logo
ADVERTISEMENT
home / Bigg Boss
பிக் பாஸ் வீட்ல விசேஷங்க !

பிக் பாஸ் வீட்ல விசேஷங்க !

தமிழ்நாட்டு மக்கள் தங்கள் சொந்த பிரச்னைகளை மறக்க பயன்படுத்தும் தொலைக்காட்சியில் விஜய் டிவியின் பிக் பாஸ் மிக பிரபலம். (Biggboss)

முதல் சீசன் ஓவியாவின் உண்மைத்தன்மையால் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் வெற்றி அடைந்தது. அதே போலவே ஓவியாவை பாதி நிகழ்வில் விலக்கி விட்ட சாபத்தில் இருந்த ஆரவ்வையே மக்கள் ஓட்டு போட்டு வெற்றியாளர் ஆக்கினார்கள்.

அதன் பின்னர் நடந்த இரண்டாவது சீசன் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. பாதி நாட்களுக்கு மேல் போட்டியாளர்கள் மிக கவனமாக நடந்து கொள்கிறேன் என்று போர் அடித்தார்கள். எதை பற்றியும் கவலைப்படாத மகத் யாஷிகா ஈர்ப்புகள் ஐஸ்வர்யாவின் ஆத்திரங்கள் பாலாஜியின் பம்மல்கள் என எல்லாமே பார்ப்பவரை முகம் சுளிக்க வைத்தாலும் கமலின் நடுநிலைத்தன்மையாலும் இறுதி நேர சுவாரஸ்யங்களாலும் நிகழ்ச்சி களை கட்டியது. ரித்விகா வெற்றியாளர் ஆனார்.

இப்படி சுவாரஸ்யங்களை தந்த பிக் பாஸ் வீட்டில் சந்தோஷ செய்திகள் நடந்திருக்கின்றன. போட்டியாளர்களில் நிறைய பேருக்கு வாய்ப்புகள் கிடைத்து உழைத்து கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலருக்கோ வாழ்க்கையில் செட்டிலாகும் வாய்ப்பு கிடைத்து அதனை செவ்வனே செய்து கொண்டிருக்கிறார்கள்.

ADVERTISEMENT

பிக் பாஸை இயக்கும் பெண் பாஸ் ! யாரும் அறிந்திராத பிக் பாஸ் நிகழ்ச்சியின் மறுபக்கம் !

pixabay youtube

முதல் சீசன் போட்டியாளர்களில் நமீதாவின் திருமணம் நடந்து இருக்கிறது. இப்போது மீண்டும் பிக் பாஸ் வீட்டில் சில சந்தோஷ விழாக்கள் நடந்திருக்கின்றன.

ADVERTISEMENT

பிக் பாஸ் குடும்பத்தின் சந்தோஷ தருணங்களாக இப்போது இரண்டு விஷயங்கள் நடந்திருக்கின்றன. முதல் சீசன் போட்டியாளர் சுஜா வருணி காதலர் சிவாஜி ராவை கைபிடித்து தற்சமயம் வளைகாப்பு முடிந்திருக்கிறது. இரண்டாவது சீசன் போட்டியாளர் RJ வைஷ்ணவி நேற்று திடீரென முன்னறிவிப்பின்றி எளிமையான முறையில் தனது பைலட் காதலரை திருமணம் செய்திருக்கிறார்.

இரண்டு பேருமே வித்யாசமான விமர்சனங்களை சந்தித்தவர்கள் தான். சுஜா வருணி ஆரம்பத்தில் அரைகுறை ஆடைகள் அணிந்திருந்து வையாபுரியின் அவச்சொல்லிற்கு ஆளானார். அதன்பின்னர் அத்தான் பார்ப்பதை அறிந்து உடைகளில் நேர்த்தியை கொண்டு வந்தார். ஐஸ்வர்யா தத்தாவிற்கு பிறகு கடுமையாக விமர்சிக்கப்பட்டவர் வைஷ்ணவி. ஆனாலும் தனது தைரியத்தால் அனைத்தையும் கடந்தார்.

ஆல்யா மானஸா வா இது ! அடையாளமே தெரியலை! ஆல்யாவின் அபூர்வ புகைப்படம் !

ADVERTISEMENT

pixabay youtube

இவர்கள் இருவரில் முன்னதாக சுஜாவின் திருமணம் நடந்தது. நடிகர் சிவாஜி குடும்பத்தின் மருமகள் ஆனார். கர்ப்பமாக இருந்த அவருக்கு சமீபத்தில் வளைகாப்பு நடந்து முடிந்தது. அது குறித்தும் தனது அத்தான் குறித்தும் மிகுந்த நன்றியோடு நீண்ட பதிவொன்றை இன்ஸ்டாக்ராமில் சமர்பித்திருக்கிறார்.

அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி முடியும் முன்பே வைஷ்ணவி தனது காதலரை திடீர் திருமணம் செய்த விஷயம் வைரலாகி இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் இருக்கும் பைலட் ஆன அஞ்சான் என்பவரை வைஷ்ணவி மூன்று வருடங்களாக காதலித்து நேற்று மணமுடித்திருக்கிறார்.

தனக்காக மட்டுமே வாழ்ந்த அம்மா.. மறுமணம் செய்து வைத்த மகன்.. வைரலாகிறது பேரன்பின் பெருங்கதை

ADVERTISEMENT

pixabay youtube

ஆடம்பரங்கள் இல்லாமல் எளிமையான முறையில் தங்கள் திருமணத்தை இந்த ஜோடி பெரியவர்கள் ஆசியுடன் நடத்தி கொண்டதால் சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிகிறது.

இதனிடையில் மஹத் பிராச்சி நிச்சயதார்த்தம் நடந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். ஐஸ்வர்யா தத்தா காதலில் விழுந்திருக்கிறார். யாரும் எதிர்பாராவிதமாக பாலாஜி நித்யா ஜோடியின் வாழ்க்கை திசை மாறியது.

ADVERTISEMENT

திருமண வாழ்வை அற்புதமான அதிசயங்கள் நிறைந்த பயணமாக மாற்ற உங்களுக்கான சில உதவிகள் !

pixabay youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

ADVERTISEMENT

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன                               

தாலி இல்லை நகைகள் இல்லை.. பாட்டியின் புடவை கட்டி வைஷ்ணவி நடத்திய வாவ் திருமணம் ! 

15 Jun 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT