங்கள் மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்குது பாஸ்! அதுக்குதான் இருக்கவே இருக்கே பேங்க் பாஸ்புக்!


படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் ட்விட்டர்


அரசியலுக்கு வந்து அஞ்சே வருஷத்துல இவ்வளவு கோடி சொத்தா ! அம்மாடியோவ் ஹேமமாலினி !


நீதா அம்பானி மருமகளுக்கு 300 கோடி மதிப்புள்ள நெக்லஸ் பரிசு? - கூடுதல் தகவல்கள் உள்ளே!


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.